அதிகம் பயணம் செய்யாத நூல்களின் வழியாக உலகம் சுற்றிய தந்தையின் கதை! - மகனின் நினைவஞ்சலி

 அப்பாவின் லிஸ்ட் 


என்னுடைய அப்பா, எப்போதும் பட்டியலை உருவாக்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 539 நூல்களை வாசித்திருந்தார். ஞாயிறுதோறும் அவர் பார்த்த புக்நோட் நிகழ்ச்சியின் எபிசோடுகளை ஏழாண்டுகளாக குறிப்பு எடுத்து எழுதி வைத்திருந்தார். இந்த வகையில் 322 நிகழ்ச்சிகள் வருகின்றன. 


தினசரி செய்யவேண்டிய வேலைகள் பற்றியும், தனது சிறிய குளிர்பதனப் பெட்டியில் வாங்கி வைக்கவேண்டிய குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் பற்றியும் கூட பட்டியல் எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் இறந்துபோன அதிகாலை ஐந்து மணி வரைகூட படிக்கும் நாற்காலி அருகே இருந்து சிறிய நோட்டில் குறிப்புகளை எழுதி வைப்பதை கடைபிடித்து வந்தார். அவர் மறைந்தபிறகே அவருடைய பட்டியல் நோட்டுகளை அடையாளம் கண்டு எடுத்தேன். 


அப்பா, 1927ஆம் ஆண்டு பிறந்தவர். மசாசூசெட்சிலுள்ள லோவல் எனும் இடத்தில் பிறந்தவர். அப்பாவின் அப்பா, என்னுடைய தாத்தா, தோல் தொழிற்சாலையில் பணியாற்றியவர். அவருடைய கொள்ளுத்தாத்தா, அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறியவர். கம்பளி ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்பா, சாதுரியமான புத்தி கொண்டவர். தனது அப்பாவுடன் வேலை செய்து வந்தவர், லோவெல் பள்ளியில் தேர்ச்சி பெற்ற பிறகு பாஸ்டன் கல்லூரிக்கு படிக்கச் சென்றார். 1945ஆம் ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்தார். பிறகு திரும்பி வந்து பாஸ்டன் கல்லூரியில் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டமும், இயற்பியல் படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றார். 1951ஆம் ஆண்டு தனது முதல் வேலையை மேரிலேண்டில் உள்ள ஆய்வகம் ஒன்றில் சேர்ந்து செய்தார். ஆனால், அவருக்கு விரைவிலேயே வீடு திரும்பும் ஏக்கம் உருவாகிவிட வாட்டர்டவுன் ஆர்செனல் என்ற நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்பதைக் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டிருக்கிறார். 


1950ஆம் ஆண்டில், அப்பா போர்ட்ரான் கணினி மொழியில் வல்லுநராக இருந்தார். எம்ஐடியில் உள்ள லிங்கன் ஆய்வகத்தில் பணியாற்றி வந்தார். லோவெல்லில் இருந்த மனைவி ஐந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். பாஸ்டனின் புறநகர்ப் பகுதியில் குடியேறி குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைத்தார். லோவெல்லை விட்டு வெளியேறினாலும் தன்னை எளிய லோவெல் பகுதியைச் சேர்ந்த ஒருவராகவே கருதி வந்தார். 


தனது நூல்களை வாசிக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்பவர், சமயங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் கூட உண்டு. உட்புறமாகவே அதிகம் வாழ்ந்துவிட்டேன் என துறவி தாமஸ் மெர்டனிடம் கடன் பெற்ற வார்தைகளைக் கூட கூறியதுண்டு. அப்பா, அதிகம் வெளியே பயணிக்காமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறாரோ என்று நினைத்து கேள்வியை ஒருமுறை கேட்டேன். அப்போதும் காலத்தை வீணடித்துவிட்டார் என்பது போன்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதற்கு அவர், ஆப்பிரிக்காவில் உள்ள வன விலங்குகளை எதிர்கொண்டிருக்கிறேன். இமாலயத்தில் உள்ள கடுமையான பருவச்சூழல்களில் வாழ்ந்திருக்கிறேன். கப்பல்களில் புயல் நிறைந்த அட்லாண்டிக் கடலில் பயணித்திருக்கிறேன் என்று ஒருமுறை கூறினார். எனக்குப் புரியவில்லை. நான் வாசித்திருக்கிறேன் என்றார். புயலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள, கொரில்லாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சுறாவின் தாக்குதலை எதிர்கொண்டு உயிர்பிழைக்க என பல்வேறு உத்திகள் அவரிடம் இருந்தன. 


அப்பா, தன்னுடைய எழுபத்தேழு வயதில் பெரிய திரையைக் கொண்ட டிவி, சிடி பிளேயர், மேசைக்கணினி ஆகியவற்றை தன்னைச் சுற்றிலும் வைத்திருந்தார். ஆனால், அவர் மெரிமாக் ஆற்றின் வழியாக லோவெல் நகருக்கு திரும்பிவிட ஆர்வம் கொண்டிருந்தார். ஒருமுறை, லோவெல் நகரில் நடைபெற்ற அணிவகுப்பில் உள்நாட்டுப் போரில் பங்கேற்ற கடைசி ராணுவ வீரரைப் பார்த்தது பற்றிய நினைவைப் பகிர்ந்தார். நீண்டகால இறந்தகாலத்தோடு, அந்த நிகழ்ச்சி அவரை பிணைத்தது. காலமான பிறகு, அவர் தனது இறந்த காலத்தோடு மீண்டும் இணைந்துகொண்டுவிட்டார். 


மேற்கண்ட விஷயங்களை அடையாளம் காட்டிய பட்டியல் இல்லாமல் கத்தரிப்பூ நிற அட்டைபோட்ட சிறிய நோட்டு புத்தகம் ஒன்றிலும் ஒரு பட்டியலை எழுதியிருந்தார். அந்த பட்டியல், புற்றுநோய்க்காக மார்பின் கொடுப்பதற்கு முன்னதாக, அவரது எண்ணங்கள் மௌனமாகுவதற்கு முன்னர் எழுதியதாக இருக்கலாம். அவர் இறந்து இருபதாவது ஆண்டு அஞ்சலியின் போது, கத்தரிப்பூ நிற நோட்டுபுத்தகத்தை கையில் எடுக்கிறேன். அதில், புற்றுநோய் மையத்தில் தொடர்பு எண் எழுதப்பட்டுள்ளது. அவர் இறப்பதற்கு முன்னதாக இறுதி பட்டியலை எழுதியிருக்கக்கூடும். 


அப்பாவின் கையெழுத்து எனக்கு பழக்கமான ஒன்று. கருப்பு மையில் தான் பிறந்த லோவெல் நகருக்கு திரும்ப போக முடியாத வருத்தத்தை அவர் பட்டியல்கள் வழியாக பிரதிபலிக்கிறார். இன்று வீட்டில் அப்பா, நூல்களை வாசித்த நாற்காலி இல்லை. அவர் அதிக இடங்களுக்கு பயணித்தவர் இல்லை. அப்படி பயணம் செய்யவும் ஆசைப்பட்டவர் அல்ல. உண்மையில் அவர் கூறியபடி, அவருக்கு வீட்டினுள்ளே ஆழமான செறிவான வாழ்க்கை அமைந்துவிட்டது. அவருக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. 


டாட்ஸ் லிஸ்ட் - ராபர்ட் முல்டூன்

ரீடர்ஸ் டைஜஸ்ட்


#அப்பா #நினைவுகள் #பட்டியல் #பிறந்த ஊர் #பயணம் #நூல் வாசிப்பு #மனம் #புற்றுநோய் #வாழ்க்கை #குடும்பம் #இயற்பியல் 


#list #father #travel #journey #life #home #mind #cancer #tears #diary #books #description #notes


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!