இடுகைகள்

குழந்தை திருணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களின் வயதை அதிகரிப்பதால் பாலியல் பாகுபாடு குறைந்துவிடாது! - ஆண் 21, பெண் 18 வயது விவகாரம்!

படம்
        குழந்தை திருமணம் -cbs news       பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக அதிகரிக்க மத்திய அரசு யோசித்து வருகிறது. இதுபற்றி அண்மையில் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த விவகாரம் பற்றி மது மெஹ்ரா, ஜெய்னா கோத்தாரி ஆகிய இருவரிடம்(குழந்தை திருணம் தடுப்பு சார்ந்த செயல்பாட்டாளர்கள்) பேசினோம். பெண்களின் திருமண வயதை உயர்த்துவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? மது பதினெட்டு வயதாகுவதற்கு முன்னரே பெண்கள் தங்கள் கணவர்களை காதலித்து கைபிடிக்க நினைத்தால், பெற்றோர்கள் அவர்களை பிரிக்க மைனர் பெண்ணை கடத்திவிட்டார்கள் என்று புகார் கொடுத்து தன் பெண்ணை காவல்துறை மூலம் பெறுகிறார்கள். இதன்மூலம் தங்கள் மகள்களுக்கு தண்டனையை அளிக்கிறார்கள். வயது 21 என ஆகும்போது இதில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியவில்லை. விஷயம் இங்கு சட்டமல்ல. உங்கள் மகள்களின் கருத்துகளை முடிவுகளை நீங்கள் ஏற்கிறீர்களா என்பதுதான். பொதுவாக இச்சட்டத்தைப் பார்ப்பவர்கள் குழந்தை திருமணம் தவிர்க்கப்படும் என்று நினைக்கிறார்கள். ஒருவகையில் பெண்கள் 21 வயது வரை திருமணம் செய்யாமல் இருக்கும்போது அவர்களுக்கு சமூக பொருளாதார தகுதியை அடை