இடுகைகள்

ஏரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

நவீன சூழலியலின் தந்தை - ஜி எவ்லின் ஹட்சின்சன்

படம்
  ஜி எவ்லின் ஹட்சின்சன் (G.Evelyn hutchinson 1903 -1991) உயிரியலாளர், ஆசிரியர் நவீன சூழலியலின் தந்தை என்று என்னை அழைக்கிறார்கள்.  எனது மாணவர்கள் தான் சூழலில் உள்ள உயிரினங்களை கணிக்கும் கணிதமாதிரியை உருவாக்கினார்கள்.  இங்கிலாந்தில் பிறந்த ஹட்சின்சன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றார். பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு ஆசிரியராக பணிக்கு சென்றார். பின்னாளில், அமெரிக்காவிற்கு சென்று யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.  ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா. வட அமெரிக்கா என பல்வேறு பகுதிகளில் சூழலியல் பற்றி ஆராய்ந்தார் ஹட்சின்சன். குறிப்பிட்ட சூழலில் உயிரினங்கள் வாழ்வதற்கான பல்வேறு காரணங்களை தேடினார். ஏரிகளைப் பற்றி ஆய்வு செய்த முதல் அறிவியலாளர்  (limnologist), எவ்லின் ஹட்சின்சன் தான். கோட்பாட்டு உயிரியலாளராக ஆராய்ச்சிகளை செய்தவர், படிம விலங்கின மாதிரிகளைக் கொண்டு  சூழலுக்கும் அவற்றுக்குமான தொடர்பை அறிய முயன்றார். வெப்பமயமாதலை முன்னரே கணித்தவர் என சூழலியலில் கருதப்படும் ஆராய்ச்சியாளர் எவ்லின் ஹட்சின்சன்.  https://www.oxfordbibliographies.com/view/document/obo-97801998

பிடித்த பிடியை விடாத உப்புநீர் முதலைகள்!

படம்
 உப்புநீர் முதலைகள் அறிவியல் பெயர் குரோகோடைலஸ் போரோசஸ்  ஆயுள் 70 ஆண்டுகள் இவைதான் உலகிலேயே ஊர்வனவற்றில் பெரிய உயிரினம் 23 அடி தூரத்திற்கு வளரும் உப்புநீர் முதலை என பெயரிட்டு அழைத்தாலும் உப்புநீர், நன்னீர் என இரண்டிலுமே வாழும் இயல்பு கொண்டவை.  நீருக்கு அடியில் ஒருமணி நேரம் இருக்கும் திறன் கொண்டது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதி, நியூகினியா தீவுகள், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உப்புநீர் முதலைகளை எளிதாக பார்க்கலாம்.  முதலைகள் 64 முதல் 68 பற்களைக் கொண்டிருக்கும். இவை கீழே விழுந்தாலும் எளிதில் முளைத்துவிடும் தன்மை கொண்டவை. வலுவான தாடைகளைக் கொண்டவை. ஒருமுறை இரையைக் கடித்தால் அப்பிடியை எளிதில் விடாது.  source Time for kids 

வலசைப் பறவைகளைப் பற்றி அறிய உதவும் ஆய்வு நூல்! - ஏ.சண்முகானந்தம்

படம்
  வலசை செல்லும் பறவைகளின்  வாழ்விடச்சிக்கல்கள் ஏ.சண்முகானந்தம் பாரதி புத்தகாலயம் 160 காடு, உயிர் ஆகிய இயற்கை சார்ந்த மாத இதழ்களை நடத்திய, நடத்தி வரும் ஏ.சண்முகானந்தம் எழுதிய நூல் இது.   நூலில் பல்வேறு பறவைகள், அதன் சரணாலயங்கள், ஏரிகள், சதுப்புநிலங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. பறவைகள் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையிலான நிறைய தகவல்கள் உள்ளன. நூல்களை இன்னும் அறிவியல் தகவல்களை சேர்த்து மேம்படுத்தியிருக்கலாம் என்பதை  வாசிக்கும் போது யாவரும் உணர முடியும்.  வலசை செல்லும் பறவைகளைப் பற்றிய தகவல்களை ஆராய்ச்சி செய்பவர்களை இந்த நூலை வாங்கிப் படித்தால் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் தகவல்களை ஆசிரியர் கூறிய இடங்களுக்கு சென்று கூட தெரிந்துகொள்ளலாம்.  வலசை என்றால் என்ன, எதற்காக பறவைகள் வலசை செல்கின்றன என்பதுபோன்ற தகவல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஏ.சண்முகானந்தம் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பிறர் எளிதாக புரிந்துகொள்வது கடினம். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர், அதற்கான மொழியில் நூலை எழுதியிருக்கிறார். பயப்படவேண்டியதில்லை. அடிப்படையாக என்ன தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை நாம் தெரிந்துகொண

தண்ணீரைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டி! அனுபம் மிஸ்ரா -காந்தியவாதி, சூழல் செயல்பாட்டாளர்

படம்
  தண்ணீர் குரு - அனுபம் மிஸ்ரா மகாராஷ்டிரத்தின் வார்தா நகரில் பிறந்த ஆளுமை இவர். புகழ்பெற்ற இந்தி கவிஞர் பவானி பிரசாத் மிஸ்ராவின் மகன். ஆனால் அப்பாவின் வழியில் எதையும் செய்யாமல் தனக்கான செயல்பாட்டை தீர்மானமாக வகுத்துக்கொண்ட மனிதர்.  நீர்சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு முறைகளை தன் ஆயுள் முழுவதும் பிரசாரம் செய்தார். எப்படி மெல்லிய குரல் கொண்ட காந்தியின் கருத்து பல கோடி மக்களிடம் சென்று சேர்ந்ததோ அதேபோல்தான் தனது செயல்பாடு வழியாக தனது பெயரை மக்களை சொல்ல வைத்தார்.  வறட்சியில் பாதிக்க ஏராளமான மாநிலங்களுக்கு களப்பணியாக சென்றார். அங்கு சென்று, அம்மக்கள் தொன்மைக் காலத்தில் என்னென்ன முறையில் மழைநீரை சேமித்தார்களோ அதனை அடையாளம் கண்டார். இதனை ஆய்வு செய்வதோடு, நூலாகவும் எழுதினார். இப்படித்தான் எட்டு ஆண்டுகள் ஆய்வு முடிவில் ராஜஸ்தான் நீர்நிலைகள் பற்றி நூல் ஒன்றையும் எழுதினார். நூல் எழுதுவதும் அதனை வெளியிடுவதும் முக்கியம் அல்ல. அதில் முக்கியமான வேறுபாடு, ஆங்கிலம் தெரிந்தாலும் கூட மக்களுக்கு விஷயத்தைச் சொல்லுவதற்கு ஏதுவாக இந்தியில் அனைத்து நூல்களையும் எழுதினார்.  தான் எழுதிய அனைத்து நூல்களையும் கிரியேட்

குளிரான குளத்தில் ஏரியில் குளித்தால் ஆபத்தா?

படம்
                ஜில்லென்ற குளத்தில் குளிக்கலாமா ? இன்று உலகம் முழுக்க உள்ள வினோதமான துணிச்சல் கொண்ட மனிர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ? மிகவும் குளிர்ச்சி கொண்ட குளத்தில் ஏரியில் குதித்து குளித்து மகிழ்ச்சியுடன் ஏறி வருகிறார்கள் . எதற்கு இப்படி செய்கிறார்கள் என்றால் அப்படி செய்யும்போது எனது மூளை அமைதியாக உள்ளது . நான் எனது உடல் மீது கவனம் செலுத்த முடிகிறது என்று கூறுகிறார்கள் . புதிதாக விளக்கம் இருக்கிறதல்லவா ? இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்டில்டன் இந்த வினோதமான பழக்கத்தை செய்பவர்தான் . இவர் , அன்டார்டிக் பகுதியில் கடந்த ஆண்டு ஒரு கி . மீ . தூரம் ரத்தத்தை உறைய வைக்கும் நீரில் நீந்தியுள்ளார் . இதற்கு ப்ரீசரில் தினசரி உட்கார்ந்து பயிற்சி வேறு எடுத்துள்ளார் . இன்று கொரோனா பிரச்னை காரணமாக உலகமெங்கும் உள்ள பல்வேறு ஏரி குளங்களில் செல்லுவதற்கு மக்களுக்கு அனுமதி கிடையாது . சரியான டைம் கிடைச்சிருச்சேய் என பல லட்சம் மக்கள் ஜில் குளங்களுக்கு குளிக்க சென்று வருகிறார் . அதிலும் இந்த எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகம் . இதற்கென வின்டர் ஸ்விம்மிங் அசோசியேஷனும் கூட உண்டு . சீனா

வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு

படம்
Scroll.in பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா? வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக். அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ள