இடுகைகள்

மேதாவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருமியா, கயவனா - உண்மையில் சிவசிதம்பரம் செட்டியார் யார்?

படம்
      மலபார் ஹோட்டலில் மர்மப் பெண்மணி மேதாவி பிரேமா பதிப்பகம் மர்மநாவல். வேகமாக வாசித்துவிடக்கூடிய நூல். சென்னையில் சிவசிதம்பரம் என்ற செட்டியார் இருக்கிறார். வசதியானவர். பாழடைந்த பேய் பங்களா ஒன்றில் வாழ்கிறார். கஞ்சன் என்று பெயரெடுத்த அவரின் செயல்பாடு, சொத்து என அனைத்துமே மர்மமாக உள்ளது. திடீரென ஒருநாள் அவர், தனது பங்களாவின் பாதாள அறையில் முதுகில் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். அறைச்சாவி அங்குள்ள மேசையில் உள்ளது. உண்மையில் இந்த கொலைக்கு காரணம் தேடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் துப்பறிகிறார். கூடவே, பத்திரிகையாளர் மணிவாசகம் உதவி செய்கிறார். கொலைகாரன் யார் என்பதுதான் இறுதிப்பகுதி. இன்ஸ். சிவராஜ், மணிவாசகம், நடிகை பரிமளா, சங்குண்ணி நாயர், சூரிய மூர்த்தி, சண்முக சுந்தரம், பங்காரு ஆகியோர்தான் முக்கியப் பாத்திரங்கள். இவர்களில்தான் கொலைகாரனும், கொலையைத் தேடுபவர்களும் உள்ளனர். கதையில் கொலை, கொலைக்கான மர்மம் என்பதைவிட சிதம்பரம் செட்டியார் எப்படிப்பட்ட ஆள் என்பதை எழுத்தாளர் வெகுநேரம் மறைத்து வைத்து ஆர்வத்தை தூண்டுகிறார். அவருக்கு ஒரு மோசமான கடந்தகாலம் இருக்கிறது. அதில் பரிமளாவின் பெற்றோர் இறப்பு