ஜிஎஸ்டி சந்திக்கும் சவால்கள் என்னென்ன?



ஜிஎஸ்டி சந்திக்கும் சவால்கள் என்னென்ன?




ஒரே நாடு ஒரே வரி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி. இன்று நாடு முழுக்க சுணக்கம் கண்டுள்ளது. அரசு பட்ஜெட்டில் எதிர்பார்த்தபடி வரிவருவாய் கிடைக்கவில்லை. ஜிஎஸ்டி வரியைக் கட்டுவதில் தொழில்முனைவோருக்கு ஏற்பட்ட குழம்பம்தான் இதற்கு முக்கியக் காரணம்.




பிராண்டுகள் இல்லாத பனீர், தேன், சானிடரி நாப்கின், கைத்தறி உடைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட வரி, மக்களின் எதிர்ப்புக்குள்ளானது. பின்னர் அவை வரிபட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. ஜிஎஸ்டி உருவான விதம் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.




2003 ஆம் ஆண்டு பொருளாதாரவியலாளரான விஜய் கேல்கர் கமிட்டியால், ஜிஎஸ்டி வரி பற்றிய கருத்து வெளியிடப்பட்டது.


2006 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி வரி பற்றிய கருத்தை வெளியிட்டார்.


2010 ஆம் ஆண்டு இவ்வரி அமலாகும் என்று கூறப்பட்டது.


2009 ஆம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கான செயற்பாடுகளைத் தொடங்கியது.


2011ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி மசோதா சட்டத்திருத்தமாக, சட்டம் 115படி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.


பின்னர் இதுபற்றி ஆராய நிதி அமைச்சகத்திற்கான நிதிக்குழுவிற்கு அனுப்பப்பட்டது.


2012 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து ஜிஎஸ்டி கமிட்டி ஒன்றை உருவாக்கினர்.


2013 ஆம் ஆண்டு கமிட்டி கூறிய பரிந்துரைகளை ஜிஎஸ்டி சட்டத்திருத்தத்தில் செய்தனர்.


2014-1016 காலகட்டங்களில் அரசு மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்து இறுதி செய்தது.


2017 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று ஜிஎஸ்டி சட்டத்திருத்தம், நாடெங்கும் அமல்படுத்தப்பட்டது.




”இந்த வரியை அமல்படுத்தியதால் எங்களின் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம். அரசு தன் வரியை 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக மாற்ற கோரி வருகிறோம். ஜிஎஸ்டியால் சிறு வணிகர்களே 5 ஆயிரத்திற்கும் அதிகமாக வரி கட்டவேண்டியுள்ளது” என்கிறார் மும்பை ஜவுளித்துரை சங்க செயலாளரான சம்பலால் போத்ரா.

மத்திய அரசு, நாடு முழுக்க ஜிஎஸ்டியை அமல்படுத்தி 27 மாதங்களாகின்றன. இதிலுள்ள குழப்பங்கள் தீர்க்கப்படாததால் விலை அதிகரித்து வரும் பெட்ரோல் பொருட்களையும், மின்சாரத்தையும் இதற்கு உள்ளடங்கலாக கொண்டு வர முடியவில்லை. மாநிலங்களின் வரிவருவாய் 14 சதவீதம் சரிந்தால், அதற்கும் மத்திய அரசு வரிச்சட்டப்படி இழப்பீடு வழங்கவேண்டும். நடப்பு ஆண்டின் ஜூன் - ஜூலை மாதத்திற்கு இம்முறையில் வழங்கவேண்டிய நிலுவைத் தொகை 27 ஆயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளது.




போலியான பில்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கத்தான் மத்திய அரசு கடும் முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் காரணமாகவே ஜிஎஸ்டி வருவாய் பெருமளவு குறைந்துவருகிறது. அனைத்து விதிகளுக்கும் மாற்றாக ஒற்றை வரியாக ஜிஎஸ்டி தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் ஏற்படும் பயன்கள் மக்களுக்கு கிடைக்காமல் போக காரணம் வணிகர்கள் வருவாயில் செய்யும் முறைகேடுகள்தான்.

அண்மையில் டில்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி வருவாய் மோசடி நடைபெற்றுள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் ஆகஸ்ட் மாதம் வரை சிறப்பாக இருந்தது. தற்போதுதான் வரி வருவாய் குறைந்துள்ளது. “சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி ஆகிய வரிகள் தொழில்முனைவோர்களை குழப்புகின்றன. தனிநபர் வரியிலும் ஒருவர் தவறுதலாக வரியைச் செலுத்திவிட்டால் அதனைத் திரும்ப பெறுவது கடினம்” என்கிறார் முன்னாள் வருவாய்த்துறை கமிஷனரான ஹர்தயால் சிங்.




அனைத்து பொருட்களுக்கும் ஒரே வகை வரி என்பது சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போது உள்ள வரி விகிதங்களை மூன்றாக குறைப்பது பலன் தர வாய்ப்புள்ளது என்கிறார் பொருளாதார ஆலோசனை கௌன்சில் தலைரவான பிபெக் டெப்ராய். ஜிஎஸ்டியை சரியாக மக்களுக்கு விழிப்புணர்வு செய்வது மட்டுமே இனி ஏற்படும் குழப்பங்களைப் போக்கும்.



















































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!