ஜவகர்லால் நேரு சொன்னவை....

 


ஜவகர்லால் நேரு சொன்னவை....


1.நான் மதவெறியை விரும்பாதவன். அது பலவீனமடைந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். வகுப்புவாதம் எந்த வடிவில் அல்லது உருவத்தில் வந்தாலும் அதையும் நான் விரும்பாதவன். 

2.எந்தக் கொடியைச் சுற்றி நீங்கள் திரண்டு நிற்கிறீர்களோ, நீங்கள் வணக்கம் செலுத்துகிறீர்களோ, அந்தக் கொடி எந்த சமூகத்தையும் சேர்ந்ததல்ல. இது தாய்நாட்டின் திருக்கொடி. 

3.நான் சோஷலிஸ்டு, ஒரு குடியரசுவாதி என்பதை மறைக்காமல் கூறவேண்டும். அரசர்கள், மன்னர்களைக் கொண்ட அமைப்பை அல்லது தொழில்துறை அரசர்களை உருவாக்குகின்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

4.பண்டைக்கால அரசர்களைக் காட்டிலும் தொழில் அரசர்கள் மக்களின் வாழ்க்கையையும் விதிகளையும் நிர்ணயிப்பதில் மிகவும் அதிகமான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்கார முறைகளையே அவர்கள் கடைபிடிக்கிறார்கள். 

5.சிறுபான்மையினருடைய பண்பாட்டிற்கும் மரபுகளுக்கும் ஆபத்து ஏற்படாது என்று நமது பேச்சு மற்றும் செயல்கள் மூலம் முழுமையாக உறுதியளிக்க வேண்டும் என்பதை மட்டும் நான் மீண்டும் வலியுறுத்துவேன்.

6. யாருடைய நன்மைக்காக தொழில் நடைபெறவேண்டும், யாருடைய நன்மைக்காக நிலத்தில் உணவுப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் என்பதை நாம் முடிவு செய்தாக வேண்டும்.

7. பண்பாட்டு ரீதியில், கல்வி முறை எங்கள் வேர்களை வெட்டிவிட்டது. எங்களைக் கட்டியிருக்கும் சங்கிலிகளை பாசத்துடன் தழுவுமாறு எங்கள் பயிற்சி பணிக்கின்றது. 

8. உலகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அறிவை மூடிப் பூட்டி வைத்திருப்பவர்கள். புதிய கருத்துகள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். 

9.மாற்றம் என்னும் சக்கரம் சுழல்கிறது. கீழே இருந்தவர்கள் மேலே வருகிறார்கள். மேலே உட்கார்ந்திருந்தவர்கள் கீழே இறங்குகிறார்கள். நம் நாடு முன்னேறவேண்டிய காலம் வந்துவிட்டது. 

10.நம் நாட்டிலுள்ள அசுத்தம், வறுமை, துன்பம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். ஏராளமானவர்களின் மனதில் படிந்திருக்கும் ஒட்டடையை நாம் இயன்றவரை சுத்தம் செய்யவேண்டும்.

11. மழைநீர் பூமியில் விழுந்து ஓடுகிறது. அதன் ஓட்டத்தைத் தடுத்தால் குட்டையாக தேங்கிவிடுகிறது. மனித வாழ்க்கையிலும் இது நடைபெறுகிறது. ஒரு நாட்டின் வாழ்க்கையிலும் இப்படி நடைபெறுகிறது. 

12. நாம் அஹிம்சை வழியைப் பின்பற்ற முடிவு செய்தாலும் சிலர் வேறு வழியைக் கடைபிடித்தார்கள். அவர்கள் நம் வீரமிக்க தோழர்கள். இந்த தோழர்களுடன் நமக்கு உடன்பாடு இல்லை என்பதால், நாங்கள் அவர்களைக் காட்டிலும் உயர்வானவர்கள் என்று கணநேரம் கூட சிந்திக்க வேண்டாம்.

13.ஆயுதங்களை உபயோகித்து போராடுவதற்கு நான் வெட்கப்படவில்லை. ஆனால், ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதனால் பலனுண்டா என்று நாம் சிந்திக்க வேண்டும். 

14. தான் மிகவும் நேசிக்கின்ற குழந்தைகளைக் கூட தூக்குமேடையிலிருந்து காப்பாற்ற இன்றைய இந்தியாவுக்கு சக்தியில்லை. 

15. பாரத மாதா வாழ்க - இந்திய மக்களைத்தான் நாம் வாழ்க என்று சொல்கிறோம். இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்கின்ற கோடிக்கணக்கணக்கான மக்களை வாழ்க என்று சொல்கிறோம். 


நன்றி 

ஜவஹர்லால் நேரு போராட்ட கால சிந்தனைகள் தொகுப்பு அர்ஜூன் தேவ், தமிழ் மொழிபெயர்ப்பு நா.தருமராஜன் என்பிடி இந்தியா.

photo -creative common license


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!