பாக். நம்மை தாக்க தேர்ந்தெடுத்துள்ள விமானம்



பாக். நம்மைத் தாக்கும் ஆயுதம்!
Pakistan and China are jointly producing the Chinese-designed JF-17 Thunder. Photo: AFP
சீனா மார்னிங் போஸ்ட்


பீஜிங் பாக்குடன் நட்பு பாராட்டி தன் வணிகப்பயன்களை உருவாக்கி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான். ரஷ்யாவின் மிக் விமானத்திற்கு பதிலடியாக, அமெரிக்காவின் எஃப் 16 மூலம் தாக்குதல் நடத்திய பாக். அரசு தற்போது அடுத்த தாக்குதலுக்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. ஆனால் இச்செய்தி வெளியானதும் சீனா தீர்க்கமாக மறுத்துள்ளது. 

ஜே.எஃப் 17 போர் விமானத்தை பாக். பயன்படுத்த உள்ளதாக வந்த செய்திதான் சீனாவை பதற்றப்படுத்தியுள்ளது. இந்திய அதிகாரிகள் கண்டெடுத்து வந்த விமானப்பகுதிகள் எஃப் 16 விமானத்தைச் சேர்ந்தவை. ஆனால் தாக்குதலுக்கு பயன்பட்டது. ஜேஎஃப் 17 விமானங்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் விமானத்துறை அதிகாரி பேட்டியளிக்க பரபரப்பு பற்றிக்கொண்டது. 

பாக். அரசு இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என அடம்பிடிக்க, இந்தியா ஒரு விமானம்தான் சுடப்பட்டது. அது மிக் பைசன் 21 என்ற விமானம் என ஒப்புக்கொண்டது. 

சீனாவின் விமானம் இதற்கு பயன்பட்டது என்பது உறுதியானால், 
செங்க்டு ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன்(CAC) தயாரித்த  ஜேஎஃப் -17, முதன்முதலில்  வெற்றிகரமாக தன் பயணத்தை தொடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம். 


பாக்கிடமிருந்து ஜேஎஃப் 17 விமானங்களை வாங்கி மியான்மர், நைஜீரிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. தன்னுடைய இடையீட்டை பற்றி கேள்வி எழும்போது, இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும் என சீனா மையமாக பேசி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

நன்றி: சீனா மார்னிங் போஸ்ட்

பிரபலமான இடுகைகள்