இணையத்தின் வயது 30!


wired/tim berners lee




இணையத்தின் வயது 30 


இணையம் தோன்றி முப்பதாண்டுகள் ஆகிறது. இதன் பிரம்மா டிம் பெர்னர்ஸ் லீ. இன்று உலகின் பாதி வாழ்வது இணையத்தில்தான். இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இணையம் என்பது பலரும் கண்டுகொள்ளாத பலருக்கும் அவர்களது தரப்பைச் சொல்வதற்கான வாய்ப்பாக உள்ளது. அதேசமயம் இதனை சுயநலனாக பயன்படுத்தி லாபம் பார்க்கும் நெட்வொர்க்கும் வளர்ந்து வருகிறது. இது நிச்சயம் இணையத்தின் தோல்வி அல்ல என்பது நிச்சயம்.

இணையத்தை சீரழிப்பது இவைதான்.


இணையத்தில் தீவிரவாதம், வெறுப்பு பரப்பும் பதிவுகள், க்ரைம் செயல்பாடுகள், அரசு பயங்கரவாதம் சைபரிலும் பரவத் தொடங்கிவிட்டது.

விளம்பர வருவாய்க்காக பயனர்களின் அந்தரங்கத்தை உளவறியும்  வாய்ப்பை பல்வேறு நிறுவனங்களும் செய்யத் தயங்குவதில்லை. இலவசம் என்று கூறி சேவையை பயன்படுத்த அழைக்கும் நிறுவனங்கள் இதையே செய்து காசு பார்க்கின்றன.


இணையம் மாசுபடாமல் இருக்க அதனைப் பாதுகாப்பது நமது கடமை. அதன் சுதந்திரம், தனித்துவத்தை பாதுகாப்பது நமது கையில் உள்ளது.




பிரபலமான இடுகைகள்