இரு கார் நிறுவனங்களுக்கு இடையிலான மோதல் எப்படி எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது! மிஸ்டர் சந்திரமௌலி
மிஸ்டர் சந்திரமௌலி மிஸ்டர் சந்திரமௌலி இரு கார் நிறுவனங்களுக்கு இடையிலான மோதல் எப்படி எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதுதான் கதை. படத்தில் இரண்டு முக்கியமான கதைகள் இருக்கின்றன. ஒன்று, கார் நிறுவனங்களுக்கான போட்டி, அதற்காக அவர்கள் மக்களைக் கூட பலியிட துணிவது. இரண்டு, அப்பாவுக்கும், மகனுக்குமான அந்நியோன்ய உறவு. படத்தில் உருப்படியாக இருப்பது கார் நிறுவனங்களுக்கு இடையில் இரக்கமேயில்லாதபடி நடக்கும் போட்டிதான். சந்திரமௌலி, ராகவ் ஆகிய இருவருக்கு இடையில் பாச நேச காட்சிகள் ரசிக்கும்படி உருவாக்கப்படவில்லை. ரெஜினாவின் கதாபாத்திரத்திற்கும் கூட பெரிய நம்பிக்கை ஏற்படுத்தும் விஷயம் இல்லை. படத்தில் பைரவியாக வரும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. இவருக்கும் சந்திரமௌலிக்கும் இடையிலான உரையாடல்கள் பார்க்கலாம். நான் சிவப்பு மனிதன் படம் போல நாயகனுக்கு ஏற்படும் பலவீனத்தை எப்படி சமாளித்து வில்லன்களை நையப்புடைக்கிறார் என்பது இறுதிக்காட்சி. படம் நெடுக ராகவ் பாத்திரம் மீது நேசம் பிறக்காத காரணத்தால் அவருக்கு விபத்தில் ஏற்படும் பாதிப்பு கூ...