தமிழ் திரையுலகை மிரள வைத்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர்!
Book review tamil சாண்டோ சின்னப்ப தேவர் தீனதயாளன் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் ப.176 இந்த நூலில் தீனதயாளன், சாண்டோ சின்னப்ப தேவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சம்பவங்களை விவரித்துள்ளார். இது ஒருவரின் வாழ்க்கை வரலாறு போலத்தான். ஆனால், இது கட்டுரை நூல் என்பதை மறக்கும் வகையில் தீனதயாளன் கட்டுக்கோப்பாக நாவல் போல எழுதியிருக்கிறார். நூலில் உள்ள பல்வேறு பக்கங்களிலும் தேவரின் வாழ்க்கை, முருக பக்தி இல்லாமல் அந்த பக்கமே முடியாது. அதேசமயம், தேவரின் முருக பக்தி, நூல் முழுக்க நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதேசமயம் அவர் மதிக்கும் கொள்கைகளில் இருந்து பிறழ்பவர்களை எப்படி எதிர்கொள்வார் என்பதற்கு ஒரு அத்தியாயமாவது கொடுத்திருக்கலாம். தீனதயாளன் முழுக்க தேவரின் ஆளுமையை புனிதப்படுத்தவில்லை. சில இடங்களில் கோடு காட்டியிருக்கிறார். குறிப்பாக அவரது தம்பி திருமுகத்திடம் வேலைக்காக கடுமையாக திட்டுவது, தாமதமாக வருபவர்களை வசை பாடுவது, உதவியாளர்களை அடித்து உதைப்பது எல்லாமே உண்டு. கோபத்தில் அப்படி செய்தாலும் கூட மறுபக்கத்தில் அவர் அவர்களுக்கு வீடு வாங்கிக்கொடுப்பது, கைநிறைய கணக...