நோக்கத்திற்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது - இந்திராகாந்தி உரை




முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரநாள் வாக்குறுதியை ஆன்ம பூர்வமாக கூறினர். அந்த வரலாற்று நிகழ்வின்போது பல்லாயிரம் பேர்களில் ஒன்றாக என்னுடைய குரலும் ஒலித்தது.




1947ஆம் ஆண்டு, எடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனநாயகம், மதச்சார்பற்ற புதிய வளர்ச்சி பெறும் சக்தி உருவானதை உலகம் அறிந்துகொண்டது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது.




பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாத்து முதலடியை எடுத்து வைத்தோம். இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது.




அமைதியோடு பல்வேறு நாடுகளுக்கு இடையில் நட்புணர்வை பிரசாரம் செய்து ஒத்திசைவை உருவாக்கும் விதமாக இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும், தன்னுடைய வழியில் இந்திய தொன்மையை வெளிக்காட்டினார். நாட்டின் ஒற்றுமை, தேடவேண்டிய லட்சியம் ஆகியவற்றை மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.




நேற்றுதான் சாஸ்திரி அவர்களின் உடலை தகனம் செய்த மிச்சங்கள், ஆற்றில் கரைக்கப்பட்டது. அவரின் மறைவால், இந்திய நாடு மொத்தமும் பெரும் துக்கத்தை அனுசரித்து வருகிறது. பல்லாண்டுகளாக அவரோடு பணியாற்றிய காரணத்தால் என்னால் அவரது மறைவை பணியிலும், தனிப்பட்ட அளவிலும் உணரமுடிகிறது.




மக்கள் மீது வரம்பற்ற நம்பிக்கை கொண்டுள்ள பாரம்பரியத்தை மகாத்மா காந்தி மற்றும் என்னுடைய தந்தை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வழியில், இந்திய மக்கள் எனக்கு வலிமை, நம்பிக்கையைத் தருகிறார்கள். காலத்திற்கு ஏற்ப, இந்தியா புதிய ஆன்ம ஆற்றலை வெளிக்காட்டும் ஆதாரமாக உள்ளது. அண்மைய காலங்களில், ஏன் கடந்த காலங்களிலும் கூட இந்தியத் தாய் புதிய சவால்களை சந்திக்கும்போது தவறே இழைக்காத வகையில் தைரியத்தை வெளிக்காட்டினாள். இந்தியத் தன்மையோடு எந்த வித பரிசோதனைக்கும் தயார் என்ற நிலை அது.




எதிர்வரும் மாதங்கள் கடினமான சவால்களைக் கொண்டவை. ஏராளமான பிரச்னைகளுக்கு வேகமான செயல்பாடுகள் தேவையாக உள்ளது. பருவ காலத்தில் மழை பொழியாமல் நம்மை தோற்கடித்து விட்டது. எனவே, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வறட்சி உருவாகி வருகிறது. தட்பவெப்பம், மழைபொழிவு குறைவு ஆகியவற்றால் வேளாண்மை உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. ஏற்றுமதி மூலம் கிடைக்கவேண்டிய வருமானம், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவேண்டிய பொருளாதார உதவிகள் எதிர்பார்த்த அளவில் வரவில்லை.




அந்நிய செலாவணி பற்றாக்குறை, தொழில் உற்பத்தியைப் பாதிக்கிறது. நாம் இதுபோல பிரச்னைகளால் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. நம் முன் உள்ள சவால்களை நேரடியாக எதிர்கொள்வோம். நாம் செய்த தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிக்கல்களைத் தீர்ப்போம். அரசின் செயல்பாடுகளைபப் பற்றி குறிப்பிட்ட காலகட்டங்களில் உங்களோடு உரையாடி செய்து வரும் மாற்றங்களை தெரிவிப்பதோடு, அவற்றுக்கு உங்களது ஆதரவை பெறவும் விரும்பகிறேன்.



இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையைக் கடந்து அனைத்து மக்களுக்குமான உணவைக் கொண்டுபோய் சேர்ப்பதை உறுதி செய்யவேண்டும். உள்நாட்டில் உற்பத்தியான அல்லது இறக்குமதி செய்த உணவு தானியங்களை சரியாக மேலாண்மை செய்து மக்களுக்கு விநியோகம் செய்வதில் உரிய கவனம் செலுத்தவேண்டும். உணவு தானியங்களை நியாய விலைக்கடைகள் வழியாக சரியாக முறையாக விநியோகிப்பதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். கேரளாவில் உள்ள பற்றாக்குறை பற்றிய செய்தியை கவனத்தில் கொண்டிருக்கிறோம்.




உணவுப் பற்றாக்குறை உள்ள இடங்களில் தாய்மார்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்ய முயல்கிறோம். இதன் மூலம் நிரந்தரமான இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அடிப்படையான உணவை ஒருவர் பெறுவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள அரசு விரும்பவில்லை. எனவே, இதற்காக வெளிநாடுகளில் இருந்து போதுமான அளவுக்கு உணவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் வழியாக பற்றாக்குறை இடைவெளி குறையும் என எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்கா, நம் நாட்டின் மீது கருணை காட்டி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.




வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மட்டுமே நமது நாட்டின் உணவு பிரச்னையைத் தீர்க்க முடியும். இதைப் பற்றி திட்டமிட்டு நீர், வேதி உரங்கள், வீரிய பயிர் ரகங்கள், தொழில்நுட்ப ஆலோசனை, கடன்கள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்க ஆலோசித்து வருகிறோம். அதிகளவு வேளாண்மை உற்பத்தி என்பது உள்நாட்டில் உள்ள அதிகரித்து வரும் மக்களுக்கான உணவுத்தேவையை நிறைவு செய்வதோடு, மீதியுள்ளவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யமுடியும்.




கட்டுமான வேலைகளில் கிராமத்து மக்கள் ஈடுபடுவதற்கான ஆற்றல், நேரத்தை உருவாக்கி தரவேண்டும். கிராமத்திலுள்ள மக்களுக்கு வருமானத்தை அதிகரிக்க செய்யும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.




அடிப்படை தொழில்துறைகளில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யப்பெறுவது பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியமான மேம்பாடாக அமையும். குறிப்பாக மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில்… இதை நான் இங்கு என்னுடைய எதிர்பார்ப்பாக கூறவில்லை. அதுவே, நாட்டின் தேவையாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் கட்டமைப்பு வழியாக, ஏராளமான முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படியான கட்டமைப்பு திட்டங்களில் பொதுத்துறை, தனியார் துறை முரண்பாடுகள் வராது. நம்முடைய கலப்பு பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு போதுமான ஆதரவு மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது. நாம் அதை இனியும் தொடர்வோம்.




அண்மைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப ரீதியாக நாம் தற்சார்பு கொண்ட நாடாக இருக்கவேண்டும் என்ற லட்சியத்தை கட்டாயப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறும் பொறியியல் சேவைகள், பொருட்கள் ஆகியவற்றை எப்படி உள்ளூர் உற்பத்தி, சேவைகள் கொண்டு மறுகட்டுமானம் செய்வது என யோசிக்க வேண்டும்.




கண்டுபிடிப்பு, மேம்பாடு, சூழலுக்கு பொருத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நமது நாட்டின் வளர்ச்சி அமையும். நம்மிடம் ஏராளமான அறிவியலாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். அவர்களை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அறிவியலாளர்கள், பொறியாளர்களுக்கு வாய்ப்பை வழங்கும்போது அவர்கள் அற்புதமான திறனை வெளிக்காட்டுவார்கள். இதற்கு அணு விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா முக்கிய எடுத்துக்காட்டு. நம் நாட்டிற்கு பாபா காட்டியுள்ள வழி, ஊக்கமூட்டக்கூடிய ஒன்று.




நமது திட்டங்களில் பொருளாதார சமூக மேம்பாடுகள் ஒன்றாக இணைந்துள்ளது. மூன்றாவது, நான்காவது ஐந்தாண்டு திட்டங்கள், இவற்றுக்கு அருகே வந்துள்ளன. தேசிய மேம்பாட்டு கவுன்சில் நான்காவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஆதரவளித்தது. வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவது பற்றிய விரிவான திட்டம் கூட பல்வேறு எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரிட்டது. தொடங்கி இடர்ப்பட்ட வேலையை செய்யவேண்டிய சூழல் உள்ளது. 1966-67 காலகட்டத்தில் தொடங்கிய வேலைகள், ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் முதன்மையாக இடம்பிடித்தது.




பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தவரையில் நோக்கம், செயல் என இரண்டுக்கும் இடையில் பெரும் இடைவெளி உள்ளது. தேவையைப் பொறுத்து இந்த இடைவெளிக்கு பாலத்தை அமைக்கும் விதமாக பல்வேறு வித மாற்றங்களை செய்ய வேண்டும். அரசின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கு புதிய கருவிகளையும், அமைப்பு ரீதியான மாதிரிகளையும் பயன்படுத்த வேண்டும். தேவையுள்ள மக்களுக்கு, பிரச்னைகளின் தீவிரத்தை கணக்கில் கொண்டு வேகமாக தீர்வுகளை வழங்கும் விதமாக அரசு எந்திரத்தை மாற்ற வேண்டும்.




நாம் நாட்டின் தொன்மையைக் காப்பாற்ற அனைத்து நாடுகளுடனும் அமைதி, நட்புறவைப் பேணவேண்டும். அதேசமயம், இந்தியா சுதந்திரத்தன்மையை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். இப்படியான வெளியுறவு கொள்கையை நாம் கடைபிடித்தால் நம் நாட்டின் தொன்மையான பாரம்பரியம் காக்கப்படும். கூடுதலாக கௌரவம், பெருமையும் அப்படியே தொடர வாய்ப்புண்டு. நான் வெளிநாடுகளுக்கு பயணித்தபோது பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் உரையாடியபோது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்தது.




அடிப்படைக் கொள்கைகளை என் தந்தை உருவாக்கி அளித்தார். தந்தையும், திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்களும் கொள்கைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த தலைவர்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு இன்றும் வழிகாட்டுவதாக உள்ளது. அமைதி, உலக அளவிலான ஒத்துழைப்பு அளிப்பதன் வழியாக உலக நாடுகளிலுள்ள மக்கள் மேலாதிக்கம், பயமின்றி சமத்துவத்தை அனுபவித்து வாழ முடியும்.




நாம் நமது அண்டைநாடுகளுடன் நட்புறவான அணுகுமுறையை உருவாக்கிக் கொள்வதோடு, பிரச்னைகளையும் அமைதியான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும். அமைதி என்பது நமது லட்சியம். அதேசமயம் ஒரு நாட்டின் சுதந்திரம், நிலப்பரப்பு சார்ந்த ஆளுமை, அதன் பொறுப்பு பற்றிய அரசின் அக்கறையைப் பற்றியும் கவனம் கொண்டுள்ளேன்.




விழிப்புணர்வோடு இருந்து தேவைக்கு ஏற்ப நமது நாட்டின் பாதுகாப்பை வலிமைப்படுத்த வேண்டும். தீரம், அர்ப்பணிப்பு, தைரியம், தியாகம் என நமது ராணுவப்படைகள் போர்களில் எடுத்துக்காட்டு காட்டும்படி செயல்பட்டுள்ளனர். போர்களில் தமது உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள், உடல் ஊனமுற்றோர் பற்றி யோசனைகள் எனக்கு உருவாயின.




வறுமை, நோய், அலட்சியம் ஆகியவற்றுக்கு எதிராக ஏற்கெனவே போர் நடந்துகொண்டிருக்கிறது. எனவே, நாம் அமைதியை விரும்புகிறோம். வேலை, உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம், கல்வி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறோம். பலவீனமாக உள்ள, தாழ்த்தப்பட்ட வறுமை விளிம்பில் உள்ள மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதைப் பற்றிய எண்ணம் எனக்குள் உள்ளது.




இளைஞர்கள், இன்று தங்கள் தாய் நாட்டிற்கு அளிப்பதை நாளையே பெறமுடியும். அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. நாடு, இளையோரின் பங்களிப்பை எதிர்பார்த்து உள்ளது. அறிவியல், கலை ஆகிய துறைகளில் அடையவேண்டிய இலக்குகள், கடக்க வேண்டிய தொலைவுகள் உள்ளன.




மதம், மொழி, மாநிலம் என வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒரே மக்கள்தான். விவசாயிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியலாளர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள், பொதுச்சேவை பணியாளர்கள் என அனைவருமே தங்களால் முடிந்த பணியை செய்யவேண்டும். வலிமையும், சகிப்புத்தன்மையும் ஜனநாயகத்திற்கு அடித்தளங்கள். கடினமான உழைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைந்த நாடாக, வளர்ச்சியடைந்த சமூகமாக மாற முடியும்.




ஜனநாயகம், மதச்சார்பற்ற இயல்பு, திட்டமிட்ட பொருளாதாரம் மற்றும் சமூகம், அயல்நாடுகளோடு நட்புறவு, அமைதிப் போக்கு ஆகியவை நாட்டை உருவாக்கும் அடிப்படையாக மாறும் என்று கூறி இன்று உறுதி எடுக்கிறேன்.




#1966 ஜனவரி 26

புகைப்படம் - விக்கிப்பீடியா 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!