இடுகைகள்

எலிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எலிகள் பற்றி நமக்கு என்ன தெரியும்?

படம்
தெரிஞ்சுக்கோ - எலிகள் எலிகள் என்றால் டிஸ்னியின் எலிகள் நினைவுக்கு வருகிறதா? அல்லது அறுவடை காலத்தில் நெற்கதிர்களை திருடி வைத்து பஞ்சத்தை உருவாக்குகிறது. பிளேக் போன்ற நோய்களை உருவாக்குகிறது. நாய்களைப் போலவே நம் காலுக்கடியில் குறுக்கும் மறுக்குமாக ஓடினாலும் எலிகளைப் பற்றி நாம் அறிந்தது மிக குறைவுதான். கஷ்டமோ நஷ்டமோ அத்தனை பிரச்னைகளையும் கடந்து குட்டி போட்டு ரேஷன் கார்டு வாங்காமல் அடுத்தவன் சோற்றில் கைவைத்து பிழைத்து வாழும் எலியை மக்கள் மறக்கவே முடியாது. ஜெனஸ் ராட்டுஸ் இனத்தில் பழுப்பு நிற எலிகள் உட்பட 51 இனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றும் உடலில் செயலில் மாறுபட்டவை. பழுப்பு நிற எலியின் எடை 0.8 கி.கி என பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பௌண்டு எடை கொண்ட எலியை யாராவது பார்த்து பதிவு செய்தால் 500 டாலர்களை தான் பரிசளிப்பதாக ஆராய்ச்சியாளர் ராபர்ட் காரிகன் கூறியுள்ளார். சாதாரண எலி 2.5 செ.மீ. அளவுள்ள துளையை எலிகள் உருவாக்குகின்றன. எலிகள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் ஒரு மணிநேரத்திற்கு ஒன்று என்று என உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன. ஆப்பிரிக்க வயல்களில் எலிகள் ஏறத்தாழ 15 சதவ