உடலைக் காக்கும் பசி!






hungry mr bean GIF
giphy







மிஸ்டர் ரோனி

பசி எடுக்கும்போது வயிற்றிலிருந்து பல்வேறு ஒலிகள் கேட்கிறதே?

டிடிஎஸ் மிக்சிங் செய்யும்போது ஸ்டூடியோவில் வரும் ஒலியெல்லாம் கேட்கும். காரணம், உங்கள் குடல் இயல்பாகவே உணவை குடலுக்கு தள்ளிவிட முயற்சிக்கும். உணவு இருக்கும்போது சத்தம் வராது. உணவு இல்லாமல் வயிறு காலியாக இருக்கும்போது இந்த சத்தம் உங்களுக்கு மட்டுமன்றி, பக்கத்து சீட்டுக்காரருக்கும் கேட்கும். உடனே ஓடிப்போய், அருகிலுள்ள ஓட்டலில் சாப்பிட்டு விடுங்கள். வயிற்றில் வரும் அரவை மில் சத்தத்தை இப்படித்தான் நிறுத்த முடியும்.

உணவு இல்லாத பல்வேறு பொருட்களை ஒருவர் சாப்பிடக் காரணம் என்ன?

உடல் உங்களுக்கு பசி, ஊட்டச்சத்து பற்றிய பல்வேறு சமிக்ஞைகளைக் கொடுக்கும். அதில் ஒன்றுதான் பற்றாக்குறையான சத்துக்களை நிறைவு செய்ய மாவுக்கற்கள், சாக்பீஸ் போன்றவற்றை சிலர் சாப்பிடுவார்கள். அவர்களைக் கேட்டால் ஏன் என்று சொல்லத் தெரியாது. அவர்களை சோதித்து பார்த்தால் உடலில் சத்துகள் பற்றாக்குறையாக இருப்பது தெரியும். ஆனால் இப்படி சாப்பிடும் பொருட்களால் மூளையில் டோபமைன் சுரக்கலாம். ஆனால் உடல் ஆலமரம் போல விரிவடைவதற்கான சிக்கல் இருக்கிறது. காரணம் நாம் வெறித்தனமாக வாங்கித் தின்னும் தீனியான பிங்கோ, சீட்டோஸ் ஆகிய சிப்ஸ் வகைகள் உப்பும், கொழுப்பும் நிறைந்தவை உடல் பருமனை ஏற்படுத்துபவை.


உணவுப் பொருட்களில் ஃபிளேவர் எப்படி உருவாக்குகிறார்கள்?

இன்று உங்களை உயரமாக்கும், வலுவாக்கும் பொருட்களில் பல்வேறு ஃபிளேவர்கள் உண்டு. அதாவது வெனிலா, சாக்லெட், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி என ஃபிளேவரை விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். இன்று சந்தையில் கிடைக்கும் பல்வேறு ஊட்டச்சத்து பானங்கள் சாக்லெட் ஃபிளேவரில் மட்டுமே கிடைக்கும்.

பொதுவாக உணவைப் பார்த்த தும் நம்மை ஈர்ப்பது அதன் பளிச்சென்ற வண்ணம்தான். அப்புறம்தான் நறுமணம், அதன் சேர்மானங்கள் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கிறது.


நாம் அறியாத புதிய சுவை இருக்கிறதா?

கால்சியம் உள்ள சாக்பீஸின் சுவை என்பது புதியது. அதனை யாரும் பயன்படுத்தவில்லை என்று கூறமுடியாது. எலிகள் இவற்றை அறிந்துள்ளன. ஏன் மனிதர்களும் கூடத்தான். இல்லையெனில் இதனை நாம் இப்போது எழுதியிருக்க முடியாதே? உலோக சுவை சார்ந்த சுவைகளை தனியாக  பிரித்து வைத்துள்ளனர்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்














பிரபலமான இடுகைகள்