பெண்கள் படுகொலை - இங்கிலாந்து கொடூரம்!








இங்கிலாந்தில் பெண்களைக் கொல்லும் கணவர்கள்!

இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் பெண்கள் தங்கள் காதலர்களால் அல்லது கணவர்களால் கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 105 பெண்களுக்கு(76% ) தங்களை கொன்றவர்கள் யாரென்று தெரியும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் வுமன் எய்டு திட்ட இயக்குநர் கரென் இங்கலா.

46% பெண்களின் முன்னாள் காதலர்கள், கணவர்களாலும், 17%  நண்பர்கள், அலுவலக நண்பர்கள், உறவினர்களாலும், 12% ஆண் குடும்ப உறுப்பினர்களாலும், 10% தங்கள் மகன்களாலும் கொல்லப்படுவதை ஆய்வு நிரூபித்துள்ளது. பெரும்பாலான பெண்கள் ஏறத்தாழ 59% பேர் வீட்டிலுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி கொலை செய்யப்படுகின்றனர். இதில் பாதிக்கும் மேலான க்ரைம்கள் பிரேக் அப் செய்த முன்னாள் காதலர்களால்(ஓராண்டுக்குள்) நிகழ்கிறது.

பெண்களின் மீதான வக்கிரம் என்பது அவர்கள் இறந்தபின்னும் அவர்களது உடலை சிதைப்பதில் உள்ளது. இறந்த பெண்களை பார்ப்பவர்களை மிரட்டும்  விதமாக கோரமாக சிதைப்பது 42% இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் கொலையான பெண்ணை கொலையாளமி அதிகபட்சமாக 175 முறை கத்தியால் குத்தியிருந்தார். 

"ஊடகங்களில் வரும் பெண்களின் படுகொலை குறித்து செய்திகள் ஒருகட்டத்தில் இது சரிதான் என பலரையும் எண்ண வைத்துவிடுகிறது"  என்கிறார் நியா அமைப்பின் இயக்குநர் இங்கலா ஸ்மித்.  பெண்களின் படுகொலை குறித்த பதிவேடு இங்கிலாந்தை உலுக்கியுள்ளது. சில அமைப்பினர் இது யூகமான தரவுகளை உள்ளடக்கியது என்று கூறினாலும் நடக்கும் வன்முறையை இல்லை என்று மறுக்கவில்லை.

"பெண்களை ஆண்கள் கொலை செய்வதை தனியாக சம்பவமாக அரசு கருதுகிறது. ஆனால் அப்படியல்ல. நடந்த பல்வேறு கொலை சம்பவங்களிடையே ஒற்றுமை உள்ளது. அரசு இதனை வாய்ப்பாக பயன்படுத்தி குடும்ப வன்முறை சட்டத்தை திருத்தி அமைக்கவேண்டும்" என்கிறார் வுமன்ஸ் எய்டு இயக்குநரான கேட்டி கோஸ்.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து, வேல்ஸில்(2009), அயர்லாந்து(2015), ஸ்காட்லாந்து(2017) ஆகிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புண்டு.

தமிழில்: ச.அன்பரசு
நன்றி: தி கார்டியன் இணையதளம்