கோடையில் கொரோனா பரவுமா?
giphy |
கொரோனா இறப்பில் இத்தாலி சீனாவை முந்தி முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. இறப்பை தடுக்க முடியுமா என்பதை விட பரவுவதை தடுக்கவே ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். அதனால் பல்வேறு சூழல்களில் கொரோனா வைரஸ் பரவுமா என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர்.
உடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீர்த்திவலைகள் வழியாக பரவும் கொரோனாவை எதிர்க்கும் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். ”கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்சா வைரஸ் போலவேதான் பரவுகிறது. நீர்த்திவலைகளை வழியாக பரவும் அதன் வேகத்தை கட்டுப்படுத்த சூழல்களின் பங்கு உண்டா என ஆராய்ந்து வருகிறோம் ” என்கிறார் ஆய்வாளர் சவீஸ் சஃபாரியன்.
வைரஸ்களின் மேலோட்டை வெப்பம் பாதிக்குமா என ஆராய்ச்சி செய்வதற்காக இரண்டு லட்சம் டாலர்களை உதவித்தொகையாக சவீஸ் பெற்றிருக்கிறார். வைரஸ் தானாக எதையும் செய்யும் திறன் கொண்டது அல்ல. பிற உயிரிகளின் செல்களில் நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கி தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மேற்சொன்ன ஆய்வுக்காக வைரஸ்களின் மேலோடுகளை செயற்கையாக உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக, இதில் வைரஸ் மரபணுக்கள் இருக்காது. எனவே, வைரஸ் பாதிப்பு ஏற்படாது.
சவீஸ், ஆர்என்ஏ வைரஸ்கள் பற்றி நீண்டகாலமாக ஆராய்ந்து வருகிறார். தற்போது வைரஸ் மூலக்கூறுகளுக்காக ஆப்டிகல் ட்வீசர்ஸ் எனும் பொருளை உருவாக்கியுள்ளனர். ஏசி அறையிலும், சாதாரண அறை வெப்பநிலையிலும் கொரோனா பரவுகிறது. இதனால் இந்த ஆய்வு மூலம் கண்டுபிடிக்கும் விஷயங்கள், அரசு கொள்கைகள் வகுக்க உதவும்.
நன்றி - லைவ் சயின்ஸ்