இடுகைகள்

தீராக்காதலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆறு ஆளுமைகளைப் பற்றிய வசீகர கட்டுரைகள்

படம்
                 தீராக்காதலி - சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் இந்த நூல் ஆறு முக்கியமான சினிமா ஆளுமைகளை நம் கண் முன் வைக்கிறது. அவர்களது வாழ்க்கையை நாம் திரைப்படம் போல பார்க்கிறோம். அதற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தும் பேருதவி புரிகிறது. இவரது அற்புதமான எழுத்தாக்கத்தில் தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, எஸ் ஜி கிட்டப்பா, எம்ஜிஆர், எம்ஆர் ராதா, கேபிஎஸ் ஆகியோரின் வாழ்க்கையை வாசிக்கும்போதே காட்சி கண்முன் விரிகிறது. நூலை படித்து முடித்து பதினைந்து நாட்களுக்கு பிறகு எழுதுவதால் சில விடுபடல்கள் இருக்கலாம். பொறுத்தருள்க. தீராக்காதலி என்பது கொடுமுடி பாலாம்பாள் கோகிலம், எஸ் ஜி கிட்டப்பாவின் மீது வைத்த காதலை அடிப்படையாக கொண்ட தலைப்பு. அதுவே நூல் தலைப்பாக இருப்பது சிறப்புதான். இதற்கான காரணம் கொடுமுடி கோகிலம் பற்றி சம்பவத்தை வாசிக்கும்போது வாசகர்கள் அறிய முடியும். மூன்று ஆண்டுகள்தான் இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். ஆனால், கோகிலம் இரண்டாவது மனைவியாக இருந்தாலும் கணவர் மீது பாகுபாடு இல்லாத எந்த இடத்திலும் குன்றாத மரியாதை, அன்பு, காதலை சாருவின் எழுத்து நமக்கு காட்டுகிறது. இப்படியொரு தீராத அன்பா