இடுகைகள்

சைகோ கொலைகாரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கெட்அப் மாற்றி கொல்லும் சைக்கோ!

படம்
டியாகோ ஹென்ட்ரிக் கோம்ஸ் பிரேசில் செக்யூரிட்டியான டியாகோ, முகம் தெரியாதவர்களின் பைக்கில் லிஃப்ட்கேட்டு ஏறி 39(2011-14) பேர்களை சுட்டுக்கொல்வது இவர் ஹாபி.ஆதரவற்ற, தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை அதிகம் கொன்றவர், 12 பேர்களை கொன்றதற்காக 25 ஆண்டுகளை சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். யாங் ஜின்ஹாய்(1968-2004) சீனாவின் ஹெனன் பகுதியில் பிறந்த யாங், கப்சிப் புத்திசாலி. 1985 ஆம் பள்ளியிலிருந்து வெளியேறியவர் கூலித்தொழிலாளியாக மாறினார். தினசரி வித்யாசமான உடைகளில் வீட்டில் பழுதுபார்ப்பவராக நுழைந்து கற்பழித்து கொலைசெய்வது வாடிக்கை. 67 கொலை, 23 கற்பழிப்பு குற்றங்களுக்கு தண்டனையாக சுட்டுக்கொல்லப்பட்டார் யாங். ரிச்சர்ட் ராமிரெஸ்(1960-2013) லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோவில் வீடுபுகுந்து திருட்டு, கற்பழிப்பு, கொலை ஆகியவற்றை காம்போவாக செய்ய இயக்குநர் ராஜமௌலி போல யோசித்து வித்தியாச ஆயுதங்களை நாடினார். மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்தபோது நோய்தாக்குதலால் இறந்துபோனார்.  

நித்தம் வேண்டும் ரத்தம்!

படம்
நித்தம் வேண்டும் ரத்தம்! அலெக்ஸாண்டர் பிச்சுஸ்கின்(1974-) பள்ளியில் நடந்த அவமானங்களால் துவண்ட ரஷ்யாவின் பிச்சுஸ்கின், தாத்தாவின் தூண்டுதலால் செஸ்சில் வித்தகரானார். தாத்தா இறந்துபோக,ஆவேசமானவர் இலவச வோட்கா காட்டி 48 நபர்களை கொன்றார். பின்னாலிருந்து ஒருவரின் மண்டையை சுத்தியலால் உடைத்து திறந்து துளையில் வோட்காவை ஊற்றி கொல்வது பிச்சுஸ்கினின் சிக்னேச்சர் ஸ்டைல். அனடோலி ஓனோபிரைன்கோ(1953-2013) உக்ரைன் விலங்கு என்றழைக்கப்பட்ட அனடோலி, தாய் இறந்தவுடன் தந்தை ஏற்காததால் காப்பகத்திற்கு அனுப்பபட்டவர். பெண்களை கற்பழித்து, குழந்தைகளை சித்திரவதை செய்து கொல்பவர் குடும்பமாக தீர்த்துக்கட்டி வீட்டுக்கு தீவைத்து ஆதாரங்களை அழித்துவிடுவார். 52 பேர்களை கொன்ற வனவியல் பட்டதாரி, சிறையில் மாரடைப்பால் இறந்தார்.   ஹெரால்டு சிப்மன்(1946-2004) இங்கிலாந்தில் 250 நபர்களை கொன்ற டாக்டர் டெத் என பெயரிடப்பட்ட ஹெரால்டு, டயாமார்பினை பயன்படுத்தி 80% வயதான பெண்களுக்கு பரலோக சீசன் டிக்கெட் வழங்கினார். பதினைந்து கொலைகளுக்கு கோர்ட் ஆயுள்தண்டனை தர தூக்குபோட்டு உயிரிழந்தார்.     

காலையில் தேவாலயம்! இரவில் BTK கொலைகாரர்!

படம்
குருதி மனிதர்கள்! Joseph James DeAngelo(1945-) கொலை(13), கொள்ளை(120), கற்பழிப்பு(50) என கலிஃபோர்னியா போலீசை ஓவர்டைம் பார்க்க வைத்த அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்த சைக்கோ கொலைகாரர்.   50 ஆயிரம் டாலர்கள் விலைவைத்து போலீஸ் பிடித்தபோது முன்னாள் கப்பல்படை மற்றும் போலீஸ்காரர் என தெரியவந்தது. சாகர்மென்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜோசப். Dennis Rader(1945-) நான்கு குழந்தைகள் கொண்ட சர்ச்சுக்கு செல்லும் அம்மாஞ்சி ஆசாமி. ஆனால் உள்ளே பிடிகே எனும் சித்திரவதைக் கொலைகாரர். போலீஸ், பத்திரிகைக்கு கடிதம் எழுதிவிட்டு துப்பாக்கியோடு கிளம்பியவர் 1974-91 வரை பத்துபேரை கொன்றார். 2005 இல் பிடிபட்டு சிறையில் உள்ளார். Gary Ridgway(1949-) விலைமாதுக்கள், மைனர் பெண்களை போட்டுத்தள்ளிய கொலைகாரர் அமெரிக்காவின் அக்மார்க் குடிமகன். 82-98 காலகட்டத்தில் 71 நபர்களை கோமாவில் தள்ளி கொன்றவருக்கு பிணங்களோடு உறவுகொள்ளும் விநோதபுத்தியும் உண்டு. காடுகளில் பிணங்களை புதைத்து வைத்தவர் 2001 ஆம் ஆண்டு போலீசில் மாட்டினார்.  

இரக்கமற்ற வேசியின் மகன்!

படம்
கொலையுதிர் காலம்! Robert Hansen(1939-2014) அமெரிக்காவில் பிறந்த ராபர்ட்டுக்கு பேக்கரி தொழில். அலாஸ்காவில் 1971-83 வரை விலைமாதுக்களை, ஆதரவற்ற பெண்களை தன் பண்ணைநிலத்தில் ஓடவிட்டு ரூகெர் 14 துப்பாக்கி, கத்தியால் வெட்டி குற்றுயிராக துடிக்கும்போது வல்லுறவுக்குள்ளாக்கி கொல்வது இவரின் ஸ்டைல். ஆயுள்தண்டனை பெற்று இறந்தவர் கொன்ற 21 பேரில் குற்றம் நிரூபிக்கப்பட்டது நான்கு கொலைவழக்குகளில் மட்டுமே. இவருக்கு இன்ஸ்பிரேஷன் 1924 ஆம் ஆண்டு ரிச்சர்ட் கானல் எழுதிய ‘தி மோஸட் டேஞ்சுரஸ்’ கேம் சிறுகதை. Ted Bundy(1946-89) அமெரிக்காவின் வெர்மாண்டில் பிறந்த டெட்பண்டி, 40க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து சித்திரவதை செய்து கோமாவில் வீழ்த்தி கொல்வது வழக்கம். 1974-78 காலகட்ட அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் ரத்தவேட்டையாடியவர் பிணங்களோடு பாலுறவு வைத்த விநோதன். வேசியின் இரக்கமற்ற மகன் என தன்னைத்தானே அழைத்துகொண்டவரின் குற்றத்திற்கு மின்சார நாற்காலியை அரசு பரிசளித்தது. Jeffrey Dahmer(1960-94) அமெரிக்காவின் விஸ்கான்சினில் பிறந்த 78-91 க்குள் 17 பேர்களை வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றார்

வெளியில் கோமாளி உள்ளே கொலையாளி!

படம்
கொலை எந்திரன்கள்! Pedro López(1948-) கொலம்பியாவில் பிறந்து பெரு, ஈக்வடார் நாடுகளில் பைக் திருட்டு, சிறுமிகளை கொல்வது என அதிரடித்த ஆன்டிஸ் ராட்சஸன்(பட்டப்பெயர்). கொன்றது மொத்தம் 300(1962-2002) சிறுமிகள் என்றாலும் 110 சிறுமிகளே அதிகாரப்பூர்வ அரசு கணக்கு. வாரம்தோறும் 3 கொலைகள் என்பது பெட்ரோவின் லட்சியம். நன்னடத்தை காரணமாக ரிலீசானவர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.    John Wayne Gacy(1942-1994) அமெரிக்காவில் நன்கொடை நிகழ்வுகளில் கோமாளி வேடம் போட்டவர் நிஜத்தில் 33 சிறுவர்களை சித்திரவதை செய்து மயக்கமாக்கி கொன்ற வல்லுறவு கொலையாளி. வீட்டினுள் அமைத்திருந்த ரகசிய அறையில் கற்பழிப்பும், கொலையும் செய்தவர் பிணங்களை தன் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்தார். அரசு, விஷ ஊசி போட்டு இவரைக் கொன்றது. Luis Garavito(1957-) கொலம்பிய மிருகம் என அழைக்கப்பட்ட லூயிஸ் 138 ஆதரவற்ற சிறுவர்களை வல்லுறவு செய்து தலையைத் துண்டித்து கொன்றார். 6-16 வயதுடைய சிறுவர்களை டார்கெட் செய்து மிட்டாய், பணம், வேலை கொடுத்து நட்பு வளர்த்து பின்னர் நல்ல நாளில் அவர்களை கற்பழித்துக் கொல்வார். குற்றத்

ரூல்ஸ் விதித்தால் ஆர்செனிக் விஷம் பதிலடி!

படம்
கொலைகாரர்களின் பூமி! Nannie Doss அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்த நானி தாஸ்(1905-1965), பதினொரு கொலைகள் செய்த குற்றவாளி. சிறுவயதில் தலையில் அடிபட்டு தலைவலி மன அழுத்தங்களால் தவித்தவர், பின்னாளில் தன்னிடம் கண்டிப்பு காட்டிய 4 கணவர்கள், குழந்தைகள் சகோதரிகள் என பாரபட்சம் காட்டாமல் ஆர்சனிக் விஷம் வைத்து கொன்றார். ஏன் மேடம் கொலை செஞ்சீங்க? என போலீஸ் கேட்டபோது சிரிப்பு மட்டுமே அவரிடம் வந்த பதில். Pedro Rodrigues Filho 18 வயதிற்குள் பத்துபேரை கொன்ற பிரேசிலைச் சேர்ந்த பெட்ரோ(1954-), 71-100 எண்ணிக்கையிலான கிரிமினல்களை மட்டும் போட்டுத்தள்ளிய கொஞ்சம் நல்ல கிரிமினல். கொலைகளுக்கிடையில் மரியா ஒலிம்பியா என்ற பெண்ணை காதலித்தார். போதை கேங்கினால் அவள் கொல்லப்பட பெட்ரோ அத்தனை பேரையும் கொன்றார். தற்போது பெட்ரோவுக்கு 128 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Richard Chase அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்த ரிச்சர்ட் சேஸ்(1950-80), ஆறு பேரைக் கொன்று ரத்தம் குடித்த டிராகுலா. கொல்பவர்களை கற்பழிப்பதும், உறுப்புகளை சாப்பிடுவதும், ரத்தத்தை குடிப்பதும் சேஸூக்கு பிடித்தமானவை.  

கொலை செய்வது எப்படி?

படம்
சீரியல் கொலைகாரர்கள்! எட்மண்ட் கெம்பர்! 1964 ஆம் ஆண்டு கெம்பரின் கொலைப்பயணத்தை பாட்டியைக் கொன்று தொடங்கினார்.   கொலை செய்வது எப்படி என அறியவே இந்த கொலை என புதுமை விளக்கம் கொடுத்தவரை குமட்டில் குத்தி சிறையில் தள்ளியது போலீஸ். ஆறு ஆண்டுகளுக்கு ரிலாக்ஸாக விடுதலை ஆனவர், கற்பழிப்பு, கொலை என பரபரப்பாக செயல்பட்டு தன் அம்மா உட்பட எட்டுப்பேரை சொர்க்கத்திற்கு அனுப்பினார். ரோட்னி அட்கலா 1943 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் பிறந்த அட்கலா, ராணுவ வீரராக இருந்து தன் மர்ம நடவடிக்கைகளால் வெளியேற்றப்பட்டார். 1968 ஆம் ஆண்டில் சிறுமியை வல்லுறவு செய்து கொன்றார். காதல் நாடகமாடி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மட்டுமே கொன்ற க்ரைம் கழுகு அட்கலா கலிஃபோர்னியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கலியோனார்டா கியானிகியுலி(1894-1970) இத்தாலியைச் சேர்ந்த கியானி, தன் மகன் உயிருக்கு ஆபத்து என சிலர் ஜாதகம் பார்த்து சொல்ல, அவனைக் காப்பாற்ற கொலைக்கணக்கை தொடங்கினார். மூன்று பேரைக் கொன்று அவர்களின் உடல் கொழுப்பிலிருந்து சோப்பும், டீ கேக்குகளையும் தயாரித்து பக்கத்து வீட்டினருக்கு கொடுத்தார்.