உடற்பயிற்சியை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?
சும்மா செய்யுங்க ப்ரோ இதயத்தசைக்கு நல்லது, மண்ணீரலுக்கு மிக நல்லது என்றெல்லாம் உடற்பயிற்சியை சிலர் கூறுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். எளிமையான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.அவ்வளவுதான். பலாபலன்களை ஆராய்ந்து படிப்பவர்கள், உடற்பயிற்சியை செய்ய மாட்டார்கள் என மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் சேகர் விளக்கி, நோ ஸ்வெட் ஹவ் சிம்பிள் சயின்ஸ் மோட்டிவேஷன் கேன் பிரிங் யூ எ லைஃப்டைம் ஃபிட்னெஸ் என்ற நூலைக்கூட எழுதியிருக்கிறார். நாளையைப் பற்றிய யோசனை வேண்டாம். இன்று உடற்பயிற்சி செய்யுங்கள். நாளைக்கு வேலையை நாளை பார்ப்போம். எளிய உடற்பயிற்சி போதும் இணையத்தில் அனடோலி என்ற உடற்பயிற்சி வல்லுநர் இருக்கிறார். ஜிம்களுக்கு போய் அங்கு போலியாக எடையைத் தூக்கி வீடியோபோடும் ஆட்களை கிண்டல் செய்வதே அவர் வாடிக்கை. அவர் அளவுக்கு பார்பெல் தூக்கி பயிற்சி செய்யவேண்டியதில்லை. புஷ் அப் எடுக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சியை நீங்கள் தண்டனையாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போதுதான் அதை தொடர்ந்து செய்யமுடியும். பழக்கமே சிறக்கும் கா...