அவல நகைச்சுவையின் உச்சம் - அமர்பாரி டோமர்பாரி நக்ஸல்பாரி
குட்ரீட்ஸ் |
அமர் பாரி, டோமர் பாரி
நக்ஸல்பாரி
கிராபிக் நாவல்
சுமித் குமார்
வடிவமைப்பு: ஷிகாந்த் சப்லானா
ஹாரிசன் புக்ஸ்
சத்தீஸ்கர், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உருவான நக்ஸல்பாரிகள் பற்றிய கதைதான். ஆனால் சொன்ன மொழியில்தான் அத்தனை காமெடியும் அரங்கேறுகிறது.
முழுக்க முழுக்க அரசியல் செய்திகளின் அடிப்படையில் உருவான கிராபிக் நூல். ஓவியர் பாலமுருகன் இது பற்றிக்கூறிய போது, ஓவியங்கள் முதிர்ச்சியாக அமையவில்லை என்று கூறினார். ஆனால் படிக்கும்போது நீங்கள் விஷயங்களை சற்று உணர்ந்து இருந்தால், அது ஒரு பெரிய பிரச்னையாகவே தெரியாது. அப்படி ஒரு காமெடியாக படங்களையும், கார்ட்டூன்களையும் இணைத்து காமிக்ஸ் புத்தகமாக மாற்றியிருக்கிறார் சுமித் குமார்.
ஸ்க்ரோல்.இன் |
அதிலும் இதில் காமெடி எப்படி உருவாகியிருக்கிறது என்றால், உண்மையில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆனால் அதனை சுமித் குமாரின் ஓவியங்களிலும் எழுத்துக்களிலும் பார்த்தால் சிரிக்காமல் கடக்க முடியாது. அப்படி ஒரு அவல நகைச்சுவை சுமித்துக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்கள்: பழங்குடிகளை சாரு மஜூம்தார்
உங்களுக்கு அநியாயம் நடக்கிறது எனத்தூண்டி நக்ஸல்களாக மாறத் தூண்டுவது, அடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள் தண்டகாரண்ய வனத்தில் நுழைந்து நக்ஸல்களை வேட்டையாடும் முயற்சியில் தற்கொலை செய்துகொள்வது.
மேற்சொன்ன இரண்டும் சீரியசான சம்பவங்கள். ஆனால் இதனை சுமித் தன் எழுத்துக்களாலும், தூரிகையாலும் 180 டிகிரிக்கு அப்படியே மாற்றிவிடுகிறார். பக பகவென சிரித்துவிட்டுத்தான் நீங்கள் வருத்தப்படுவீர்கள். அடடா தற்கொலை செய்த வீரர்களை சிரித்து அவமானப்படுத்திவிட்டோமோ? அல்லது சரியான குடிமகன்தானா என்று சந்தேகப்படுவீர்கள்.
இது இடதுசாரிகளை எதிர்க்கும் நூல், அரசியல்வாதிகளை துதிக்கிறதோ என நினைக்கவேண்டாம். அனைவரையும் வெட்டி பொலி போட்டு நம்மை சிரிக்க வைத்து நடந்த கொடூரங்களை ஆழமாக மனதில் பதிய வைக்கிறார் சுமித். நூலின் வெற்றியும் கூட அதுவேதான்.
-கோமாளிமேடை டீம்
நன்றி: ஓவியர் பாலமுருகன்