துப்பாக்கி மட்டுமே முழங்கும் ஆக்சன் படம்! - பேட்டில் ட்ரோன்




 Dan Southworth on Twitter: "#scfy #sciencefiction #actiongenre ...




பேட்டில் ட்ரோன் - ஆங்கிலம் 2018

இயக்கம் - மிட்ச் குட்

ஒளிப்பதிவு

இசை


சிஐஏவில் கேப்டனாக இருந்த விலகியவர் ரெக்கர். இவர் காசு கொடுத்தால் சில நாடு கடந்த பிரச்னைகளை முடித்துக்கொடுக்கும் விஷயங்களைச் செய்கிறார். இவருக்கென துப்பாக்கி, மல்யுத்தம் என அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற கொலைகாரக் கூட்டம் உள்ளது. இவர்கள் ரஷ்யாவில் ஒருவரைக் கொன்று பணக்காரர் ஒருவரை அமெரிக்க அரசுக்காக மீட்டு கொடுக்கின்றனர். ஆனால் சிஐஏவில் உள்ள சிலர் இவர்களின் மிதமிஞ்சிய ஆற்றலைக் கண்டு பயப்படுகின்றனர். எனவே இவர்களை வலையில் சிக்க வைக்கின்றனர். அதுதான் ட்ரோன்களோடு சண்டையிடுவது., உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகில் உள்ள தொழிற்சாலையில் ஆயுதங்களை மீட்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இவர்களை ட்ரோன்கள் கொல்ல முயற்சிக்கின்றன. இவற்றை ரெக்கர் குழு எப்படி அழித்தனர், உயிரோடு மீண்டனர் என்பதைக் சொல்லுகிறது படம்.

ஆக்சன் படம் என்றால் துப்பாக்கிகள் எண்ணற்ற முறை வெடித்தால் போதும் என்ற நம்பிக்கையில் எடுத்த படம். எனவே புத்திசாலித்தனமான விஷயங்களை இயக்குநர் யோசிக்கவே இல்லை. எப்படி ட்ரோன்களை வீழ்த்துகிறார்கள் என்பதும் கூட தற்செயலாக நடைபெறுகிறது. அடுத்தும் அதே போல தாக்கி ட்ரோன்களை வீழ்த்துகிறார்களா என்றால் இல்லை.

படம் அப்படியே வெறுமையாக போகிறது. படத்தை எதற்காக பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூட நமக்கு பொறுமை போகும்போது படம் முடிவுக்கு வருகிறது.

கோமாளிமேடை டீம்