கடல்நீரை இனி குடிக்கலாம்!
இனி கடல்நீரை குடிக்கலாம்!
சென்னையைச் சேர்ந்த கடல் தொழில்நுட்ப(NIOT)
ஆராய்ச்சியாளர்கள் கடல்நீரை குறைந்த அழுத்தத்தில் நன்னீராக்கும் முறையை(LTTD) கண்டுபிடித்து
அசத்தியுள்ளனர்.
கடல்நீரை குறைந்த அழுத்தத்தில்
நீராவிக்கு குடிநீராக்கும் இம்முறையில் ஒரு லிட்டரை 60 பைசாவுக்கு சுத்திகரித்து வழங்கமுடியும்.
லட்சத்தீவுகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் நியோட் அங்கு குடிநீர் சுத்திகரிப்பு
நிலையங்களை அமைக்கவுள்ளது. அந்த்ரோத், அமினி, கதாமத், கில்டன், கல்பெனி, செட்லட் ஆகிய
இடங்களில் அமைக்கப்படவிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 1.5 லட்சம்
லிட்டர் நீரை தினந்தோறும் சுத்திகரித்து வழங்கமுடியும்.
தினசரி பத்து லட்சம் லிட்டர் நீரை
தயாரிக்க தனியார் பங்களிப்பையும் நியோட் எதிர்பார்க்கிறது. மத்திய கிழக்கில் நீரை அதிக
வெப்பநிலைக்கு உயர்த்தி, குளிர்வித்து நீரை தூய்மையாக்கும் ஃபிளாஷ் டிஸ்டிலேஷன் பிரபலம்.
நியோட்டின் முறையில் வெப்பநிலை 80 டிகிரி செல்சியஸாக இருப்பது அவசியம். நடைமுறை சவால்களை
சமாளித்து விரைவில் குடிநீர் வழங்க பணிகள் பரபரத்து வருகின்றன.