கலையை ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடங்கவேண்டும்!
நேர்காணல் கலை ஆய்வாளர் சர்யூ வி தோஷி எழுத்து, பயணம், உரை, திட்டமிடல், வழிகாட்டுதல் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறீர்களே? சுற்றுலா துறையில் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்கான கமிட்டியில் கூட பங்காற்றியுள்ளேன். எனக்கு பல்வேறு செயல்பாடுகளை செய்யப்பிடிக்கும். உரை, பேச்சு, கண்காட்சி, கலை விழாக்கள், நாடகம், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என பல்வேறு செயல்பாடுகளிலும் பங்கேற்றுள்ளேன். நிறைய மனிதர்களை சந்திப்பது பிடித்தமானது. எனது வீட்டில் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடுவதற்கான இடமாகவே இருந்துள்ளது. என்னுடைய மாமியார் வீடு செவ்வியல் இசை, மராத்தி நாடகங்களை போற்றுபவர்கள். இது கலைக்கான காலம். கலையில் புதிய ஆற்றல் உருவாகி வருகிறது. இதன் காரணமாகவே துக்ளக் நாடகத்திற்கான உடை வடிவமைப்பை நான் செய்யும் சூழல் உருவானது. மும்பையைச் சேர்ந்த சபயாச்சி முகர்ஜி உங்களுக்கு கலை பற்றிய தொலைநோக்கு பார்வை உள்ளதாக கூறியுள்ளார்? நேரடியான பார்வையை தாண்டி கலைப்படைப்பில் மறைந்துள்ள மர்மங்களை கண்டறிய முயல்கிறேன். அதைத்தான் அவர் கூறியுள்ளார் என நினைக்கிறே...