தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ் = உலக கலாசாரத்தையே மாற்றிப்போட்ட ஒற்றைக்கடை!

 The McDonaldization of society - 

into the digital age --

 George Ritze


தி மெக்டொனால்டைசேஷன் ஆப் சொசைட்டி - இன் டு தி டிஜிட்டல் ஏஜ்

ஜார்ஜ் ரிட்ஸ்சர்

சேஜ்

ப.368


மெக்டொனால்ட் என்பது அமெரிக்காவிலுள்ள துரித உணவகம். இந்த கடை முதன்முதலாக பிரான்சைஸ் என்ற வணிக உத்தியை வெற்றிகரமாக பயன்படுத்தி வணிக வெற்றியைப் பெற்றது. இன்று அமெரிக்காவின் முக்கியமான அடையாளம் மெக்டொனால்ட் உணவகம். இதை தொடங்கியவர்களை விட வாங்கி விரிவுபடுத்தியவரே உலகளவில் புகழ்பெற்றார். அதற்கு அவர் மேற்கொண்ட பல்வேறு நவீன முறைகளே காரணம். 


இந்த நூல் மெக்டொனால்ட் கடை எப்படி உணவு வணிகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று கூறவில்லை. மெக்டொனால்ட் என்ற ஒற்றைக் கடை அமெரிக்க சமூகத்தில் உறவில், உணவில், தொழிலில், கல்வியில், தனிப்பட்ட பொருளாதாரம் என பல்வேறு வகையில் ஏற்படுத்திய பாதிப்பு, செல்வாக்கு பற்றி நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜார்ஜின் நூல், அவர் எடுத்துக்கொண்ட ஆய்வு மையப்பொருள் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறார்.  


மெக்டொனால்ட் உணவுகளை ஒருவர் உட்கார்ந்து சாப்பிடவேண்டியதில்லை. அமெரிக்காவில், காரில் வந்து உணவை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு போகலாம். பொதுவாக உணவுகளை அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆனால், மெக்டொனால்ட் நிர்வாகம் ஒருவர் அமர்ந்து சாப்பிட்டால் வியாபாரம் கெடும். அவர்களை வேகமாக அனுப்பி வைக்கவே நாற்காலி வடிவமைப்பு, பணியாளரின் உடை, அதிலுள்ள வண்ணம் என அனைத்திலும் பல நுட்பங்களை தந்திரங்களை செய்கிறது. தட்டில் வைத்து உண்ணும் தேவையில்லாத உணவுகளை மெக்டொனால்ட் விற்கிறது. உணவுகள் அனைத்தையும் இருகைகள் அல்லது ஒற்றைக் கையில் பிடித்தபடியே நின்று, நடந்தபடியோ சாப்பிட முடியும். இதை விரல் உணவுகள் என குறிப்பிடுகிறார். பர்கர், பிரெஞ்ச் பிரைஸ் ஆகிய உணவுகள் இந்த வகையில் வரும். 


அமெரிக்காவின் சார்புநிலை கொண்ட அல்லது அதை ஏற்கும் அனைத்து நாடுகளிலும் மெக்டொனால்ட் துரித உணவகம் கடை விரித்துள்ளது. இந்த நிறுவனம், பெரிதாக எங்கும் தனது அமெரிக்க கலாசாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அந்த வகையில் தன்னுடைய நாட்டின் கலாசாரத்தையும் மெல்ல நிதானமாக பல்வேறு நாடுகளில் பரப்புகிறது. குறிப்பாக, உணவு உண்ணும் முறை. இருபது நிமிடங்களுக்கு மேல் உட்காராமல் உணவு உண்டுவிட்டு செல்ல வைப்பது, விலை குறைவு என்று சொல்லி அதிகம் செலவு செய்யவைப்பது, தானியங்கு முறையில் உணவுப்பொருட்களை தயாரிப்பது என பல்வேறு விஷயங்களை மெக்டொனால்ட் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதை பின்பற்றி சமூகம் பல்வேறு விஷயங்களை மாற்றிக்கொண்டுள்ளது. உணவை வேகமாக கொண்டு வந்து டெலிவரி செய்வது, மனிதர்களை ரோபோட் போல மாற்றுவது, கணினி வழியாக நேர்காணல் செய்வது, ஏடிஎம் எந்திரங்கள், அதாவது மனிதர்கள் அல்லாமல் எந்திரங்கள் வழியாகவே தினசரி செயல்பாடுகளை செய்வது. 


மெக்டொனால்டைத் தொடர்ந்து இதன் போட்டியாளர்களான பர்கர் கிங், டாகோபெல், பாப்பிஜான் என நிறைய நிறுவனங்கள், மெக்டொனால்டின் மாற்றங்களை அப்படியே நகல் செய்கின்றன. இப்படியாக மெக்டொனால்ட் மேற்கொண்ட நிர்வாக முறைகள், உணவு தயாரிப்பு உத்திகள் உலகமெங்கும் பரவின. இப்போது நாம் மின்னிலக்க உலகில் வாழ்கிறோம். போனில் உணவை ஆர்டர் செய்கிறோம். அதை பத்து நிமிடத்தில் கொண்டு வந்து தருவதாக நிறுவனம் வாக்குறுதி அளிக்கிறது. முடியுமோ இல்லையோ சொல்கிறார்கள். தொடக்கத்தில் இந்த நேரம், 45 நிமிடங்களாக இருந்தது. வேகம் வேகம் என உணவகங்கள், டெலிவரி செய்பவரை நெருக்குகிறது. இதேபோன்ற நெருக்கடி அனைத்து வேலைகளிலும் வந்துவிட்டது. நூலாசிரியர் பல்வேறு தொழில்துறைகளை விளக்கி ஆராய்ந்து மெக்டொனால்ட் என்ற ஒற்றைக் கடையால் என்னென்ன மாற்றங்கள் உலகில் நடந்தது என கூறும்போது ஆச்சரியமாக உள்ளது. இரண்டு வேறுபட்ட விஷயங்களை ஒன்றாக இணைப்பது எளிதல்ல. ஜார்ஜ் அதை திறமையாக செய்கிறார். நாமும் அதை காரண காரியங்களோடு புரிந்துகொள்ள முடிகிறது. 


-கோமாளிமேடை குழு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!