இடுகைகள்

சிஐஏ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பேற்றினால் கொலை செய்ய ரெடியாகும் நாயகி! ஜோல்ட் - கேட் பெகின்சோல்

படம்
  ஜோல்ட் 2021 - கேட் பெகின்சோல்  ஜோல்ட் ஆங்கிலம் யூட்யூப் விஆர் ஃபிலிம்ஸ் ஒரு குழந்தைக்கு இயல்பாகவே மூளையில் கார்டிசோல் என்ற வேதிப்பொருள் அதிகம் சுரக்கிறது. இதனால், அவளுக்கு யாராவது வெறுப்பேற்றுவது போல தோன்றினால், சீண்டினால் அவர்களை அடித்து உதைக்க தொடங்குகிறாள். சமூகமே ஏராளமான முட்டாள்களை கொண்டதுதான் என்பதால், அவளை வார்த்தையால், உடலால் சீண்டுபவர்களை விட்டுவைப்பதில்லை. அடித்து கை கால்களை முறிக்கிறாள். இதனால் அவளை மருத்துவர்கள் சோதித்து ஆய்வக எலி போல பாதுகாக்கிறார்கள். மனிதர்கள் இப்படியான வன்முறை எண்ணம் கொண்டிருந்தால், யார் வருகிறார்களோ இல்லையோ   சிஐஏ வந்துவிடும். அவர்கள்தான் நாயகி கேட் பெகின்சோலுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பணத்தை கொடுத்து வருகிறார்கள். கண்காணிக்கிறார்கள். அவளை தங்களது திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். இந்த நேரத்தில் நாயகி, அவர்களிடமிருந்து விலகிப் போகிறாள். தனக்கான வாழ்க்கையை தானே தேடுகிறாள். அந்த முயற்சியில் ஜஸ்டின் என்பவன் டேட்டிங் காதலனாக கிடைக்கிறான். அவனுடன் அவளுக்கு சிக்கல் ஏற்படாததால் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் பார்த்தா

செக்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் உளவு அமைப்பு ஏஜெண்ட்! தி நவம்பர் மேன்

படம்
              தி நவம்பர் மேன் ரஷ்யாவுக்கு உளவு அமைப்பிலுள்ளவர்களின் சதியால் அனுப்பப்பட்டு சிக்கிக்கொண்டு விடும் பெண்ணை மீட்க இன்னொரு ஏஜெண்ட் செல்கிறார் . ஆனால் அந்த திட்டம் சொதப்ப அவரின் உயிரும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறது . அதிலிருந்து மீள அவரிடம் பயிற்சி பெற்ற இன்னொரு ஏஜெண்ட் உதவுகிறார் . இதோடு ரஷ்ய அதிபராக வாய்ப்புள்ளவரின் செக்ஸ் ஊழல்களை வெளியே கொண்டு வரும் திட்டமும் அமெரிக்காவின் உளவுப்படைக்கு உள்ளது . அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை பரபரவென வேகமாக சொல்லியிருக்கிறார்கள் . பியர்ஸ் பிராசனனின் உணர்ச்சிகளை உள்ளடக்கிய நடிப்புதான் படத்தின் பெரும் பலம் . யாருக்கும் தெரியாமல் திருமண வாழ்க்கையை மறைத்து வைத்திருப்பவரை ரஷ்யாவுக்கு உளவு அமைப்பு அனுப்பி வைக்கிறது . யாருக்காக நடாலியா என்ற அவரது மனைவியும் ஏஜெண்டுமானவரை மீட்கத்தான் . ஆனால் இதை மோப்பம் பிடித்த ரஷ்ய ஆட்கள பின்தொடர அமெரிக்க உளவு ஆட்களால் நடாலியா கொல்லப்படுகிறார் .    கொதித்து எழும் பீட்டர் டெபேரோ ( பியர்ஸ் பிராசனன் ) தனது அமைப்பைச் சேர்ந்தவர்களின் உள்ளடி வேலைதான் இதற்கு காரணம் என நொடியில் தெரிந்துகொண

புறாவாகி துப்பறியும் அமெரிக்காவின் உளவு ஏஜெண்ட் - ஸ்பைஸ் இன் டிஸ்கைஸ்

படம்
  ஏஜெண்ட் ரெஸ்லிங் உளவுத்துறை ஏஜெண்டுகளிலேயே தைரியமானவர். அனைத்து விஷயங்களையும் தனியாக சென்று ராணுவம் போல எதிரிகளைத் தாக்கி விஷயங்களை கொண்டு வருபவர். அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத எதிரியாக வருகிறார் ரோபோ ஹேண்ட். ரெஸ்லிங்கின் முகத்தை ஜெராக்ஸ் செய்து பல அரசு அதிகாரிகளை விஞ்ஞானிகளை போட்டுத்தள்ளுகிறார். கூடவே உளவுத்துறை ஏஜெண்டுகளின் டேட்டாபேஸை கொள்ளையடித்து அத்தனை பேரையும் அடையாளம் கண்டு கொல்லத் தொடங்குகிறார். இதனை ரெஸ்லிங் அறியாமல் இருக்கிறார். அவருக்கு விஷயம் புரிபடும்போது போலீஸ் அவரை கைது செய்ய கொலைவெறியோடு அலைகிறது.    இந்நிலையில் அவருக்கு ஆயுதங்களை உருவாக்கிக் கொடுக்கும் பணியில் இருக்கும் வால்டர், ரெஸ்லிங் அவனுடைய கருவிகளை பிடிக்கவில்லை என்று கூறியதால் வேலை இழக்கிறான். அதற்காக ரொம்பவெல்லாம் கவலைப்படவில்லை. கொரியன் காதல் படங்களைப்பார்த்துக்கொண்டு புறாக்களை வளர்த்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறான்,  ரெஸ்லிங் தனக்கு வால்டர் மட்டுமே உதவி செய்யமுடியும் என புரிந்துகொண்டு அவன் வீட்டுக்குப் போகிறார். அங்கு நடைபெறும் தாறுமாறு கோளாறுகளால் ரெஸ்லிங் புறாவாக மாறி

துப்பாக்கி மட்டுமே முழங்கும் ஆக்சன் படம்! - பேட்டில் ட்ரோன்

படம்
  பேட்டில் ட்ரோன் - ஆங்கிலம் 2018 இயக்கம் - மிட்ச் குட் ஒளிப்பதிவு இசை சிஐஏவில் கேப்டனாக இருந்த விலகியவர் ரெக்கர். இவர் காசு கொடுத்தால் சில நாடு கடந்த பிரச்னைகளை முடித்துக்கொடுக்கும் விஷயங்களைச் செய்கிறார். இவருக்கென துப்பாக்கி, மல்யுத்தம் என அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற கொலைகாரக் கூட்டம் உள்ளது. இவர்கள் ரஷ்யாவில் ஒருவரைக் கொன்று பணக்காரர் ஒருவரை அமெரிக்க அரசுக்காக மீட்டு கொடுக்கின்றனர். ஆனால் சிஐஏவில் உள்ள சிலர் இவர்களின் மிதமிஞ்சிய ஆற்றலைக் கண்டு பயப்படுகின்றனர். எனவே இவர்களை வலையில் சிக்க வைக்கின்றனர். அதுதான் ட்ரோன்களோடு சண்டையிடுவது., உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகில் உள்ள தொழிற்சாலையில் ஆயுதங்களை மீட்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இவர்களை ட்ரோன்கள் கொல்ல முயற்சிக்கின்றன. இவற்றை ரெக்கர் குழு எப்படி அழித்தனர், உயிரோடு மீண்டனர் என்பதைக் சொல்லுகிறது படம். ஆக்சன் படம் என்றால் துப்பாக்கிகள் எண்ணற்ற முறை வெடித்தால் போதும் என்ற நம்பிக்கையில் எடுத்த படம். எனவே புத்திசாலித்தனமான விஷயங்களை இயக்குநர் யோசிக்கவே இல்லை. எப்படி ட்ரோன்களை வீழ்த்துகிறார்கள் என்பதும் க