இடுகைகள்

ஏழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்க சிறு குறுங்கத்தியோடு கிளம்பும் விஷ ராஜா!

படம்
  பாய்சன் கிங், வெனோம்கிங் மாங்கா காமிக்ஸ்  எப்படி சிலந்தி கடித்து மாணவன் ஒருவன் சிலந்தி மனிதன் ஆகிறானோ அதேபோல சென்டிபீட் எனும் விஷப்பூச்சியை ஜின் ஜகான் கடித்துக்கொல்கிறான். அதன் விஷம் உடலுக்குள் இறங்க சுயநினைவை இழக்கிறான். அவனது தாத்தா, பேரனின் உயிரைக் காப்பாற்ற மாத்திரை ஒன்றை அவனுக்கு கொடுக்கிறார். அந்த மாத்திரை ஜின்னின் உடலில் உள்ள ரத்தத்தை ஜெல் போல மாற்றி விஷம் அவனை பாதிக்காதவாறு மாற்றுகிறது.  மருத்துவ இனக்குழு, விஷ இனக்குழுக்களால் முழுமையாக தோற்கடிக்கப்படுகிறது. நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு பழிவாங்க சிறுவன் ஜின் எழுகிறான். அவனது பலமே சென்டிபீட் மூலம் உடலுக்குள் சேகரமான விஷம்தான். அதை வைத்து அவனை விட பலமடங்கு வலுவான எதிரிகளிடம் போரிடுகிறான். சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அடிபட்டு உதைபட்டு நினைவிழந்து வீழ்ந்தாலும் தைரியத்தை இழப்பதில்லை. தான் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எ்ன்பதை அவன் கூறுவதில்லை. அவனது மன உறுதியும் போர் திட்டங்களும் அவனோடு இருப்பவர்களுக்கும், சமயங்களில் அவனது எதிரிகளுக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது.  மருத்துவ இனக்குழு அழிக்கப்பட்டு

அமைச்சரின் பெண்ணை மீட்கச்செல்லும் கம்யூனிச லட்சியத் திருடன்!

படம்
            ரெச்சிப்போ நிதின் , இலியானா கம்யூனிச கருத்து கொண்ட திருடனைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சரின் ஐநூறு கோடி கள்ளப்பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரியின் கதை . அ ந்த அதிகாரியின் கதையை சொல்லியிருந்தால் கூட பார்க்க நன்றாக இருந்திருக்கும் . அதையும் ஊறுகாய் போல பயன்படுத்தி இலியானாவின் தசை மேல் பயணிக்கிறது கதை . நிதின் படத்தில் திருடனாக நடித்திருக்கிறார் . திருடன்தான் . ஆனால் நல்ல திருடன் . பிளாட்பாரம் , கோவில் வாசல் என தூங்கி எழுபவர் , தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிடுகிறார் . ஆனால் , மாது , நிலம் என செலவிடாமல் ஏழைகளுக்கு , படிக்க வேண்டிய வயதில் பிச்சை எடுக்கும் பிள்ளைகள் , வேலை செய்யும் சிறுவர்களுக்கு செலவிடுகிறார் . இப்படிப்பட்ட லட்சிய திருடனை போலீஸ் ஏறத்தாழ கைது செய்யும் அளவுக்கு அருகில் வந்துவிடுகிறது . அப்போதுதான் காவல்துறை அதிகாரி , திருடனின் கம்யூனிச லட்சியத்தை அறிந்து வியக்கிறார் . நான்கு கி . மீ . ஓடிவந்து அவனுக்கு கை கொடுத்து அமைச்சரின் கள்ளப்பணத்தை திருடிச்செல்லுமாறு கூறுகிறார் . திருடனுக்கு அது போல ஐடியா ரொம்ப புதுசு . இருந்தா

செயற்கை நுண்ணறிவு மூலம் பணம் சம்பாதிக்கும் ஏழை மக்கள்! - கார்யா ஆப்பின் வறுமை ஒழிப்பு செயல்பாடு

படம்
  கார்யா ஆப் பயன்பாட்டாளர்கள், கர்நாடகா செயற்கை நுண்ணறிவு மூலம் வேலையிழப்பு பற்றிய பதற்றம் தரும் செய்திகளை தினந்தோறும் கேட்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தின் சிலுகாவடி, ஆலஹல்லி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நிரந்தரமான வேலை என்று கூறமுடியாது. ஆனால், அங்குள்ள விவசாய நிலத்தில் செய்யும் கூலி வேலைக்கான ஊதியத்தை விட அதிகம். இதற்கு கார்யா   என்ற லாபநோக்கமற்ற அமைப்பின் அப்ளிகேஷனே காரணம். இந்த அமைப்பை டெல்லியை பூர்விகமாக கொண்ட மனு சோப்ரா தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். 2021ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் என்ற நிறுவனத்தில்   வேலை செய்த மனு, தனது வேலையை கைவிட்டு கார்யா என்ற ஆப்பை உருவாக்கத் தொடங்கினார். இந்த ஆப் மூலம், தாய்மொழியில் அதாவது கன்னடத்தில் குறிப்பிட்ட செய்தி பற்றிய டேட்டா மாடல்களை உருவாக்குகிறார்கள். குறிப்பிட்ட செய்தியை ஒருவர் துல்லியமான வட்டார வழக்கில் பேச வேண்டும். அவர் பேச்சின் துல்லியத்தைப் பொறுத்து அவருக்கு வருமானம் கிடைக்கும். ஒரு மணிநேர உழைப்பிற்கு 415.50

டிஜிட்டல் பாகுபாடுகளால் பாதிக்கப்படும் ஏழை, வயதான மக்கள்!

படம்
  இப்போது நீங்கள் படிக்கும் கட்டுரை டிஜிட்டல் உலகில் ஏழைகள், கல்வியறிவற்றவர்கள் படும்பாடுகளைப் பற்றியது. அண்மையில் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, அனைத்து கடைகளிலும் க்யூஆர் கோட் முதன்மையாக இருந்தது. கிரிவலப்பாதையில் தள்ளுவண்டி கடை ஒன்றில் சாப்பிட்டு 30 ரூபாயைக் கொடுத்தபோது, 24 ரூபாய் போக , ஆறு ரூபாய்க்கு பதில் ஐந்து ரூபாய்தான் கிடைத்தது. ஒரு ரூபாய்தான் நஷ்டம். ஆனால் அது உணவக உரிமையாளருக்கு அல்ல எனக்கு நேரிட்டது. க்யூ ஆர் கோடு வழியாக பணத்தை கட்டுவது எளிதானது. ஆனால் அதற்கு கட்டணம் விதிக்கும்போது நிலைமை என்னாகும்? வலுக்கட்டாயமாக ரொக்க பரிமாற்றத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. திருவண்ணாமலையில் எனக்கு டீ வாங்கிக்கொடுத்து அவரது அலுவலக அறையில் தங்க வைத்தவர், செய்த செலவுகள் அனைத்தும் க்யூஆர் கோட் வழியாகத்தான். நான் பணமாகவே எடுத்து அனைத்து செலவுகளையும் செய்தேன். நண்பர் தனக்கு நன்கறிந்த குறிப்பிட்ட ஆவின் பார்லர் கடையில் டீ அருந்துகிறார். சீனிவாசா உணவகத்தில் பட்டை சாதம் சாப்பிடுகிறார்.   எனவே, டிஜிட்டலில் பணம் செலுத்துவதில் பிரச்னை இல்லை. ஆனால், எனக்கு அதெல்லாமே அந்நிய இடங்கள்தா

தீயணைப்புப்படை கேப்டனுக்கும், மருத்துவருக்கும் இடையே எரியும் காதல் நெருப்பு !

படம்
    யாங் யாங் - வாங் சுரான் (ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட்) ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட் சீன டிவி தொடர் ராக்குட்டன் விக்கி ஆப் சீனர்கள் எதையும் சுருக்கமாக சொல்லாமல் இழுப்பதில் வல்லவர்கள் என்பதால், தொடர் நாற்பது எபிசோடுகள் நீள்கிறது. ஆனால் பெரிதாக சலிக்காமல் இருக்க ஏராளமான கதைகளை உள்ளே சேர்த்தியிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன் காதல் கதை. அதை இருவரின் பின்னணியாக தீயணப்புத்துறை, மருத்துவம் என மாற்றி கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசம், தேசப்பற்று ஆகியவற்றை மழைச்சாரல் போல சேர்த்து பரிமாறினால் டிவி தொடர் அமோகமாக ரெடி. தொடரைப் பார்க்க வைக்க நாயகன்,, நாயகியின் அழகுதான் பெருமளவு உதவுகிறது. நாயகன் வெளிவயமானவன், நாயகி அகவயமானவள். அவளுக்கு வரும் பிரச்னைகள் அனைத்துமே அவளது குண இயல்பு சார்ந்த அதை புரிந்துகொள்ளாத அம்மா, மருத்துவமனை சார்ந்த ஊழியர்களால் வருகிறது.   நாயகன், சோன் யான். நேர்மையானவன். சிறுவயதில் குடும்பத்தை தொலைத்தவன். அவனது அப்பா, நல்லவர். அதனால் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறார். காசு இல்லாத காரணத்தால் மனைவி அவரை பிரிந்து சென்று இன்னொருவரை மணந்தது, கட்டுமான வேலை பறிபோனது காரணமாக மனம் ந

ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்க உதவும் ஃபெமா! - மோகன் முத்துசாமி, உதயகுமாரின் புதிய முயற்சி

படம்
  சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்தவர் மோகன் முத்துசாமி. இவர், தனது வீட்டருகே வாழ்ந்து வந்த சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனதைப் பார்த்தார். அச்சிறுமியை மருத்துவம் செய்து காப்பாற்றும் அளவுக்கு அவளது தந்தையிடம் பணமில்லை. இது மோகனை யோசிக்க வைத்தது. பின்னாளில் ஃபெமா எனும் அமைப்பை தனது நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து தொடங்க வைத்தது. ஃபெமா என்ற தன்னார்வ அமைப்பு, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகளை, நோய்களை கண்டறியும் ஆய்வகத்தை நடத்தி வருகிறது. இங்கு 30 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொண்டால் போதும். ஆலோசனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்த சோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஃபெமா செயல்படுகிறது.   ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ சேவைகளை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கு தெரு நாடகங்களை நடத்துகிறார்கள். கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் தவிர, படுக்கையில் படுத்துவிட்ட நீண்டகால நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளை வழங்குகிறார்கள். வீட்ட

சுகாதாரமான குடிநீர் வசதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை! - பீட்டர் கிளீக்

படம்
நேர்காணல் பீட்டர் கிளீக் சூழல் அறிவியலாளர்  அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த அறிவியலாளர், பீட்டர் கிளீக். பசிஃபிக் இன்ஸ்டிடியூட் (Pacific Institute) என்ற அமைப்பைத் தொடங்கி, சூழல் பிரச்னைகளைப் பற்றி பேசி எழுதி வருகிறார்.  நீருக்கும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்பிருக்கிறது என எப்படி கூறுகிறீர்கள்? இன்றுவரை,  தூய குடிநீர், சுகாதார வசதி என்பது  அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. இது நமது மிகப்பெரும் தோல்வி. தூய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அதிக நிதி செலவிட வேண்டும். குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலே மனிதர்களுக்கு ஏற்படும் பிற பிரச்னைகள் தீர்ந்துவிடும்.   சிறந்த நீர்மேலாண்மைக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? சிங்கப்பூர் நாட்டில் தூய குடிநீர், கழிவுநீர் மறுசுழற்சி, புத்திசாலித்தனமான நீர்ப்பாசன முறைகளைக் கையாள்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விவசாயிகள் நீரை எப்படி சிறப்பாக பயிர்களுக்குப் பயன்படுத்துவது என அடையாளம் கண்டுள்ளனர்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவின் பருவகாலத்தைப் பாதிக்குமா? நிச்சயமாக. காலநிலை மாற்

இந்திய மாணவர்களுக்கு உதவும் இ கல்வித்திட்டங்கள்!

படம்
  அரசின் இணையவழி கல்வித் திட்டங்கள் பிஎம் இ வித்யா 2020ஆம் ஆண்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். தீக்ஷா அறிவை டிஜிட்டல் வழியில் பகிர்ந்துகொள்வதற்கான வலைத்தளம் என திட்டத்தை மொழிபெயர்க்கலாம். 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வசதி. பாடநூல்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் போதும். உடனே என்சிஇஆர்டி பாடநூல்களை படிக்க முடியும். இதனை 18 மொழிகளில் அணுக முடியும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம்.  நிஷ்த்தா இது ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம். தேசிய அளவில் நடத்தப்படுகிறது. 11 மொழிகளில் இதனை ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக பாடங்களை நடத்தலாம்.  ஸ்வயம் 9ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரையிலான பல்வேறு பாடங்களை ஆன்லைன் வழியாக கற்கலாம். இதனை யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகி பாடங்களை கற்க முடியும் என்பது முக்கியமான அம்சம். பாடங்கள் அனைத்தும் இன்டராக்டிவானவை என்பதோடு இலவசம் என்பதையும் மனதில் குறித்துக்கொள்ளுங்கள்.   கடந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இதில் இணைந்தன

ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

படம்
  பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021 யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது.  மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்

சீரியல் கொலைகாரர்கள் ஏழையா, பணக்காரர்களா ? - சைக்கோ டைரி

படம்
  சைக்கோ டைரி ஆபாசப்படங்களும் மனநிலையும் இதற்கு பதில் சொன்னவுடன் நீங்கள் உங்களிடம் உள்ள பிளேபாய் இதழ்களையும், காமசூத்ரா படங்களையும் எரித்துவிடக்கூடாது. சீரியல் கொலைகாரர்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் எளிதாக அது சரிதான் என்ன தப்பு என்று வாதிடுவார்கள். எனவே இவர்களின் பதில்களை வைத்து நாம் எதையும் முடிவு செய்யமுடியாது.  இளைஞர்கள் வளரும் பருவத்தில் ஆபாச இதழ்களை படுக்கையில் வைத்து படிப்பது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலான படங்களில் பெண்கள் நிர்வாணமாக இருப்பார்கள். உறுப்புகள் சில இடங்களில் மறைந்தும் மறையாமலும் இருக்கும். இதெல்லாம் இயல்பானதுதான். இணையத்தில் விரல் சொடுக்கும் நேரத்தில் ஒருவருக்கு ஆபாசப்படங்கள் கிடைத்துவிடுகின்றன. அதனை ஒருவர் பார்ப்பது, ரசிப்பது பிரச்னையில்லை. இதில் ஹார்டுகோர், ரேப் என்ற பிரிவுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தால் உடனே எச்சரிக்கையாவது அவசியம். தனக்கு நடக்கும் கொடுமைகளை ஒருவர் ஏற்றுக்கொள்வது போல ஆபாசப் படங்கள் இந்த பிரிவுகளில் இருக்கும். இதனை பார்க்கும் ஒருவருக்கு பெண்கள் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சரியானவர்கள், நடத்தை கெட்டவர்களை இப்படித்தான் நடத்தவேண்டும

பெருந்தொற்று விபரீதம்-அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

படம்
            வறுமையால் நடைபெறும் குழந்தை திருமணங்கள் ! கொரோனா காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன . இதனால் நகர்ப்புறம் கிராம ம் என வேறுபாடின்றி வறுமை தாண்டவமாடுகிறது . நகரங்களில் வறுமை காரணமாக நடைபெறும் குழந்தை திருமணங்கள் இப்போது அதிகரித்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் 45 சதவீதம் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன . 2,209 குழந்தை திருமணங்கள் 2019 இல் நடந்துள்ளன . அடுத்த ஆண்டில் 3208 திருமணங்கள் நடைபெற்றுள்ளன . எதற்காக குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன ? பெருந்தொற்றால் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது . வறுமை மற்றும் வேலை இழப்பால் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள் . பள்ளி மூடப்பட்டிருப்பது மற்றொரு முக்கிய காரணம் . பெருந்தொற்றில் திருமணம் செய்வது சிக்கனமானது என பலரும் நினைக்கிறார்கள் . பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என பெற்றோர் நினைக்கிறார்கள் . எப்படி இவர்களை காப்பாற்றுவது ? பள்ளிகளை உடனே திறப்பது முக்கியமானது . பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களை அறிவிப்பது . வார்டு அளவில் கிராம ம் ந

வறுமை வளர்ந்து பாகுபாட்டை உருவாக்கிய வரலாறு! - புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! தி வார் ஆப் தி புவர் எரிக் வுயலார்ட் மார்க் பொலிசோட்டி பான் மெக்மில்லன் வரலாற்றில வறுமையும் , பாகுபாடும் , பணக்கார ர் , ஏழை இடைவெளியும் எப்படி தோன்றியது எனபதை ஆசிரியர் விளக்கியுள்ளார் . இதே எழுத்தாளரின் தி ஆர்டர் ஆப் தி டே என்ற நூல் விற்பனையில் சாதனை படைத்துள்ளது . இந்த நூல் வரலாறு எழுதப்பட்ட பின்னணியை ஆராய்கிறது . ஆந்த்ரோவிஷன் கிலியன் டெட பெங்குவின் வாங்கும் பழக்கம் மக்களிடையே ஏற்படுத்துகிற விளைவு , பல்வேறு கலாசாரம் சார்ந்த பண்பு , தொழில்துறை கார்பன் வெளியீடு குறைந்த வணிக மாடல்களுக்கு மாறவேண்டிய அவசியம் பற்றி இந்த நூலில் கூறப்படுகிறது . வொய் வீ நீல் , ஹவ் வீ ரைஸ் மைக்கேல் ஹோல்டிங் சைமன் அ்ண்ட் ஸ்சஸ்டர் இனவெறியால் பாதிக்கப்பட்ட வீரரின் கதை , இனவெறியை எதிர்க்கு்ம் அமைப்புகளின் போராட்டம் . விளையாட்டு வீரர்களின் போராட்டமான வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக இந்த நூல் விளக்குகிறது . தி ஹார்ட்பீட் ஆப் ட்ரீஸ் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் ஆதிகாலத் தொடர்பை அறிவியல் துண