ரத்தசோகையால் வீழும் பெண்கள்
ரத்தசோகையில் தவிக்கும் பெண்கள்!
ஐந்தில் இரு பெண்கள் ரத்தசோகையில் தவிப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
ரத்தசோகை என்றால் உடலிலுள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது ஆகும். இதிலுள்ள ஹீமோகுளோபின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் உடலில் பரவ முக்கியக்காரணம்.
இப்பாதிப்பை முதலிலேயே கண்டறியாவிட்டால், பிரசவகால மரணங்களை தடுக்க முடியாது. அதோடு இதய நோய்கள் , நீரிழிவு பிரச்னைகளும் ஏற்படும்.
தமிழக அரசு மருத்துவமனையில் பதிவு செய்த கர்ப்பிணிகளுக்கு ரூ. 2ஆயிரம் வழங்குகிறது. அதோடு ஊட்டச்சத்து கிட்டும் உண்டு. நான்காவது மாதத்தில் அடுத்த தவணை ரூ.2 ஆயிரம் தருவதோடு, ஊட்டச்சத்து கிட்டும் வழங்குகிறது.
குழந்தை பிறக்கும்போதும் ரூ.4 ஆயிரம் தொகையோடு குழந்தைக்கான உதவி கிட்டும் வழங்கப்படுகிறது.
நன்றி: டைம்ஸ்