கெட்அப் மாற்றி கொல்லும் சைக்கோ!




Image result for glass movie


டியாகோ ஹென்ட்ரிக் கோம்ஸ்

பிரேசில் செக்யூரிட்டியான டியாகோ, முகம் தெரியாதவர்களின் பைக்கில் லிஃப்ட்கேட்டு ஏறி 39(2011-14) பேர்களை சுட்டுக்கொல்வது இவர் ஹாபி.ஆதரவற்ற, தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை அதிகம் கொன்றவர், 12 பேர்களை கொன்றதற்காக 25 ஆண்டுகளை சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.

யாங் ஜின்ஹாய்(1968-2004)

சீனாவின் ஹெனன் பகுதியில் பிறந்த யாங், கப்சிப் புத்திசாலி. 1985 ஆம் பள்ளியிலிருந்து வெளியேறியவர் கூலித்தொழிலாளியாக மாறினார். தினசரி வித்யாசமான உடைகளில் வீட்டில் பழுதுபார்ப்பவராக நுழைந்து கற்பழித்து கொலைசெய்வது வாடிக்கை. 67 கொலை, 23 கற்பழிப்பு குற்றங்களுக்கு தண்டனையாக சுட்டுக்கொல்லப்பட்டார் யாங்.

ரிச்சர்ட் ராமிரெஸ்(1960-2013)

லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோவில் வீடுபுகுந்து திருட்டு, கற்பழிப்பு, கொலை ஆகியவற்றை காம்போவாக செய்ய இயக்குநர் ராஜமௌலி போல யோசித்து வித்தியாச ஆயுதங்களை நாடினார். மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்தபோது நோய்தாக்குதலால் இறந்துபோனார்.