விண்வெளிப் பயணத்திற்கு காளான் அவசியம்!
நியூஸ் ஜங்ஷன்
ஆஹா!
பரிசு!
உத்தர்காண்ட் மாநில அரசு, ஹாக்கி அணியில் விளையாடிய தனது மாநில வீரரான வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி , வெண்கலத்தை வெல்லுவதற்கான போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை
தழுவியது. உத்தர்காண்ட் மாநில முதல்வர், புஷ்கர் தமி, ”வந்தனா இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்து சாதித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது” என்று கூறினார். உத்தர்காண்ட் அரசு, விரைவில் விளையாட்டுத்துறைக்கான புதிய கொள்கையை வெளியிடவிருக்கிறது.
https://www.newindianexpress.com/sport/olympics/2021/aug/07/uttarakhand-government-to-give-rs-25-lakh-to-hockey-player-vandana-katariya-2341252.html
உயிர்!
அகதிகளின் படகு விபத்துக்குள்ளாகி மீட்கப்பட்ட லிபியச் சிறுமி!
இடம் மத்திய தரைக்கடல் பகுதி
ஓஹோ!
சாதிப்பெயர் நீக்கம்!
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, தமிழ்நாடு பாடநூல் கழகம் பாடநூல்களிலுள்ள ஆளுமைகளின் சாதிப்பெயர்களை நீக்கும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இதன்படி , உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை உள்ளிட்டோரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. 1978ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், சாதி பெயர்களை பாட நூல்களிலிருந்து நீக்கும் உத்தரவை பிறப்பித்தார். ஆனால் அவை அன்றைய காலத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை.
https://www.thenewsminute.com/article/tamil-nadu-drops-caste-name-school-textbooks-153502
அச்சச்சோ!
பாதிப்பு!
வடகொரியாவில் பெய்த கனமழையால் அங்கு 1,100 வீடுகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட, நிலங்களிலும் தண்ணீர் வெள்ளம் போல செல்லும் தொலைக்காட்சி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் பொருளாதார தடை இருப்பதால், மழைவெள்ள சூழலில் வடகொரியாவில் தேவையான பொருட்களை பெறுவதில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் மழை பெய்யும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றன. வடக்கு ஹாம்கியாங் பகுதியில் 500 மி.மி. அளவு மழைபெய்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
https://www.reuters.com/business/environment/homes-flooded-fields-roads-damaged-heavy-rain-hits-north-korea-2021-08-06/
அப்படியா!
காளான் அவசியம்!
விண்வெளி பயணங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் காளான்களை விவசாயம், குடில்களை அமைக்கவும், குப்பைகள் உருவாவதை தடுக்கவும் பயன்படுத்தலாம் ஆராய்ச்சியாளர் பால் ஸ்டாமெட்ஸ் கூறியுள்ளார். நேரடியாக உணவை ராக்கெட்டுகளில் எடுத்துச் செல்வதை விட உணவு தயாரிப்பதற்கான ஆதாரப் பொருளைக் கொண்டு செல்வது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுபற்றிய ஆராய்ச்சியை நாசா அமைப்புடன் இணைந்து செய்துவருகிறார் பால் ஸ்டாமெட்ஸ்
https://www.scientificamerican.com/article/space-travels-most-surprising-future-ingredient-mushrooms/
Scientists from India, 3 other nations to conduct Covid genome sequencing
Indian
scientists, in partnership with their colleagues from China, Russia and Brazil, will carry out genomic sequencing of SARS-CoV-2 and studies on the epidemiology and mathematical modelling of the Covid-19 pandemic. This will help trace genetic mutations, recombinations as well as distribution of the virus and also make projections about the future of its spread, officials in the Ministry of Science and Technology said on Friday.
https://indianexpress.com/article/india/scientists-from-india-3-other-nations-to-conduct-covid-genome-sequencing-7442426/
கருத்துகள்
கருத்துரையிடுக