சீனநிறுவனத்தின் மீது போர்!
சீனநிறுவனத்தை தடுத்த நியூசிலாந்து!
5ஜி சேவையை வழங்க முன்வந்த ஹூவாய்
நிறுவனத்தை உளவுத்துறை எச்சரிக்கையால் நியூசிலாந்து அரசு தடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு
நிறுவனமான ஹூவாய் சாதனங்களை நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்பார்க் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால் நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்க
உடனே சீன நிறுவனத்தின் உதவியை அரசு மறுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளை அரசு கூறினால்
அதனை சரிசெய்துகொள்கிறோம் என ஹூவாய் அறிக்கை விடுத்தது.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சீன நிறுவனமான ஹூவாயின் தொலைத்தொடர்பு
சேவையை பயன்படுத்துவதை தேசிய பாதுகாப்பு கருதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பப்புவா
நியூகினியா நாடு, துணிச்சலாக ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து இணைய இணைப்புகளை நாடெங்கும்
வலுப்படுத்திவருவது மட்டுமே விதிவிலக்கு.
“சீனா தன்னுடைய நிறுவனங்கள் மூலம்
தகவல்திருட்டை முதலிலிருந்தே செய்துவருகிறது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சைபர்துறையைச்
சேர்ந்த பேராசிரியர் டாம் உரன்.