இடுகைகள்

சிண்ட்ரோம் கே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாம் உலகப்போரில் உருவான சிண்ட்ரோம் கே! - உண்மையா, உடான்ஸா

படம்
  இரண்டாம் உலகப்போரில் கண்டறியப்பட்ட சிண்ட்ரோம் கே என்பது நோயல்ல! உண்மை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி மருத்துவர்களால், சிண்ட்ரோம் கே என்ற நரம்பியல் சார்ந்த தொற்றுநோய் செய்தி உருவாக்கப்பட்டது. உண்மையில் மருத்துவர்கள்  யூதர்களை காப்பாற்ற  முயன்றே இப்படி நோய் பரவி வருவதாக பொய் சொன்னார்கள். இதன்மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூதர்களை தற்காலிகமாக பாதுகாக்க முடிந்தது.  9 நானாஸ் (The 9 Nanas) என்பது அமெரிக்க பெண்களின் ரகசியக் குழு! உண்மை.  இக்குழுவினர் கெடுதலான செயல்களை ஏதும் செய்யவில்லை. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்த 9 பெண்கள்தான் 9 நானாஸ் என்ற ரகசியக்குழு. இவர்கள், தினமும் அதிகாலை 4 மணிக்கு பொதுவான இடத்தில் சந்தித்து, குறிப்பிட்ட அளவு காசு சேர்த்து உணவு, உடைகளை ஏழைகளுக்கு வழங்கி வந்திருக்கின்றனர். இக்குழுவினர், 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கணவர்களுக்குக் கூட தெரியாமல் தங்களது அறச்செயல்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள்.  பாலின சமநிலை கொண்ட நாடு, ஐஸ்லாந்து! உண்மை. உலகளவில் எடுக்கப்பட்ட பாலின சமநிலை அறிக்கையில், ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து, நார்வ