பீர் பெல்லிக்கு என்ன கார ணம் அறிவீர்களா?




Man, Smoke, Beer, Wheat, Smoking, Benefit From
பிக்சாபே





பீர்

பிற மதுபானங்களை குடிக்காத நேர் வகிடு எடுத்து சீவிய நல்லவர்கள் கூட பீர்தானே ஆல்கஹால் குறைவு என கல்பாக எடுத்து அடிப்பார்கள். அந்தளவு நல்லவனா கெட்டவனா என பலருக்கும் புரியாத மதுபானம், பீர். இதனை மனிதர்களே தயாரித்தனர் என்பது நமக்கான பெருமை. 

பொதுவாக அனைத்து பானங்களும் எப்படி தயாரிக்கப்படுகின்றன? தானியங்கள் அல்லது பழங்கள்தானே! இதுவும் அப்படித்தான். தானியங்களை சூடான நீரில் ஊறவைத்து அவற்றிலுள்ள சர்க்கரையைப் பெற்று பீர் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு பதப்படுத்தும் நிலைகள் உள்ளன. 

இன்று காமராஜர் சாலைகளிலுள்ள பேக்கரிகளில் ஃப்ரூட் பீர் ஏகபோகமாக விற்கப்படுகிறது. அதனை அனிமேஷன் படிக்கும் அண்ணாத்தைகள் வாங்கிப் பருகி மகிழ்கின்றனர். இதில் ஆல்கஹாலின் அளவு குறைவு. எனவே டாஸ்மாக்கில் வைக்கப்படவில்லை. அப்படி வந்தாலும் மால்களில் உள்ள எலைட் கடைகளில் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். நம் அந்தஸ்து கூட்டத்தில் முட்டிமோதி கெட்டுவிட்டால் என்னாகும்? ஜென்டில்மேனாக பீர் குடித்தாலே வரலாறு நம்மை மறக்காது. 

பீரில் ஆன்டி ஆக்சிடன்டுகள், மினரல்கள் பல்வேறு விஷயங்கள் உள்ளதுதான். ஆனால் அபரிமிதமான சர்க்கரை கொடுக்கும் கலோரியும் உள்ளதால் இது பிற மதுபானங்களை விட மேலானது என்று சொல்லிவிட முடியாது. கூடவே, சேட்டன் கடை நேந்திரம் சிப்ஸ், காசித்தேவர் கடை கார முறுக்கு என சைட்டிஷ்கள் மொத்தையாக தின்றால் உங்கள் உடலில் பீர் பெல்லி உருவாகிவிடும். ஆனால் குடும்பஸ்தர்களின் அடையாளமே அன்பான செல்ல தொப்பைதானே! தொப்பை என்று கீ படத்தில் ராஜேந்திர பிரசாத் கூட சொல்லமாட்டார். யெஸ் பீர் பெல்லி என்றே நாமும் அழைப்போம்.
கடந்த 2014ஆம் ஆண்டில் உலகிலுள்ள ஒரு இளைஞருக்கு தலா 35 லிட்டர் பீர் என கணக்கு போட்டு பீரை புளிக்க வைத்து அதாவது தயாரித்து கடைக்கு அனுப்பியிருக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.

எப்போதும் பீரை டின்களில்தான் வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்? ஏன் தெரியுமா? பிற கண்ணாடி அல்லது வேறு பொருட்களில் பீரை வைத்தால் கெட்டுப்போய்விடும். அதற்காக அதனை டின்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இம்முறையை ஸ்கன்கிங் என்று அழைக்கின்றனர்.

பீரை புளிக்கவைத்து பதப்படுத்த யீஸ்டைப் பயன்படுத்துகிறார்கள். அதிலுள்ள வகைகளைப் பார்ப்போம்.
லைட் லாகர்
இந்தவகை பீரில் ஆல்கஹாலுக்கு குறைவு கிடையாது. அதனை உற்பத்தி செய்யும் தானியம் குறைவு. ஏராளமான அளவில் சர்க்கரையை உள்ளே கொட்டி அதற்கு ஈடு செய்கிறார்கள். சுகந்த அகர்பத்தியின் மணம் வரும் என எதிர்பார்க்காதீர்கள். சிம்பிளான பீர் அந்தே.


லாகர்
குளிர்ச்சியான நிலையில் பீரை வைத்து பாதுகாத்து இளைஞர்களுக்கான அனுப்பி வைக்கிறார்கள். லாகர் என்றால் ஜெர்மனில் பாதுகாத்து வைப்பது என்று பொருள். இதில் 5 சதவீத ஆல்கஹால் உள்ளளது. 

கோதுமை பீர்

வாற்கோதுமை கள் என மதன்கார்க்கி எழுதியது போல பாடலாம். அப்படி ஒரு இனிமையான மணம் கொண்ட பீர். கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கோதுமையின் இந்த பீரில் அதிகம் என்பதால், சந்தோஷமாக ஒரே கல்ஃபில் நீங்கள் குடிக்கலாம்.

ஆலே

லாகர் வகை பீரைப் போலவேதான் இருக்கும். அதாவது, சுவையில். ஆனால் நிறம், மணம் ஆகியவற்றில் நிறைய அம்சங்கள் வேறுபடும். 

ஸ்டவுட்

ஆறு சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் இது. நல்ல கருப்பு நிறத்தில் இருக்கும். பதப்படுத்தும் முறைகளால் இந்த நிறம் பெறுகிறது. மற்றபடி சுவையில் செம ஸ்ட்ராங்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பீர் கோதுமை மற்றும் பார்லி தானியங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனை அரிசி, சோளம் கொண்டும் ஆப்பிரிக்காவில் உருவாக்குகின்றனர். மேற்சொன்ன தானியங்களை மென்று அந்த எச்சிலை பீரை செய்யவும் பயன்படுத்தும் முறையை சில இனக்குழுவினர் செய்கின்றனர்.