காளான் வழியாக கல்லீரலை பாதிக்கும் நச்சு!
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உணவு நச்சில் பாக்டீரியாவின் பங்குண்டா? ஏன் இல்லாமல்... குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியா உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு கிராம் நச்சு மூலம் பதினான்கு மில்லியன் வயது வந்தோரை கொல்ல முடியும். நீரை நூற்று இருபது டிகிரி செல்சியசில் கொதிக்க வைத்தால் மட்டுமே பாக்டீரியாவை அழிக்க முடியும். உடல் செயலிழப்பு, வாந்தி பிறகு இறப்பு வந்து சேரும். எனவே கேன் உணவுகளை கவனமாக பார்த்து மேற்கு நாடுகளின் தர கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதா என பாருங்கள். உருளைக்கிழங்கை தாக்கும் முக்கியமான கிருமி எது? பைடோதோரா இன்ஃபெஸ்டான்ஸ் என்ற கிருமி, உருளைக்கிழங்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ஐரிஸ் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு இடம்பெற, இக்கிருமி முக்கிய காரணம். 1845-49 ஆகிய காலகட்டத்தில் மட்டும் கிருமி ஏற்படுத்திய பஞ்சத்தால் நான்கு லட்சம் மக்கள் பட்டினியால் இறந்துபோனார்கள். ஏராளமானோர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டனர். பூஞ்சைகளை விளக்கமாக வரைந்த குழந்தை நூல் எழுத்தாளர் யார்? பீட்ரிக்ஸ் பாட்டர், பூஞ்சைகளைப் பற்ற...