இடுகைகள்

கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆஸ்கர் வைல்ட் தி பிக்சர் ஆப் டோரியன் கிரே

# ஆஸ்கர் வைல்டின் 《தி பிக்சர் ஆஃப் டோரியன் கிரே》 — தமிழில் மொழிபெயர்ப்பு ## முன்னுரை (சில பகுதிகள்) கலைஞன் அழகிய பொருட்களை உருவாக்குபவன். கலையை வெளிப்படுத்தி, கலைஞனை மறைப்பதே கலையின் நோக்கம். விமர்சகன் என்பவன் அழகிய பொருட்கள் மீதான தன் உணர்வுகளை வேறொரு வடிவத்தில் அல்லது புதிய பொருளில் மாற்றுபவன். உயர்ந்த விமர்சனமும் தாழ்ந்த விமர்சனமும் ஒரு வகையான தன் வரலாறே. அழகிய பொருட்களில் அசிங்கமான பொருளைக் காண்பவன் கெட்டவன், மேலும் அவனிடம் எந்த கவர்ச்சியும் இல்லை. இது ஒரு குற்றம். அழகிய பொருட்களில் அழகான பொருளைக் காண்பவன் பண்பட்டவன். அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு அழகிய பொருட்கள் அழகை மட்டுமே குறிக்கின்றன. புத்தகங்களில் நல்லொழுக்கமும் தீயொழுக்கமும் இல்லை. புத்தகங்களில் நல்ல முறையில் எழுதப்பட்டவை, மோசமாக எழுதப்பட்டவை என்றே பிரிவு. அவ்வளவுதான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் யதார்த்தவாதத்தின் மீதான வெறுப்பு, கண்ணாடியில் தன் முகத்தைக் காணும் காலிபனின் கோபம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் காதல் இலக்கியத்தின் மீதான வெறுப்பு, கண்ணாடியில் தன் முகத்தைக் கா...

நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன்

  நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் பொதுவாக இப்படியான நூல்களை எழுத்தாளர்கள் எழுதுவது அரிது. எழுதினால் நிறைய வசைகளே வீடு தேடி வரும். பரவாயில்லை என எழுத்தாளர் ஜெயமோகன் துணிந்து எழுதியிருப்பார் போல. நூலை வாசித்தாலே நீங்கள் அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.  தன்னுடைய ரசனை அடிப்படையில் ஜெயமோகன் வாசித்த பல்வேறு எழுத்தாளர்களை வகைமைபடுத்தி நூல்களை விமர்சித்து எழுதியுள்ளார். பெரும்பாலும் இடதுசாரிகளுக்கு இலக்கியப் பரப்பில் பெரிய இடம் இல்லை. இப்படி அவர்களது படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது அவர்களுக்கு கோபத்தை உருவாக்ககூடும். ஆனால், நூலை வாசிக்க வாசிக்க ஜெயமோகன் அவர்களின் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பு நம்மை முற்றாக ஆட்கொள்கிறது.  நவீன தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்,இலக்கிய வாசிப்புக்கு வரும் வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த நூலும் அதேபோல இலக்கியத்தை வகைமை பிரித்து எப்படியான நூல்கள் இங்குள்ளன. அதிலுள்ள பல்வேறு இசங்கள் என்னென்ன என விளக்கியுள்ளது. இதை தெரிந்துகொண்டவர்கள் அதற்கேற்ப நூல்களை எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து நூல்களை வாசித்துக்கொள்ளலாம். இதனால் தேவ...

காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா? காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி ...

நான் யார் என்ற கேள்வியை எழுப்புவதுதான் கலை! - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

படம்
  ஸ்டீபன் ஸ்பீல்பர்க், திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் திரைப்பட இயக்குநர். ஸ்டீபனுக்கு எழுபத்தாறு வயதாகிறது. ஜாஸ்   பாகங்ள், சேவிங் பிரைவேட் ரியான், மைனாரிட்டி ரிப்போர்ட், ஈ.டி எக்ஸ்ட்ரா டெரஸ்டெரியல், ஷிண்ட்லர் லிஸ்ட் ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய தயாரித்த படங்களின் வணிக லாபம் 38.7 பில்லியன் டாலர்கள்.   சினிமாவின் சக்தியை எப்போது உணர்ந்தீர்கள்? இளமையிலேயே சினிமாவின் சக்தியை உணர்ந்தேன். திரைப்படங்களை பார்ப்பதன் வழியாக என்னுடைய பெற்றோருடனான உறவும் கூட மாறியது. குறிப்பாக என்னுடைய அம்மாவினுடைய உறவு. அவர், அப்பாவைக் கடந்து இன்னொருவரை காதலிப்பதை அறிந்தபிறகு, அவரை நான் என்னுடைய அம்மாவாக கருதவில்லை. ஒரு மனிதராக அவரை அனைத்து பலவீனங்களும் கொண்டவராக என்னை நானே பார்ப்பது போல பார்த்தேன். பத்தாண்டுகளுக்கு   எனது அம்மாவை,   அவராகவே கருதிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தது குடும்பத்தில் வேறு எவரையும் விட அவரை நெருக்கமானவராக உணரச் செய்தது. உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய சுயசரிதை படங்களை எடுக்க நினைத்துள்ளீர்களா? எனது அம்மா, எப்போது திரைப்பட...

சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மனிடமிருந்து ரத்தம் சிந்தாமல் காஞ்சியை மீட்கும் நந்திவர்மன்! - சமுத்திரகோஷம் - உதயணன்

படம்
  எழுத்தாளர் உதயணன் சமுத்திர கோஷம் உதயணன் வைதேகி பதிப்பகம் விலை ரூ.110 பல்லவ மல்லன் நந்திவர்மன், பாண்டியர்களோடு எல்லையில் போரிடும்போது ஜென்ம எதிரியான சாளுக்கிய அரசு, பின்புறமாக வந்து மன்னன் இல்லாத காஞ்சி கோட்டையை சூழ்ச்சியாக கைப்பற்றுகிறது. பாண்டியர்களை வென்ற நந்திவர்மன், திரும்பி வந்து தனது பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியை எப்படி கைப்பற்றுகிறான் என்பதே கதை. இந்த சரித்திர நாவலில் கல்வெட்டுகளின் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள தகவல்படி, நந்திவர்மன் இல்லாத காலகட்டத்தில் சாளுக்கியர்கள் காஞ்சியை தங்கள் வசமாக்குகிறார்கள். பிறிதொரு காலகட்டத்தில் சாளுக்கியர்களிடமிருந்து அதை நந்திவர்மன் மீட்கிறான். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.   அந்த இடத்தை பயன்படுத்தி நாவலை எழுத்தாளர் உதயணன் எழுதியிருக்கிறார். நாவலில் பராக்கிரம யுத்தங்கள், ஒற்றைக்கு ஒற்றை என சண்டைகள் ஏதும் கிடையாது. அனைத்துமே சூழ்ச்சி, தந்திரம் என மூளை விளையாட்டுகள்தான் நிறைந்திருக்கின்றன. நந்திவர்மன் கதையில் வரவே அதிக பக்கங்களை நீங்கள் தாண்டவேண்டும். நந்திவர்மனை பிழையில்லாத வீரனாக எழுத...

சாதாரண டைப்ரைட்டரில் ஏஐயை இணைத்தால்.... தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் சஞ்சீவ்

படம்
  இப்போது எல்லோருமே சாட் ஜிபிடி, அதானி பங்கு, மோசடி, வாழ்க்கை, எதிர்காலம், வேலை போய்விடுவோமோ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சாட் ஜிபிடி சொல்லும் பதில்களில் உள்ள சரி தவறு என்பதைப் பற்றி நாமும் விவாதங்களை செய்யப்போவதில்லை. பிங் தன்னுடைய தேடுதல் தளத்தில் சாட் ஜிபிடியை இணைத்துள்ளது. அதுபோல ஏஐயை வேறு ஏதாவது சாதனங்களில் இணைக்க முடிந்தால் எப்படியிருக்கும்? யோசித்ததோடு அதை தனது திறமை மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இளைஞரான அரவிந்த் சஞ்சீவ். ‘’ஏஐ யைப் பயன்படுத்தி சோதனைகளை செய்வது, மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான உறவை மேம்படுத்தும்’’ என்கிறார். இவர், இ காமர்ஸ் தளத்தில் வாங்கிய சாதாரண டைப்ரைட்டரை ஏஐ ஆற்றல் கொண்டதாக மாற்றியிருக்கிறார். இதற்கென சில மாறுதல்களை எந்திரத்தில் செய்திருக்கிறார்.   இந்த எந்திரம், ஓபன் ஏஐயின் சாட் ஜிபிடி 3 மாடலில் இயங்குகிறது. அரவிந்த் பயன்படுத்துவது, எண்பதில் வெளியான பிரதர்ஸ் நிறுவனத்தின் டைப்ரைட்டர். சாதாரண டைப்ரைட்டரில் எப்படி ஏஐயை இணைக்கும் யோசனை வந்தது? எல்லாம் ஒரு கலைதாகம்தான் அப்படி ஒரு திசை நோக்கி செலுத்தியிருக்கிறத...

கூத்துக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் மருதம் கலைவிழா! - விழுப்புரத்தில் புதிய முயற்சி

படம்
  புதிய தலைமுறையினருக்கான மருதம் கலைவிழா பொங்கல் என்றால் பலருக்கும் தனியார் தொலைக்காட்சியில் போடும் சினிமாக்களைப் பார்ப்பதும், இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதிலும் பொழுது கழியும். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை வரவைத்து மருதம் விழாவை இருநாட்கள் நடத்துகிறார் ஏ கார்த்திகேயன் என்ற சமூக செயல்பாட்டாளர். ‘’இன்று இளைஞர்கள் பொங்கல் போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போனில் அல்லது டிவி முன்னே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே 15-16 என இரு நாட்களில் நாங்கள் மருதம் விழாவை நடத்த தொடங்கினோம்’’ என்றார் கார்த்திகேயன். இவர் தனது இளம் வயதில் புரட்சிகர இயக்கங்களில் இயங்கி வந்தவர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் தெற்கு ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்தக விற்பனை நிலையம் ஒன்று. கலைப்பொருட்களின் அரங்கு ஆகியவை இடம்பெற்றிருந்தது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பறை, தெருக்கூத்து ஆகியவற்றை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் நடத்துகிறார்கள். மருதம் விழாவில் சமூக செயல்பாட்டாளர்களை கௌரவிக்கும் பணியும் நடைபெறுகிறது...

வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்தால் ... உல்லாசம் - ஷான் நிகாம், பவித்ரா லட்சுமி

படம்
  உல்லாசம் மலையாளம் ஷான் நிகம், பவித்ரா லட்சுமி லட்சியத்தைக் கொண்ட துயரங்களா, இலக்கைப் பற்றி கவலைப்படாத மகிழ்ச்சியா என இரு வேறுபட்ட விஷயங்களைப் பற்றி பேச முயல்கிற படம்தான் உல்லாசம். ஹாரி மேனன் என்ற இளைஞரும், யாரிடமும் அதிகமாக பேசாத கர்ப்பிணிகளைக் கண்டால் மட்டும் மனம் பதைபதைக்கிற இளம்பெண்ணும் ஊட்டியில் சந்திக்கிறார்கள். மோதல் தொடங்கினால் காதலாகத் தானே மாற வேண்டும். அந்த வகையில் காதல் ஆகிறது. ஆனால் இதில் இளம்பெண், ஹாரி மீது நம்பிக்கை வராமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களையும் கூறுவதில்லை. ஹாரிக்கு அந்த பெண்ணை திரும்ப சந்திக்க ஆசையிருக்கிறது. மனதில் காதலும் இருக்கிறது. ஆனால், அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாது. ஹாரி கோவையிலும், இளம்பெண் கேரளாவுக்குமாக பிரிந்து செல்கிறார்கள். இருவரும் பிறகு சந்தித்தார்களா இல்லையா என்பதே கதை. ஹாரியாக ஷான் நிகம் நடித்திருக்கிறார். படம் நெடுக   ஷானின் இளமைத் துடிப்பும் நடிப்பும்தான் படத்தை காப்பாற்றுகிறது. இதில், நிமா என்ற பாத்திரத்தில் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். மாடல் போல தோற்றமிருந்தாலும் இந்த படத்திற்கு அவரின் பங்களிப்பு என்...

சீனாவின் கலைப்பொக்கிஷங்களை விற்கும் தொழிலதிபர் குழுவோடு மோதும் தடய அறிவியல் துறை - ட்ரூத் - சீன டிவி தொடர்

படம்
  ட்ரூத் - சீன  டிவி தொடர்  யூட்யூப்  தடய அறிவியல் பற்றிய நிறைய தொலைக்காட்சி தொடர்களை உலகமெங்கும் எடுத்து வருகிறார்கள். ட்ரூத் சீனாவில் ஒளிபரப்பாகிய டிவி தொடர்.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் லின் என்பவர், வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில் மரணமடைகிறார். அவர் மரணமடைவது காரோடு நீருக்குள் மூழ்கி என்பது அப்போதைக்கு பரபரப்பான குற்றச்செய்தியாகிறது. அதற்குப் பிறகு அப்பாவை வழிகாட்டியாக கொண்ட லின்னின் மகள், காவல்துறையில் சேர்ந்து தடய அறிவியல் துறையில் வேலை செய்கிறாள். பின்னாளில் அவர்கள் ஒரு வழக்கை துப்பறிய அதில் அவளது அப்பாவின் மரணமும் இடையில் ஒன்றையொன்று சந்திக்க கடந்தகால குற்றங்களை எப்படி தேடித்துருவி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே மையக் கதை.  பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு சார்ந்த கதை கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தாலும் இதில் சண்டைகள் ஏதும் கிடையாது. எப்படி தடய அறிவியல் மூலம் அரசு வழக்குரைஞர்க்கு வழக்கின் சாட்சியங்களை உறுதிப...

டைம் இதழில் இடம்பிடித்த கலைத்துறை பிரபலங்கள்! பீட்டே டேவிட்சன், குவிண்டா பிரன்சன், மிலா குனிஸ்

படம்
        குவின்டா ப்ரன்சன் கல்வியும் நகைச்சுவையும் quinta brunson குவின்டா ப்ரன்சனை வெறும் எழுத்தாளர் என்று கூறிவிடமுடியாது. அவர் தயாரிப்பாளர், நகைச்சுவைக் கலைஞர் என பொறுப்புகளை ஏற்று செய்தார். தான் செய்யும் வேலையை மாணவராக கற்றுக்கொள்ளவும், அதில் தேர்ந்த குருவாகவும் இருக்க முடிவது ஆச்சரியம்தான். டிவி தொடர்களில் நிறைய மாற்றங்களை தனது நடிப்பு, தயாரிப்பு மூலம் செய்து வருகிறார். அப்போட் எலிமெண்டரி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பொதுக்கல்வியில் உள்ள பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வரும் நகைச்சுவையில் பிரச்னைகளை பேசுவதுதான் குவின்டாவின் தனித்துவம். மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் தனது நிகழ்ச்சி மூலம் சிறப்பாக இணைத்து அறிய வேண்டுவனவற்றை அறிய வைப்பதுதான் குவிண்டாவின் புத்திசாலித்தனம். தடைகளை உடைத்து நகைச்சுவை மூலம் நிறைய கதவுகளை குவின்டா திறந்து வைத்துள்ளார். லெப்ரோன் ஜேம்ஸ் கூடைப்பந்தாட்ட வீரர் மிலா குனிஸ் ஆங்கிலப்பட நடிகை மிலா குனிஸ், அமெரிக்காவிற்கு தனது அம்மா, சகோதரருடன் வந்தவர். நடிகர் ஆஸ்டின் கட்சரை மணந்துகொண்டவர் மிலா குனிஸ். இருவருமே உக்ர...

பெண்கள் தங்களின் பலம் அனைத்தையும் தொழிலில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்! - டாக்டர் லீனா, நெயில் ஆர்டிஸ்டரி

படம்
  டாக்டர் லீனா நிறுவனர், நெய்ல் ஆர்டிஸ்டரி டாக்டர் லீனா  பெண்களில் கைகளில் உள்ள நகங்களில் கூட ஓவியங்களை இப்போது வரையத் தொடங்கிவிட்டார்கள். அப்படித்தான் நெய்ல் ஆர்டிஸ்டரி தொடங்கியது. இதனை தொடங்கிய லீனா துபாயைச் சேர்ந்தவர். பிறந்ததும், வளர்ந்ததும் துபாயில்தான். லீனாவின் பூர்விகம், தென்னிந்தியா என்பதால் இந்தியாவின் கலாசாரம் மீது இவருக்கு ஆர்வம் இருந்தது. இதன்  காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்பை படிக்க இந்தியாவுக்கு வந்தார். இங்கு பல் மருத்துவம் படித்தார்.  படித்துவிட்டு வேலை பார்க்க நினைத்தபோது அதை ஏன் எங்கேயோ போய் செய்யவேண்டும். இந்த நாட்டிலேயே செய்யலாம் என முடிவுக்கு வந்தார். அப்படித்தான் நகத்தில் ஓவியங்களை வரையும் தொழிலை தொடங்க முடிவெடுத்தார்.  முதலில் கேரளத்தின் கொச்சியில் தொழிலை தொடங்கியவர் பிறகு சென்னையில் ஒரு கிளையை திறந்துள்ளார். அவரிடம் பேசினோம்.  உங்களுக்கு எப்படி அழகுப்பொருட்கள் சார்ந்த துறையில் ஈடுபாடு வந்தது? இந்த துறை மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்பதை அடையாளம் கண்டுதான் தொழிலை தொடங்க முடிவு செய்தேன். நகம் என்பது சிறியதாக இருந்தாலும் ...