முரண்டு பிடித்த மாநிலங்களை இணைந்து இந்திய ஒன்றியமாக்கிய வல்லபாய் படேல்! - இந்தியா 75

 









இந்தியா 75

இந்தியா பிரிட்டிஷ் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது, 500 மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த மாநிலங்கள் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டிய தேவையிருந்தது. மாநிலங்களுக்கு முன்னர் இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அவை, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்று இரு நாடுகள். மாநிலங்கள் யாருடன் சேர்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம். உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தனது சாதுரியத்தால் பெரும்பாலான மாநிலங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தார். ஆனாலும் சிக்கல் வந்த மாநிலங்கள் இருந்தன அவற்றைப் பற்றி பார்ப்போம். 

ஹைதராபாத்

இந்தியா, சுதந்திரம் பெற்றபிறகு ஹைதராபாத் மாநிலம் அதனுடன் இணைய மறுத்தது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தபோது போலவே இறையாண்மை கொண்ட மாநிலமாக ஹைதராபாத் இருக்கவேண்டுமென அதன் நிஜாம் நினைத்தார். ஹைதராபாத் நிலப்பரப்பு ரீதியாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவிற்காக வாசல் என்பதால் இந்திய அரசு இதனை முக்கியமான மாநிலமாக பார்த்தது. 

இந்திய அரசு மாநிலங்களுக்க சட்டரீதியான ஆவணங்களை வழங்கி அதில் கையெழுத்து போட்டு இந்திய ஒன்றியத்துடன் சேர்த்து வந்தது. ஹைதராபாத் இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு சேர காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் அங்கு கம்யூனிஸ்டுகளில் வளர்ச்சி அதிகரித்து வந்தது. மதவாத கலவரங்களும் தொடங்கி நடந்து வந்தன. இதனால் இந்திய அரசு ஆபரேஷன் போலோ என்ற திட்டத்தை தொடங்கி ராணுவத்தை ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தது. 1948ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 

ஜூனாகத்

சுதந்திரத்திற்கு பிறகு ஜூனாகத்தின் நிஜாம், பாகிஸ்தானுடன் இணைய நினைத்தார். இந்த மாநிலத்தில் இந்துகள் பெரும்பான்மையாக இருந்தனர். இந்திய அரசு நிஜாமின் முடிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. இதனால் அங்கு மதரீதியான கலவரம் ஏற்படும் என நினைத்து தனது படைகளை ஜூனாகத் மாநிலத்தை சுற்றி நிறுத்தியது. மாநிலத்திற்கு கிடைத்து வந்த உணவுப்பொருட்களை நிறுத்தியது. இந்திய அரசின் முடிவால் நிஜாம், அங்கிருந்து தப்பியோடி பாகிஸ்தானிலுள்ள கராச்சிக்கு சென்றுவிட்டார்.  1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜூனாகத் மாநிலம் மக்களின் 90 சதவீத வாக்குடன் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 

இந்தூர்

இந்தூர் மாநிலம், ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே இந்திய ஒன்றியத்துடன் இணைய முடிவெடுத்துவிட்டது. ஆனால் மகாராஜா ஹோல்கர் இதற்கு சரி என்று சொன்னது இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான். 

அவுத்

உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பகுதி. 1857ஆம் ஆண்டு புரட்சிக்கும் பிறகு பிரிட்டிஷ் அரசில் இணைந்தது. வாஜித் அலி ஷாவின் பேரன் யூசுப் மிர்ஷா இதனை ஆட்சி செய்து வந்தார். ஆங்கிலேயர்கள் இவருக்கு இறையாண்மை மிக்க மாநில அந்தஸ்து தருவதாக கூறியிருந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு இந்த மாநிலமும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 

திருவனந்தபுரம்

1946ஆம் ஆண்டு திருவனந்தபுரம் திவான், பிரிட்டிஷ் ஆட்சி கலைந்தாலும் கூட மாநிலம் தனிச்சுதந்திரம் கொண்டதாக இருக்கவேண்டும் என நினைத்தார். இதற்காக பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தங்களையும் செய்ய நினைத்தார். முகமது அலி ஜின்னாவும் இதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அப்போது பார்த்து சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நபரால் திவான் மீது கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பிழைத்தவர், இரண்டில் ஒன்று என முடிவெடுத்து இந்தியாவுடன் சேர்ந்துவிட்டார். 

போபால்

போபாலைச் சேர்ந்த நிஜாம், முகமது அலி ஜின்னாவின் நண்பர். இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட மாநிலம் என்றாலும் கூட அவர் முஸ்லீம்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தியாவுடன்இணைய பயந்தார். முக்கியமான பிரச்னை, அவர் காங்கிரஸை தனது எதிரியாக பார்த்தார். சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா இடதுசாரி நாடாக மாறிவிடும் என்று பயந்துகொண்டிருந்தார். நிஜாமின் பயத்தைப் பார்த்து மௌண்ட்பேட்டன் கடிதம் ஒன்றை எழுதினார். பிறகு பிற மாநிலங்கள் இந்தியாவுடன் இணைவதையும் பார்த்து மனதை மாற்றிக்கொண்டார். இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு  பத்து நாட்கள் முழுதாக யோசித்து முடிவுக்கு வந்து இணைந்தார். 

ஜோத்பூர்

இந்த மாநிலத்தில் இந்துக்கள்தான் அதிகம் இருந்தனர். இந்து ஆட்சியாளர்தான் ஆண்டார். 1947ஆம் ஆண்டு ஜூலையில் பாகிஸ்தானுடன் சேரும்படி கேட்டபோது மறுத்துவிட்டார். இந்தியாவுடன் சேரும் முடிவுடன்தான் இருந்தார். ஆனால் இந்திய ஒன்றியத்துடன் ஜோத்பூர் சேருமா இல்லையா என்ற பதற்றம் நிலவியதால் எல்லைப்புற மாநிலங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த சர்தார் வல்லபாய் படேல், நீங்கள் அப்படி பாகிஸ்தானோடு இணைந்தால் மத ரீதியான கலவரங்களை சந்திக்கும்படி சூழ்நிலை இருக்கும் என எச்சரித்தார். இதனால் மன்னர், மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தார்

டைம்ஸ் ஆப் இந்தியா 





 



கருத்துகள்