இடுகைகள்

மேற்குவங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

படம்
          அமித்ஷா உள்துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே ? சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது . நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன ? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும் . உண்மை என்னவென்றால் , நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது . இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா ? அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான் . அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம் . விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம் .. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள் . விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது . அவர்களுடன் பேசினீர்களா ? நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம் . ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார் . என்ன செய்வது ? நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேச

மக்களுக்காக போராடி அன்பை வென்ற மேற்குவங்க பெண்மணி! - மம்தா பானர்ஜி

படம்
  தீதி மம்தா பானர்ஜி சுடாபா பால் பெங்குவின் வெளியீடு மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகளாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி முதல்வரான முதல் பெண் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது வாழ்க்கை சிறுவயதில் எப்படி இருந்தது என்பதை எளிமையான முறையில் எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூல் மம்தாவின் புகழ்பாடும் வகையைப் பின்பற்றவில்லை. மம்தா எழுதிய நூல், வேறு நூல்கள் பல்வேறு நூல்களைப் படித்து பல்வேறு தகவல்களை கோர்வையாக கொடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் எப்படி அதிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி காங்கிரஸ், இடதுசாரி கட்சியை எதிர்க்கட்சி இருக்கைக்கு தள்ளினார் என்பதோடு, மம்தா முதல்வர் இருக்கையில் இருந்தபோது செய்த தவறுகளையும் கூறியுள்ளார்.  மம்தா பானர்ஜியை மக்களுக்கான தலைவர் என எளிதாக கூறலாம். அனைத்து போராட்டங்களிலும் மக்களின் மீது காவலர்களின் தடி படும் முன்னர் இவரது உடலில் பட்டுவிடும். அந்தளவு மக்களுக்காக ஏராளமான போராட்டங்களை செய்துள்ளார். இதன் காரணமாக தலையில் அடிபட்டு அதன் விளைவாக  மம்தாவின் குணநலன்களே மாறிவிட்டன என்றும் கூறப்படுகிறது.  மம்தா பா

ஒரே நேரத்தில் மாநில அரசுகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம்தான்! - சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்

படம்
                சுனில் அரோரா தேர்தல் ஆணையர் மேற்கு வங்க தேர்தலுக்கு மத்திய அரசின் பாதுகாப்புபடையினரை மாநிலஅரசு அனுமதிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே ? எங்களுக்குத் தேவையானபாதுகாப்பு படையினரை பற்றி மத்திய அரசிடம் பேசி வருகிறோம் . இன்னும் எண்ணிக்கை முடிவாகவில்லை . இதுபற்றிய தகவலை இன்னும் மாநில அரசிடம் நாங்கள் பேசவில்லை . தேர்தல் பத்திரம் பற்றி உங்கள் கருத்து என்ன ? 2018 ஆம் ஆண்டு பாஜக தவிர பிற கட்சிகள் தேர்தலுக்கு செலவிடுவது பற்றிய புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது பற்றி கூறுங்கள் ? உச்சநீதிமன்றத்தில் நாங்கள் எங்கள் தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளோம் . தேர்தல் பத்திரம் என்பதை நாங்கள் வெளிப்படையானது என நம்புகிறோம் . இன்றுவரை அதே கருத்தில்தான் உள்ளோம் . பெருந்தொற்று காலத்தில் தேர்தல் செலவுகள் பற்றிய கவனம் தேவை . இதுதொடர்பாக ஹரிஷ்குமார் தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளோம் . இவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி . அவர்களுடைய அறிக்கை கிடைத்துவிட்டால் இதுதொடர்பாக விரைவில் முடிவெடுத்து விடலாம் . கோவிட் -19 காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேர்

மேற்குவங்கத்தில் மம்தாவை காப்பாற்றப் போகும் திட்டங்கள் என்னென்ன?

படம்
        முதல்வர் மம்தா   மேற்குவங்கத் தேர்தலுக்காக அங்கு பல்வேறு கட்சிகள் வாக்குகளைப் பெற போட்டா போட்டி போட்டு வருகி்ன்றன . முதல்வர் மம்தா அங்கு என்னென்ன திட்டங்களை தீட்டியிருக்கிறார் என்று பார்ப்போம் . கன்யாஶ்ரீ 13-21 வயது வரையிலான பெண்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ . 1000 வழங்கப்படுகிறது . பதினெட்டு வயதை எட்டிய பெண்களுக்கு ரூ .25000 நிதியுதவி வழங்கப்படுகிறது . இம்முறையில் அரசு 7 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது . இதில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றுள்ளனர் . காத்யா சதி மலிவு விலையில் அரசி வழங்கும் திட்டம் . ஒரு கிலோ அரிசி ரூ .2 க்கு வழங்கப்படுகிறது . இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி . கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன் பெறுகிறார்கள் . ஸ்வஸ்திய சதி ஆண்டுக்கு 1.5 முதல் 5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம் அரசு மக்களுக்கு வழங்குகிறது . நடப்பு ஆண்டில் இதற்கு 906 கோடி ரூபாய் செலவாகியுள்ளது . ஜெய்ஜோகர் அண்டு தபோசிலி பந்து ஆதி திராவிடர்கள் , பழங்குடியினருக்கு மாதம் ரூ . 1000 வழங்கப்படுகிறது . ஆண்