உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன் டேட்டிங் விதிமுறைகள்

 



உயிர் உண்ணும் கண் - எக்ஸ்டென்டன்ட் எடிஷன்

டேட்டிங் விதிமுறைகள்

ஆண் பெண் என இருவரும் திருமணம் செய்வது குடும்பம் என்ற அதிகாரப்பூர்வ அமைப்பிற்குள் வருவதற்கு உதவி புரிகிறது. அதேசமயம், காதலித்து பழகி பிறகு திருமணம் செய்வது இன்று முக்கியத்துவம் பெறுகிறது. டேட்டிங் என்பது மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. பலரும் அதை நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக செயல்படுத்த முயல்கிறார்கள். நேரடியான சந்திப்பு என்பது காதலில் நுழைபவர்களுக்கான வாசல். அதற்கு முன்னதாக டின்டர், பம்பிள் என ஆப்கள் மூலம் பேசி அறிமுகமாகி பிறகு டேட் செய்து காதலித்து மணந்தவர்களே புதிய தலைமுறையினர். 


இணையத்தின் வசதியால் சிலர் தங்களது ஆளுமையை, முழுமையான குண இயல்பை மறைத்துக்கொள்ள முடியலாம். ஆனால், நேரடியான சந்திப்பில் அது சாத்தியமில்லை. டேட் செய்வது திருமண வாழ்க்கைக்கான ஒரு பயிற்சி என்றே வைத்துக்கொள்ளலாம். 

எப்படி டேட் செய்வது, அதற்கென ஏதாவது வயது தகுதி உண்டா என்று எல்லாம் கேள்வி வருகிறது. 


இன்று கணவரை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்களும் கூட டேட் செய்கிறார்கள். டேட் செய்வது பற்றி இது சரி இது தவறு என கூறுவது நம் நோக்கமல்ல. நீங்கள் டேட் செல்வதற்கு தயாரா என்றால் யோசித்துப் பார்த்து தீர்மானிக்க வேண்டியது தொடர்புடைய இருவர்தான். இதில் அந்நியர் தலையீடு செய்ய ஏதுமில்லை. 


இளையோர், பெற்றோர், முதியவர்கள், துணையை இழந்தவர்கள் என பலரும் டேட்டிங்கில் வருவார்கள். ஏன் டேட்டிங் முக்கியமாகிறது என்றால், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள தேவையான நேரம் இந்தமுறையில் கிடைக்கிறது. திருமணமாகி துணையைப் புரிந்துகொள்வது என்பது வேகமான வாழ்க்கையில் நடக்காது. அப்போது உங்களுக்கு சமூக அழுத்தம் தொடங்கியிருக்கும். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை வந்துவிட்டதாக என கேள்விகள் படை எடுக்கும். அதற்குப் பிறகு குழந்தை பிறந்ததா, அடுத்து அதை வளர்ப்பது, பள்ளி என நிற்காத எலி பந்தயம் தொடங்கிவிடும். 


டேட்டிங்கைப் பொறுத்தவரை முதலில் அதில் ஈடுபடுவதற்கு முன்னதாக, அதிலுள்ள சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதை புரிந்துகொள்ள முடியும். மனிதர்கள் சமூக விலங்குகள், எனவே, நாம் ஒருவரையொருவர் சங்கிலி கண்ணிகள் போல சார்ந்துதான் இருக்கிறோம். டேட்டிங்கைப் பொறுத்தவரை நீங்கள் அங்கு ஒருவரை புதிதாக அறிந்துகொள்ளப் போகிறீர்கள். அங்கு பேசுவது பழகுவது எல்லாமே உங்கள் வாழ்க்கைக்கு பின்னாலும் உதவத்தான் போகிறது. தொடக்கத்தில் ஒருவரை நீங்கள் சந்தித்து உரையாடி நெருக்கமாக பொதுவாக உள்ள ஆர்வம், கனவு, ஆளுமை ஒற்றுமை, ஊக்கம் ஆகியவை உதவலாம். தோற்றம் என்பது சந்திப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. உண்மையான அழகு வெளியே தெரியாது. அதை டேட்டிங்கில் அறிந்துகொள்ள முடியும். மெல்ல பழகிப் பார்த்துதான்... ஒருவர் எப்போதுமே நடித்துக்கொண்டிருக்க முடியாது அல்லவா? 


உணர்வுரீதியாக ஒற்றுமை உருவாகாத போது உடல் ரீதியாக உறவை அவசரப்பட்டு ஏற்படுத்திக்கொள்வது நிறைய சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே, பொதுவான ஆர்வம், ஈடுபாடு, லட்சியம் என இல்லாமல் உடல் ரீதியான தேவையை மட்டுமே தேடுவது காதல் உறவுக்கு சரியானதல்ல. நிறைய பிரச்னைகளை உருவாக்கும். பள்ளியில் படிக்கும்போதே டேட் செய்து காதலாகுவது வெளிநாடுகளில் இயல்பானது. ஆசியாவிலும் அதுபோன்ற கலாசாரம் பரவி வருகிறது. சாதியோ, மதமோ, சட்டமோ கூட ஆண், பெண் பழகுவதை தடுக்க முடியாது. சட்டரீதியாக வயது வந்தோராக மாறிய பிறகு திருமணம் போன்ற முடிவுகளை எடுப்பது பிரச்னைகளை தடுக்கும். 


அனைத்து உறவுகளையும் மனிதர்கள் ஏற்படுத்திக்கொள்வது தங்களது தேவைகளைத் தீர்த்துக்கொள்ளத்தான். நீங்கள் அகவயமானவர் என்றால் உங்கள் நண்பரை புறவயமானவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி இருந்தால்தான் உங்களுக்கு சில தேவைகளை தீர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். காதல் உறவுகளும் கூட அதுபோல அமையவே அதிக வாய்ப்புகள் உண்டு. தங்களுடைய உறவில் தங்கள் தேவை என்ன என்பதை தெளிவாக கூறுவது நல்லதுதான். இதில் குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ, தயக்கமோ, கூச்சமோ தேவையே இல்லை. 


2

ஒருவர் உடல் ரீதியாக உணர்வு ரீதியாக ஆன்மிக ரீதியாக, அறிவு ரீதியாக பிறருடைய துணையின்றி முழுமையடைபவராக இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர் டேட்டிங் வழியாக இன்னொருவரை சந்திக்கும்போது உறவை வளர்த்து அதை பராமரிக்க முடியும். அதை காப்பாற்றுவது தனி கதை. அதற்கு அவர் உழைக்கவேண்டும். தன்னைத்தானே வெறுப்பது, உயர்வு, தாழ்வு மனப்பான்மை என ஒருவர் சுற்றித்திரிந்தால் அவரால் எந்த உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. 


ஒருவர் தன்னை அறிந்துகொள்ள முயல்வது முக்கியம். அந்த வகையில் பலம், பலவீனத்தை அறிந்து தன்னம்பிக்கை பெறலாம். பிறரை அறிகிறோமா இல்லையோ, ஒருவர் தன்னை அறிந்துகொள்வது முக்கியம். உங்களை நீங்கள் யார் என அடையாளம் கண்டு ஏற்பது அவசியம். அப்போதுதான் பிறருடன் எளிதாக தொடர்புகொள்ள முடியும். பழக முடியும். 


நம்பிக்கை என்பது ஒருவர் செயல் வழியாக சம்பாதிக்க வேண்டும். நம்பிக்கையை ஒரே நாளில் ஒருவர் உருவாக்கிவிட முடியாது. எனவே, இதற்கு உறவில் அவசரம் கூடாது. நேரடியாக பாலுறவுக்கு செல்ல விரும்புவது சிறந்த செயல்பாடு அல்ல. டேட்டிங் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆசை, கனவு, விருப்பங்கள், தேவை பலவற்றையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். வெற்றிகரமான உறவுக்கு கலந்துரையாடல், மனதிலுள்ள கருத்துகளை பகிர்தல் முக்கியம். பிறகுதான் மற்றவையெல்லாம் வரும். 


உண்மையான காதலும் நெருக்கமும் உருவாக சிறிது காலமாகும். இன்ஸ்டா ரீல்ஸ் வேகத்தில் காதலோ உறவோ மலராது. நேரடியாக பாலுறவை ஒருவர் நாடினால் அது உறவில் பெரிய தோல்வியை உருவாக்கும். பாலுறவு என்பது சிலரின் தேவையாக இருந்தால் அதை அடைந்தவுடன் உறவு முடிந்துவிடும். அடுத்த நபர் நோக்கி அவர்கள் நகர்ந்து சென்றுவிடுவார்கள். இப்படியான செயல்பாடு காதல் அல்ல சுரண்டல். நான் இதை பாலின பாகுபாடின்றியே கூறுகிறேன். ஆண், பெண் என பாலினத்தவர்களில் ஏதேனும் ஒருவரை மட்டுமே பாதிக்கப்பட்டவர் தரப்பாக கருதவில்லை. 


தமிழாக்கம் 

அன்பரசு சண்முகம்

புகைப்படம் நன்றி

லிஸ்க் ஃபெங்க்

#காதல் #டேட்டிங் # உறவு #வாழ்க்கை #கடந்தகாலம் #மனம் #திருமணம்

#love #dating #widow #marriage #pain #life #past #sex #need #firstsight #help #society


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!