இடுகைகள்

ஹிக்கிகோமோரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜப்பானை உருக்குலைக்கும் ஹிக்கிகோமேரி!

படம்
பிபிசி  ஜப்பானில் தொண்ணூறுகளில் புழங்கி வந்த பழக்கம் ஹிக்கிகோமேரி. இந்தப்பழக்கம் தற்போது அனைத்து நகரங்களிலும் பரவி வருகிறது. ஹிக்கிகோமேரிக்கு அர்த்தம் - உள்ளுக்குள் இழுத்துக்கொள்வது. அதாவது, இந்த பழக்கத்திற்கு உள்ளான இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு எங்கும் செல்லமாட்டார்கள். காரணம் சமூகத்திற்கு தன் தேவை என்ன என்பது போன்ற எண்ணங்கள் இவர்களுக்கு ஏற்படுவதுதான். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு இருப்பதால், இக்காலங்களில் வேலைக்கு போகாவிட்டாலும் சமாளித்து விடுகிறார்கள். இந்நிலை சிலருக்கு ஆறுமாதங்களுக்கு நீடிக்கும். அல்லது ஆண்டுகளுக்கு நீளும் வாய்ப்பும் உள்ளது. இது ஜப்பானில் இருந்து உருவானது என்று கூறப்பட்டாலும், வீடுகளை விட்டு வெளியேறாமல் சமூகத்திலிருந்து விலகி இருக்கும் பழக்கம் பிரான்ஸ்,துருக்கி போன்ற நாடுகளிலும் உருவாகி வருகிறது. இதுபற்றி ஆலன் டியோ என்ற ஆராய்ச்சியாளர் பத்தாண்டுகளாக ஆராய்ந்து வருகிறார். இதில் ஆராய்ச்சி செய்யத் தடையாக இருப்பது இளைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதுதான். அவர்கள்தான் சமூகத்திலிருந்து முழுக்க விலகி இருக்கிறார்களே? இப்பாதிப்பிற்கு காரணம் என்ன?

அசுரகுலம்: ஜப்பானைக் குலைக்கும் மனநிலை நோய்!

படம்
அசுரகுலம் ஹிக்கிகோமோரி ஜப்பானில் இளைஞர்களை ஆட்டிப்படைத்த இன்றும் நடப்பிலுள்ள மனநிலைக்கோளாறு இது. குறிப்பிட்ட துறையிலுள்ள இளைஞர்கள் தன் துறை சார்ந்து சாதிக்க ஏதுமில்லை என்ற நினைப்பு தோன்றினால் முடிந்தது. வீடு புகுந்து கதவைச் சாத்திக்கொண்டு ஆறுமாதம் காமிக், அனிமே என பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதில் அவர்களுக்கு நம்பிக்கை தோன்றினால் திரும்ப சமூகத்திற்கு தன் கதவுகளைத் திறப்பார்கள். இல்லையெனில் சிக்கல்தான். அவர்களுக்கும் பிறருக்கும். கடந்த பிப்ரவரியில் வந்த ஜப்பான் டைம்ஸ் செய்திப்படி, அங்கு ஹிக்கிகோமோரி பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமா? 6,13,000. இந்த பாதிப்பு பதினைந்து வயதிலிருந்து தொடங்குகிறது. 2015 ஆம்ஆண்டு ஆய்வுப்படி 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இப்பாதிப்பில் சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மனநிலை பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம். பள்ளிக்கோ, வேலைக்கோ செல்லாமல் வீட்டிலேயே ஆறுமாதம் அடைந்து கிடக்கும் பாதிப்பு வயது வந்தவர்களுக்கும் உள்ளது. இது பெரும் சமூக பாதிப்பாக மாறி வருகிறது என்கி