பெண்கள் தங்களின் பலம் அனைத்தையும் தொழிலில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்! - டாக்டர் லீனா, நெயில் ஆர்டிஸ்டரி

 










டாக்டர் லீனா
நிறுவனர், நெய்ல் ஆர்டிஸ்டரி


டாக்டர் லீனா 





பெண்களில் கைகளில் உள்ள நகங்களில் கூட ஓவியங்களை இப்போது வரையத் தொடங்கிவிட்டார்கள். அப்படித்தான் நெய்ல் ஆர்டிஸ்டரி தொடங்கியது. இதனை தொடங்கிய லீனா துபாயைச் சேர்ந்தவர். பிறந்ததும், வளர்ந்ததும் துபாயில்தான். லீனாவின் பூர்விகம், தென்னிந்தியா என்பதால் இந்தியாவின் கலாசாரம் மீது இவருக்கு ஆர்வம் இருந்தது. இதன்  காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்பை படிக்க இந்தியாவுக்கு வந்தார். இங்கு பல் மருத்துவம் படித்தார். 

படித்துவிட்டு வேலை பார்க்க நினைத்தபோது அதை ஏன் எங்கேயோ போய் செய்யவேண்டும். இந்த நாட்டிலேயே செய்யலாம் என முடிவுக்கு வந்தார். அப்படித்தான் நகத்தில் ஓவியங்களை வரையும் தொழிலை தொடங்க முடிவெடுத்தார். 

முதலில் கேரளத்தின் கொச்சியில் தொழிலை தொடங்கியவர் பிறகு சென்னையில் ஒரு கிளையை திறந்துள்ளார். அவரிடம் பேசினோம். 

உங்களுக்கு எப்படி அழகுப்பொருட்கள் சார்ந்த துறையில் ஈடுபாடு வந்தது?

இந்த துறை மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்பதை அடையாளம் கண்டுதான் தொழிலை தொடங்க முடிவு செய்தேன். நகம் என்பது சிறியதாக இருந்தாலும் மிகப்பெரியத தாக்கம் ஏற்படுத்துவது என நம்பினேன். நகம் அழுக்காக இருக்கிறது என மக்கள் எளிதாக விட்டுவிட மாட்டார்கள். முகம், தலைமுடி போல நகங்களையும் நீங்கள் பராமரிப்பது முக்கியம். அப்போதுதான் முக்கியமான சந்திப்புகளில் பிறரை எளிதாக கவர முடியும். அப்படித்தான் நெயில் ஆர்டிஸ்டரி உருவானது. 

தொழில்துறையில் சாதிப்பது தொடர்பாக உங்களுக்கு ரோல்மாடல் யாரேனும் உள்ளார்களா?

என்னுடைய கணவரைத்தான் கூறவேண்டும். அவர்தான் என்னுடைய பெரும் வலிமை. என்னைவிட என்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளவர் அவர்தான். என்னுடைய கனவை அடைவதற்கான பல்வேறு செயல்களை செய்து கொடுத்தார். நான் அவரை சந்தித்து நொடி முதல் இன்றுவரை என்னை ஆதரித்து வருகிறார். அவர் செய்யும் தொழிலில் காட்டும் நேர்மையும் விதிகளும் என்னை பெரிதும் பாதித்தன.  என்னை நான் முழுமையாக நம்பவேண்டும் என்று கூறியது அவர்தான். 

தொழிலில் நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்கள் ஏதேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தொழிலில் ஈடுபடும்போது என்னை சுதந்திரம் கொண்டவளாக உணர்கிறேன். நம்பிக்கையாகவும் இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் தினமும் கண்ணாடியில் தங்களை நம்பிக்கையுள்ளவர்களாக கருதி பார்க்கத் தொடங்கவேண்டும். அப்போதுதான் வெற்றி எனும் ஏணியில் அவர்களால் ஏற முடியும். நான் இப்படித்தான் தொழில்துறையில் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். 

பெண் தொழில்முனைவோர்களுக்கு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

தொழிலை வெற்றிகரமாக நடத்துவதில் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை முதலில் நம்பவேண்டும்.  நெகிழ்வுத்தன்மையுடனும் பொறுமையுடனும் இருப்பது முக்கியம். நேர்மறையான தன்மையுடன் தொழிலை செய்வது அவசியம். பெண்களுக்கென நிறைய சாதகமான அம்சங்கள் உள்ளன. அதை தொழிலில் பயன்படுத்திக்கொள்ள தெரிய வேண்டும். 

ஃபெமினா 2021











கருத்துகள்