இடுகைகள்

நேரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விளம்பர இடைவேளை - ஆராபிரஸ் வெளியீடுகள்

படம்
 

சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  நேருவை மறக்கும் ஊடகங்கள் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும் . இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது . மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும் . ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது . நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன் . வெ . சாமிநாதசர்மா எழுதிய நூல் . நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார் . இந்த ஆண்டு நேருவின் 132 ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது . இந்துத்துவ அரசு தாக்குதல் , மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர் . சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர் . இந்து ஆங்கிலம் நாளிதழ் , தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது . அதைப் படித்தேன் . நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை . நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை . இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அ

காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

படம்
              காந்தியின் அகிம்சை , சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான் . இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார் . அதுதான் , நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை . காந்தி , வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர் . சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார் . அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார் . பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை . அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார் . அவை அனைத்துமே எளிமையான உணவுதான் . கோதுமை , சோளம் , சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார் . இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது ., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது .. உடனே அதை நிறுத்திவிட்டார் . ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை . எனவே , வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் தொடங்கினார் . ஆனால் பசுவின் பாலைப்ப

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை

நேருவுக்கும் சோவியத்திற்குமான உறவு! கடிதங்கள்- கதிரவன்

படம்
          நட்பா , பணமா ? அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் மெதுவாக செல்கின்றன . பாட நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்து கட்டுரைகளை எழுதுவது கடினமாக உள்ளது . அடிப்படையில் பொதுவான செய்திகளை எடுத்து எழுதுவது ஈஸி . கடந்த ஞாயிறு குங்குமம் தலைமை உதவி ஆசிரியரான சக்திவேல் சாரின் அறைக்குப் போக நினைத்தேன் . இதை செய்தியாக அவருக்கு போனில் அனுப்பியபோது , போனில் அழைத்து தான் இன்னொரு நண்பரைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டார் . எனவே , வேறு வழியில்லை . அறையில்தான் ஜாகை . மோகன் அண்ணா ஷேர் மார்க்கெட்டில் வெறியாக இருக்கிறார் . அவர் கேட்டதற்காக நட்பிற்காக எனது கையிருப்பில் உள்ள தொகையை இழக்கவிரும்பவில்லை . அவரிடம் நான் இப்போது பேசுவதில்லை . ட்ரெய்ன் டூ பூஷன் தென்கொரியப் படம் பார்த்தேன் . ஜோம்பி படம்தான் . படத்தில் வைரஸ் பற்றி பேசாமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உணர்வுகள் , கடமைகள் , பொறுப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள் . நன்றாக எடுத்திருக்கிறார்கள் . நேற்று இயர்போன் ஒன்றை புதிதாக வாங்கினேன் . பிலிப்ஸ் இயர்போன் வலது பக்கம் கேட்கிறது . ஆனால் இடது பக

இந்தியாவிலிருந்து காணாமல் போகும் நேரு! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  18.11.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும். இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது. மழை காரணமாக ஊரில் போகும். அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது. நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன். வெ.சாமிநாதசர்மா எழுதிய நூல். நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார். இந்த ஆண்டு நேருவின் 132ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது.  இந்துத்துவ அரசு காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர். இந்து தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதைப் படித்தேன். நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள் . கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை. நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை.  இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள். எனவே, உண்மை என்பது பின்னுக்குப் போய் பொய், வதந்திகள் முன்னுக்கு வந்து மேடையை அலங்கரிக்கத்

நேருவின் சோசலிச கொள்கையும், சோவியத் யூனியனும்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நேருவும், அவரின் சோவியத் சோசலிச உறவும்.  இன்று இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிர்வாக திறனின்மைக்கு கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். அவர் அக்காலத்தில் கடைபிடித்த கலப்பு பொருளாதாரம், சோசலிச கொள்கைகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்தும் இன்றைய கால கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில் நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை முழுமையாக அப்படியே அமல்படுத்தினாரா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.  சோவியத் யூனியன்தான் சோசலிச தலைமையகம். அங்கு 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, அதற்குப் பிறகு அங்கிருந்து உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பல்வேறு நாடுகளில் புரட்சிக்கான காரணங்களை தேடக் காரணமாக அமைந்தன. சோசலிசம் என்பது நாடுகளுக்கு ஏற்றது போல பல்வேறு வடிவங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு சீனா. அங்கும் சோசலிச கொள்கைகள் உள்ளன. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு சர்வாதிகாரம் செய்து வருகிறது.  ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அவர் பெரிதாக முக்கியமாக நினைக்கவில்லை. 1926-27 காலகட்டத்

ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

படம்
  நிரிபேந்திர மிஸ்ரா நிரிபேந்திர மிஸ்ரா தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம் புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா? நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது.  ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும