இடுகைகள்

கிளாடியா கோல்டின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆராய்ந்த பொருளாதார அறிஞர்!

படம்
  கிளாடியா கோல்டின்  claudia goldin கடந்த அக்.9 அன்று அதிகாலை 4.30 இருக்கும். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவருக்கு பொருளாதார ஆய்வுக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி கூறப்பட்டது. இந்த வகையில் அப்பரிசை பெறும் மூன்றாவது பெண்மணி கிளாடியா. எழுபத்தேழு வயதாகும் கிளாடியா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். இந்த வகையில் கூட அவர் முதல் பெண்மணி. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு, பிரச்னைகள், பாலின பாகுபாடு, சம்பளம் ஆகியவற்றை பற்றிய ஏராளமான ஆய்வுகளை கிளாடியா செய்துள்ளார். நாம் எப்போதும் குடும்பத்தில் உள்ள ஆண்கள், ஆண் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். திருமணமான, விதவையாக உள்ள பெண்களைப் பற்றி, அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. வரலாற்றிலும் அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி அறிய வேண்டும் என்றார் கிளாடியா.  நான் யாருக்கும் எந்த அறிவுரையையும் கூறுவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எனது மாணவர்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு செலவழிக்க நிறைய நேரம் கையில் இருந்தால், அதை சோதனை செய்ய புதிய விஷயங்களை அறிய பயன்படுத்துங்கள்.  -சா