லேடீஸ் டெய்லரின் சில்மிஷங்கள்? காமெடி காப்பாற்றுகிறது.

Image result for fashion designer s/o ladies tailor






Image result for fashion designer s/o ladies tailor
mirchi 9





ஃபேஷன் டிசைனர் S/o லேடீஸ் டெய்லர்
இயக்கம் வம்சி
ஒளிப்பதிவு நாகேஷ் பானெல்
இசைமணிசர்மா


கோதாவரி ஆற்றுப்புறம் உள்ள கிரியேட்டிவ் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட் என்றால் என்ன புரிகிறது? அதேதான். சூப்பர் டெய்லர். பெண்கள் மிட்ஷாட், லாங் ஷாட், குளோசப் என கண்களால் பார்த்தே பெண்ணுக்கு உடை தைத்து அசத்துவது கோபாலத்தின்(சுமந்த் அஸ்வின்) ஸ்டைல்.

என்னதான் திறமையிருந்தாலும் கிராமத்தில் அதற்கென்ன மரியாதை இருக்கப்போகிறது? நானெல்லாம் அமெரிக்காவில் இருக்கவேண்டியன்டா பண்டு என நண்பனை இம்சிக்கிறார் கோபாலம். ஒருகட்டத்தில் ஜோசியரைப் பார்க்க, அவர் தொழிலில் ஜெயிக்க முடியுமோ இல்லையா பெண்கள் மேட்டரில் நீ கில்லி.மன்மத ரேகை உன்கையில் ஓடுது என உசுப்பிவிட கதை வேகமெடுக்கிறது.


Image result for fashion designer s/o ladies tailor
sulekha





கோபாலம், மன்மதரேகையை சோதிக்க நினைக்கிறார். காசுள்ள பார்ட்டி கிராமத்தில் யார் என டாப் 10 லிஸ்ட் போட அதில் அம்முலு (மானசா ஹிம்வர்ஷா)முதலில் வந்து நிற்கிறார். இருமுறை பாத்ரூமுக்கு போய் எட்டிப் பார்த்து, ஒருமுறை லேசர்லைட்டை முகத்தில் அடித்தால் வராதா லவ்வு நீங்களே சொல்லுங்கள்?

ஆனால் அதற்குப்பிறகு காவராஜூவின் சொந்தக்காரப் பெண் ராணி(மனாலி ரத்தோட்) வர, அவரை டிரஸ்ஸூக்கு அளவெடுக்கப் போகும்போது பார்த்து லவ்வாகிறார் கோபாலம். சும்மாயில்லை. பெண்ணை அம்மணக்கட்டையாகப் பார்த்துவிடுகிறார். என்ன படம் ஒரு மாதிரியாக போகிறதே என நினைக்கும்போதே கிளுகிளு பாட்டைப் போட்டுவிடுகிறார்கள்.

எப்போதெல்லாம் காமெடி, காதல் இன்றி படம் தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் மணி சர்மா, வாத்தியங்களை இசைக்க ரசிகர்கள் நாம் காப்பாற்றப்படுகிறோம். லோக ரட்சகனே மணிசர்மா நீ வாழ்க. இறுதியில் என்ஆர்ஐ லூசுப் பெண் மகாலட்சுமி(அனிசா அம்ப்ரோஸ்) என மூன்று பெண்களை ஷெட்யூல் போட்டு காதலிக்கிறார்.

காதலிப்பது வேண்டுமானால் ஆண்கள்,ஆனால் அதை ஒகே செய்தால் விவகாரம் பெண்களிடம் போய்விடும். அப்புறம், அதில் ஒரு துரும்பைக் கூட ஆண்கள் மாற்ற முடியாது. இதேதான் இங்கும் நடக்கிறது.

ஆனால் அனிசா, கோபாலத்தின் அம்மா நினைவுநாளுக்கு அனாதைகளுக்கு சோறு போட, காதல் வந்தே விட்டது ப்ரோ. கோபாலம் அனிசாவை லவ் பண்ணத் துடிக்க, பிற பெண்களும் கோபாலத்தின் மீது காதல் பிளஸ் காம வெறியில் இருக்க, பாடல்கள் சும்மா சூடு கிளப்புகின்றன.  ஆனால் சுளுக்குக்கு காலை நீவிவிட்டதுக்கெல்லாம் அனிசா, ட்ரீம் சாங் போட்டு காதலிப்பதெல்லாம் வம்சி சாரே எங்கேயோ போயிட்டிங்க. அத்தனைக்கும் வம்சி சொல்லுவது, என் படம் சிரிக்கத்தான் என. மோசமில்லை. நிம்மதியாக சிரிப்பதற்கான படமாக உருவாகி வந்துவிட்டது.

வம்சியின் இயக்கத்தில் நல்லவிஷயம், காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆவதுதான். எவ்வளவு முடியுமோ அவ்வளவு காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பாக முதல் சீனில் நம்மை பதற்றப்படுத்தும் காவராஜூ கேரக்டர் சீரியசா, காமெடி என்றே தெரியவில்லை. கோபாலத்தின் மாமா கேரக்டர் சூப்பர். பேச்சுவாக்கில் ஒருவரைப் பற்றி உண்மைகளை சொல்லி அவரை மாட்டிவிடும் வெகுளி கேரக்டர்.

காமெடி, மணி சர்மாவின் உற்சாக இசைக்காக படத்தைப் பார்க்கலாம். 

-கோமாளிமேடை டீம்


பிரபலமான இடுகைகள்