இடுகைகள்

ஒரு படம் ஒரு ஆளுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அக்கறை கொள்ளாதவர்களின் வாழ்க்கை!

படம்
ஒருபடம் ஒரு ஆளுமை - லிஜி இறுதி அத்தியாயம்! விமானத்தை விட   வேகமாக பறந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தில் திசைகளின்றி, மொழிகளின்றி, நம்பிக்கையின்றி, உணர்வுகளின் வழியாக மென்மையாக... மிகவும் மெதுவாக நம்முடன் சிலரும் பயணிக்கின்றனர். அவர்களின் இருளும், மௌனங்களும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் வெளிச்சமாக இருக்க வேண்டியவர்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் நாம் தான். ஆனால், நம் பயணமே சரியான இலக்கின்றி பல நெருக்கடிகளுக்குள் சுழன்று கொண்டிருக்கும்போது எதிரே வருபவரையே நம்மால் கண்டுகொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஆனால், ஒரு கலைஞன் அதைக் கண்டுகொள்கிறான். நாம் கண்டுகொள்ளாத, தவறவிட்ட, அக்கறை காட்டாத ,இழந்து விட்ட வாழ்க்கையை தன் கலையினூடாக நமக்கு ஞாபகபடுத்துகிறான். நாம் கண்டுகொள்ளாமல், அக்கறை காட்டாமல் விட்டவர்களின் வாழ்க்கையைப் போல நமக்கும் கிடைத்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த வெளிச்சத்தின் முன்னால் நம்மையெல்லாம் குற்றவாளியாக நிறுத்த வைக்கிறான் ஒரு சிறந்த கலைஞன். இந்த மாதிரி நாம் கண்டுகொள்ளாமல் விட பட்ட பலரில்

கல்விசெயல்பாட்டை வாழ்க்கையாக்கிக் கொண்ட பெண்மணி!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி கெஸ் சிறுவன் பில்லியும் , அவனது அண்ணனும் வீட்டில் சந்தித்தாலே தீராத லடாய்தான் . பில்லியின் அப்பா வீட்டைவிட்டு வெளியேறிவிட , அம்மா கிடைத்த வேலையை செய்துகொண்டு குடும்பத்தை நடத்துகிறாள் . பார்ட்வேலை  செய்துகொண்டே பள்ளியில் படிக்கும் பில்லி ஒருநாள் காட்டுக்குள் பயணிக்கும்போது சிறிய பருந்து உறவாகிறது . நட்பாகும் பருந்தைக் மறைவான இடத்தில் வைத்து பாதுகாப்பதோடு , பருந்து வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான் . இந்த விஷயம் அவனைச் சுற்றியிருப்பவர்களும் தெரிய வர , எல்லோரும் அவனை மெச்சுகிறார்கள் .  அச்சமயம் பில்லிக்கும் அவனது சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் எழ , பருந்தைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசி பழிவாங்குகிறான் பில்லியின் அண்ணன் . செல்லப்பருந்து இறந்த சோகத்தில் பில்லி தவிப்பதோடு திரை இருள்கிறது . தொழிலாளர் வர்க்க ஏழைச்சிறுவர்களின் வாழ்க்கையை , அவர்களின் மென்மையான உணர்வுகளை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கென் லோச் . தன் செல்லப் பருந்துக்கு பில்லி சூட்டும் பெயர்தான் படத்தின் தலைப்பும் கூட .

"குழந்தைகள் எதையும் தூக்கி எறிவதில்லை"

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி ‘ சூடானி ஃப்ரம் நைஜீரியா ’ வறுமையில் தடுமாறும் நைஜீரிய அகதி கால்பந்து வீரர் சாமுவேலுக்கு  கேரளாவின் மலப்புரத்தில் பிரபல கால்பந்து அணியில் விளையாட சாமுவேலுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கிறது . போலி பாஸ்போர்ட்டுடன் கேரளத்துக்கு வந்து தனது கால்பந்தாட்ட திறமையின் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து சூடானி என செல்லப்பெயரைப் பெறுகிறார் . சாமுவேல் அணியின் மேனேஜர் மஜீத் . திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அலைபாய்கிறார் . தாயின் இரண்டாவது மணத்தில் கிடைக்கும் தந்தைக்கும் மஜீத்துக்கும் சுமூக சூழல் இல்லை . இச்சூழலில் எதிர்பாராத விபத்தில் சாமுவேலின் கால் உடைந்துவிடுகிறது .  சாமுவேலைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மஜீத்தின் தலையில் விழுகிறது . மஜீத் என்ன செய்தார் ? என்பதை நகைச்சுவையான திரைக்கதையோடு மனித நேயம் மிளிர கவித்துவமாகச் சொல்கிறது இந்த மலையாளப் படம் . இயக்கம் சக்காரியா . அரவிந்த் குப்தா கான்பூர் ஐ . ஐ . டியில் பொறியியல் பட்டதாரி அரவிந்த் குப்தா , குழந்தைகளிடம் அறிவியலைக் கொண்டு செல்ல உயர்பதவிகளைத் த

நார்னியாவின் கதவைத் திறந்த எழுத்தாளர்!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! லிஜி Ready Player one புதிய உலகத்தில் வாழ்ந்த அற்புத அனுபவத்தை அள்ளித் தருகிறது ‘ ரெடி பிளேயர் ஒன் ’. 2045 ம் ஆண்டு . நிஜ உலகின் சலிப்பிலிருந்து விடுபட , மக்கள் தேர்ந்தேடுக்கும் மாய உலகம் ஒயாசிஸ் . விர்ச்சுவல் ரியாலிட்டி கேமின் மூலமாக இதனுள் நுழையலாம் . ஓயாசிஸை உருவாக்கிய ஹேலிடே மூன்று புதிர்களை இந்த விளையாட்டில் வைத்திருக்கிறார் . ‘ புதிர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஓயாசிஸ் சொந்தம் ’ என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார் . பல்லாண்டுகளாக விடுவிக்கமுடியாத புதிரை கண்டுபிடுத்து டெக் உலகின் கவனத்தை ஈர்க்கிறது ஹீரோவின் அணி . ஹீரோவுக்குப் போட்டியாக  ஐஒஐ நிறுவனம் ஆயிரக்கணக்கான நபர்களைக் களத்தில் இறக்குகிறது . யாருக்கு ஓயாசிஸ் கிடைத்தது என்பதே மீதிக்கதை   . எர்னஸ்ட் கிளைனின் நாவலைத் தழுவிய இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தி , உச்சம் . தான் நேசிக்கின்ற படங்களின் காட்சிகளை ஆங்காங்கே கோர்த்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் . சி . எஸ் . லீவிஸ் குழந்தைகளுக்கான கதை எழுதுவதில் தனித்துவம் கொண்

ஒரு படம் ஒரு ஆளுமை

படம்
  ஒரு படம் ஒரு ஆளுமை - லிஜி மான்செயூர் இப்ராஹிம் பிரான்ஸில் பாலியல்தொழில் நடைபெறுமிடத்தில் தந்தையுடன் வசித்து வருகிறான் மோசஸ் . தாயற்றவனுக்கு தந்தையும் வழிகாட்டாததால் பொய் , களவு , சூது , மாது என மோசஸ் அலைபாய்கிறான் . அப்போது மளிகை கடைக்காரர் இப்ராஹிம் அறிமுகமாகிறார் . இப்ராஹிமின் கடையில் புகுந்து பொருட்களை திருடுவது மோசஸின் வழக்கம் . மோசஸின் திருட்டை அறிந்தாலும் அவனை மகன் போல கருதி கண்டும் காணாமல் இருக்கிறார் . இச்சூழலில் திடீரென மோசஸின் தந்தை தற்கொலை செய்துகொள்ள , அனாதையாகும் மோசஸிடம் அளவற்ற அன்பு காட்டுகிறார் இப்ராஹிம் . புதிய கார் வாங்கி மோசஸூடன் அதில பயணிக்கிறார் . வழியில் நேரும் விபத்தில் இப்ராஹிம் மரணிக்கிறார் . உயிர்பிழைத்த மோசஸ் மளிகைக்கடையை எடுத்து நடத்துவதோடு படம் முடிகிறது . ஒரு சிறுவனுக்கும் முதியவருக்குமான ஆழமான நட்பை அழகாகச் செல்லுலாய்டில் சொன்ன இப்படத்தின் இயக்குநர் பிராங்காய்ஸ் டுபெய்ரான் . சலிமா பேகம் (Salima Begum) பள்ளிப்பருவத்தை கடந்து வந்த அனைத்து மாணவர்களின் வாழ்விலும் ரோல்மாடலாக சில தனித்துவமான ஆசிரியர்கள் இருப்பார்கள் . அத்தகை