29 நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிமுகம் - வகுப்பறை உலகம் - நூல் விமர்சனம்





வகுப்பறை உலகம்

விஜய பாஸ்கர் விஜய்

அகரம் அறக்கட்டளை வெளியீடு

விலை ரூ.150


இந்த நூல், 29 உலக நாடுகளின் கல்விமுறைகளை மேலோட்டமாக அணுகி நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சுருக்கமாக என்று ஆசிரியர் கூறியிருப்பார். எனக்கு தெரிந்து அனைத்து நாடுகளைப் பற்றியும் நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். காரணம், கல்வியை எளிதாக நீங்கள் வரையறை செய்து எழுதிவிட முடியாது. அதில் அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறை காரணிகள் என ஏராளம் உண்டு. 


கனடா பற்றிய கல்விமுறையில் நூல் தொடங்குகிறது. இதில் அடிப்படையாக கல்வி என்பது பள்ளி அளவில் இலவசம். ஆனால், பல்கலைக்கழகம் என்றால் தனியார் என அங்கு வசிக்கும் நண்பர் கூறினார். அதாவது பள்ளிக்கல்வி இலவசம் என்றாலும் மேற்படிப்பை அதாவது கல்லூரி படிக்கும்போது கல்வி செலவு கூடுதலாகிவிடும். பள்ளிக்கும் சேர்த்து வசூலித்துவிடுவார்கள் என்று கூறினார். அதுபோன்ற தகவல்களை நூலில் ஆசிரியர் எழுதவில்லை. அதையும் கூறவேண்டும்தானே? நேர்மறையாக எழுதுவது சரி. நிதர்சனமான நிலையையும் கூறலாமே? 


இதில் வளர்ந்த நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என இரண்டு பிரிவாக பிரித்துவிடலாம். ஆப்பிரிக்க நாடுகள் மேற்கு நாடுகளின் சுரண்டலால் பெரிதாக மேம்பட்டு மேலே வர முடியவில்லை. அடுத்து அங்கு உருவாகிற இனப்படுகொலை, அதுதொடர்பான அரசியல் சிக்கல்கள் கல்வியை பின்னுக்கு தள்ளுகின்றன. அரசியல் அதிகாரம் மட்டுமே முன்னுக்கு வருகிறது. உதாரணம் ராபர்ட் முகாபே. இவர் ஜிம்பாவே நாட்டில் கல்வியை ஜனநாயகப்படுத்தி முன்னேற்றத்திற்கு நிறைய திட்டங்களை வகுத்தார். உழைத்தார். மக்களை கல்வியறிவு பெறச்செய்தார். ஆனால், இறுதியாக அவரும் அரசியல்வாதியாக மாறி குறிப்பிட்ட இனக்குழுவை ஆதரிக்க தொடங்கும்போது சரிவு தொடங்கியது. பரிதாபமாக இருக்கிறது. லட்சிய மனிதராக இருந்து அதிகாரத்தை தக்க வைக்க தரம் தாழ்ந்து போகும்போது அந்த மனிதனைப் பற்றி என்ன சொல்ல?


ஒட்டுமொத்த நாடுகளில் பார்த்தால் ஆப்பிரிக்க நாடுகளை கழித்தே விடலாம். அங்கு அறிந்துகொள்ள கற்றுக்கொள்ள ஏதும் இல்லை. வெள்ளையர்கள் போனாலும் அடுத்து வந்தவர்கள் உள்நாட்டு கொள்ளையர்கள் போல.சொந்த நாட்டு மக்களையே தின்னும் பேய்கள். இந்த லட்சணத்தில் மக்களுக்கு கல்வி எங்கே வழங்குவது? அந்த நாடுகளைப் பற்றி படிக்கையில் வருத்தம்தான் ஏற்பட்டது. உலக நாடுகளில் ஸ்வீடன் நாட்டின் கல்வித்தரம், கல்வியை அவர்கள் பார்க்கும் பார்வை புதிதாக உள்ளது. 


நிறைய இடங்களில் நூலாசிரியர் இந்தியாவை தொடர்புபடுத்துகிறார். அதெல்லாம் பத்திரிகையில் தொடராக வந்தபோது செய்திருக்கலாம். நூலாகும்போது அதெல்லாம் அவசியமே இல்லை. தூக்கிவிட்டு அந்த நாடுகளின் முக்கியமான விஷயங்களைப் பற்றி சேர்த்திருக்கலாம். செயல்படுத்திய காலம், நடைமுறையில் எப்படி உள்ளது என்று... நூலின் அட்டைப்படம் ஈர்ப்பு ஏற்படுத்துவதாக இல்லை. ஏதோ கொலாஜ் செய்திருக்கிறார்கள். அக்கறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அழகான ஒரு புகைப்படம் இருந்தால் போதும் எதற்கு இப்படி ஏதோ மினிமீல்ஸ் தட்டு போல? 


அகரம் பவுண்டேஷன் லோகோவில் ஆங்கிலத்தில் அதன் பெயர் உள்ளது. அதை தமிழில் மறுபடியும் எழுதியிருக்கிறார்கள். எந்துக்கு?...


நூலைப் பற்றி படிக்கும்போது இந்தியா மனுஸ்மிருதி காலத்திற்கு சென்றுகொண்டிருப்பதால் எந்த நாட்டுடனும் ஒப்பிட வேண்டியதில்லை என்று தோன்றியது. நூலுக்கான விமர்சனத்தை எழுதும்போது மருத்துவக்கல்லூரியில் முஸ்லீம் மாணவர்கள் சேர்ந்த ஒரே காரணத்தால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை மூத்திரம் குடிக்கும் சங்கிகள் கொண்டாடுகிறார்கள். அடேய் பன்னாடைகளா, காய்ச்சலுக்கு நீங்க மாட்டுமூத்திரம் குடிக்கலாம். அத்தனை மக்களும் குடிக்க முடியுமா? ஆக, நாம் தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும். ஆரிய இந்தியாவைப் பற்றி இந்தியாவே கவலைப்பட்டுக் கொள்ளட்டும். 


சிறந்த நாடு ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து நூலைத் தயாரித்திருக்கலாம். முழுமையாக இருந்திருக்கும். மற்றபடி கல்விமுறை பற்றி லேசுபாசாக அறிந்துகொள்ள மட்டுமே நூலை படிக்கலாம். இதில் உள்ளவை நடைமுறையில் இருக்கிறதா இல்லையா என்று உறுதியாகவெல்லாம் கூற முடியாது. நூலில் எழுத்தாளரின் தொடர்பு முகவரி, மின்னஞ்சல் கூட கிடையாது. 


கல்விமுறை பற்றி அறிமுகமாக அறிய ஏற்ற நூல் அவ்வளவே. அதைத்தாண்டி எதிர்பார்க்க ஒன்றுமில்லை.

-கோமாளிமேடை குழு



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!