இடுகைகள்

பதவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாவோவுக்கு அடுத்த நிலையில் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு வரும் ஷி!

படம்
  ஷி ச்சின்பிங் செல்வாக்கும், கருத்துகளும்! ஷி ச்சின்பிங்  சிக்ஸியாங் - ஷி ச்சின்பிங் கருத்துகள் என்ற பெயரில் நூலொன்றை லியுமிங்ஃபு, வாங் ஸாங்யுவான் என்ற இரு கல்வியாளர்கள் வெளியிட்டனர். இந்த நூலை வெளியிட்ட நிறுவனம், ஸெஜியாங் வணிக நிறுவனம். நூல் ஆங்கிலம், சீனம் என இருமொழிகளில் வெளியானது.  இந்த நூல் பற்றி டாங்ஜியான் யான்ஜியு என்ற பொதுவுடைமைக் கட்சி இதழிலும் புகழ்ந்து எழுதப்பட்டது. இதே நூல் பற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பொதுவுடைமைக் கட்சி பள்ளியில் வெளியாகும சூக்சி ஷிபாவோ என்ற இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்டோபர் மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 19ஆவது பொதுவுடைமை கட்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது. மாவோ, டெங் ஆகியோருக்கு பிறகு ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் பொதுவுடைமைக் கட்சியால் ஏற்கப்பட்டுள்ளது.  2012-14 ஆகிய காலகட்டங்களில் ஷி ச்சின்பிங் ஆற்றிய உரைகள் நூலாக ஷி ச்சின்பிங் - சீன அரசு நிர்வாகம் என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த வரிசையில் இதுவே முதல் நூல். இந்நூல் மஞ்சள் நிறத்தில் ஷி ச்சின்பிங்கின் மார்...

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’

''ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பற்றிய முன்முடிவுகளை மாற்றவேண்டும் என நினைக்கிறேன்'’ சாண்ட்ரா டயஸ், அர்ஜென்டினாவைச் சேர்ந்த இயற்கை ஆராய்ச்சியாளர், கார்டோபா தேசிய பல்கலைக்கழக பேராசிரியர். சூழலியல் மற்றும் இயற்கை பன்மைத்தன்மை ஆராய்ச்சியில் தவிர்க்க முடியாத ஆளுமை. 2025ஆம் ஆண்டு க்கான சுற்றுச்சூழல் அறிவியல் சாதனைக்கு வழங்கப்படும் டைலர் விருதை மானுடவியலாளரான எடுவர்டோ பிரான்டிசியோவுடன் இணைந்து பெறவுள்ளார். தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த இருவர் டைலர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. டைம் வார இதழில் 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் உங்களது வாழ்க்கை எப்படி சென்றது, சூழல் ஆராய்ச்சியை உங்களது இலக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பள்ளி, கல்லூரி காலம் இன்னும் மறக்காமல் நினைவிலிருக்கிறது. தொடக்க, உயர்கல்வியை சிறு நகரத்தில் படித்தேன். பிறகு, கார்டோபா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். என்னுடைய பதினேழு வயதில் கல்விக்காக பெருநகரத்திற்கு வந்தது சாகசமாகவும், அதேசமயம் சுதந்திரத்தை அனுபவிப்பதாகவும்...

சீனாவின் கல்விச் சீர்திருத்தங்கள்- பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்கள்!

படம்
சீனாவில் தொடக்கப்பள்ளி முடித்ததும் உயர்கல்விக்காக தேசிய தேர்வை எழுத வேண்டும். அதை வைத்துத்தான் மாணவர்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். தேசிய தேர்வில் சீனமொழி, கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், அரசியல் அறிவியல், உடற்பயிற்சி ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். சீனாவில், பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகள் சிறப்பானவை. வெளிநாட்டிலுள்ள பள்ளிகளைப் போல வசதிகளைக் கொண்டவை. இவற்றுக்கு அடுத்த நிலையில் வூகான், செங்டு, ஷியான் ஆகிய நகரிலுள்ள பள்ளிகள் இருக்கும். அனைத்து நாடுகளைப் போலவே கிராமங்களிலுள்ள பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளன. இந்த வேறுபாடுகளும், இப்போது மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது. நடுநிலைப்பள்ளியில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படும் என்று பார்ப்போம். சீனமொழி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, அரசியல், புவியியல், தகவல் தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள், உடற்பயிற்சி, ஆரோக்கிய கல்வி, ஓவியம், இசை, இனக்குழு செயல்பாடுகள், அறக்கல்வி. உயர்கல்வியைப் பொறுத்தவரை மாகாணங்களில் நடைபெறும் தேசிய தேர்வுகள் முக்கியமானவை. இதைப் பொறுத்தே மாணவர்கள் பல்...

காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை

படம்
  காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை கடந்த சனிக்கிழமை இரவு எனது போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆங்கிலச்செய்தியை தமிழ்படுத்தி கூறுகிறேன். "அன்பு, தயவு செய்து உதவுங்கள் ஃப்ரீதமிழ் த.சீனிவாசனின் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்" என செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆங்கிலச்செய்தி அனுப்பும் அளவுக்கு நண்பர்கள் யாருமில்லையே என்று பார்த்தேன். அனுப்பியவர் பெயர் ராமமூர்த்தி.  ஆம். அவரேதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடித நூல் பற்றிய புகாரை கொடுத்த முன்னாள் நண்பர்தான். இந்த செய்தி வந்ததும் எனக்குத் தோன்றியது. நூல் புகாருக்கு பிறகு அவர் என்னுடன் தொலைபேசியில் பேசவே இல்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர்தான் அவரே தொடர்பு கொண்டு பேசினார். பிறகு பேசுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. திடீரென இப்படியொரு குறுஞ்செய்தி என்றதும் எனக்கு மனதில் தோன்றியது. வேண்டுமென்றே ஏதோ பிரச்னையில் நம்மை இழுக்கிறாரோ என்று....  உள்ளுணர்வு சொன்னது சரிதான்.  இரண்டு பக்க கடிதம் ஒன்றை பச்சை மசியில் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் முன்னாள் நண்பர் திரு. ராமமூர்த்தி. அதாவது, விஷயம் என...

பெண்கள் குழந்தை பெற்றுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யவேண்டும் என்பது மூடநம்பிக்கை! பேராசிரியர் லிண்டா ஸ்காட்

படம்
              நேர்காணல் பேராசிரியர் லிண்டா ஸ்காட்   பொருளாதார வல்லுநர்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் என்ன ? காரணம் , ஆண்களின் மேலாதிக்கம்தான் . பெண்கள் இத்துறையில் வளர்ந்து வந்தாலும் கூட அவர்களை கிண்டல் செய்து விரைவில் வெளியேற்றிவிடுகிறார்கள் . அலுவலகம் வீடு இரண்டையும் சமாளிப்பது என்று கூறப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் ? நீங்கள் கூறும் வார்த்தை முழுக்க பெண்களை நோக்கியே கேட்கப்படுகிறது . இதில் நியாயமில்லை . ஆண்களுக்கும் , பெண்களுக்கு்ம் சமத்துவமாக வேலை வழங்கப்படாத நிலையில் இப்படி கேள்வி கேட்கப்படுவது தவறு . பெண்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது , சம்பளம் உயர்த்தப்படாதபோது நீ்ங்கள் கூறிய வார்த்தை ஒரு மன்னிப்பாக கூறப்படுகிறது . குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்களை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் வீசப்ப்படுகின்றன . இந்தியாவில் பெண்களுடைய நிலைமை பற்றி தங்களுடைய கருத்து ? பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறைவு . பெண்கள் வாழ்வதற்கு கடினமான நாடுகளில் இந்தியாவும...

பெருகும் பெண்கள் மீதான வெறுப்பும், பாகுபாடும்!

பெண்களுக்கு எத்துறையானாலும் அத்துறையில் உள்ளவர்களே ஆணோ, பெண்ணோ முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள். அப்படி இருப்பதில் அவர்களது மனதில் கெட்டிதட்டிப்போன பழமைவாதக் கருத்துகள் முக்கியக் காரணம். அப்படிப்பட்ட கருத்துகள் இப்போது மாறியிருக்குமா என்ற எண்ணத்தில் ஐ.நா சபை  எடுத்த ஆய்வு முடிகள் இதோ உலகில் பத்தில் ஒன்பது பேர் பெண்கள் பற்றிய பழமைவாத முன்முடிவுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில் பெண் தலைவர்களும் அடங்குவர். பெண்கள் சிறப்பாக செயற்பட்டாலும் ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கல்வி முதல் வேலைவாய்ப்புகள் வரை திறமை இருக்கிறதோ இல்லையோ ஆண்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. பார்ட்டியில் அறையும் கணவரை விவாகரத்து செய்யும் விவகாரத்தைப் பற்றி தப்பட் என்ற இந்திப்படம் பேசுகிறது. பெண்களை கணவர்கள் அடிப்பதும், உதைப்பதும் தவறு இல்லை என 28 சதவீதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  பாகிஸ்தான், நைஜீரியா, கத்தார் ஆகிய நாடுகளில் பெண்கள் மீதான பாகுபாடும் கட்டுப்பாடும் 90 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் இந்த சதவீதம் 50-60 சதவீதமாக உள்ளது. 

பெருநிறுவனங்கள் இயக்குநர் பதவிக்கு பெண்களை விலக்குவது ஏன்?

படம்
பெண்கள் மீது பலருக்கும் அனுதாபம் உண்டு. ஆனால் நிறுவனங்கள் என வரும்போது அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு அளிக்க, பலரும தயங்குகின்றனர். காரணம் அவர்கள் ஜெனரல் மோட்டார் போன்ற நிறுவனங்களை ஏற்று நடத்தி பெற்ற தோல்விகள். 47 சதவீத பெண்கள் அமெரிக்காவில் உழைத்தாலும், நிறுவன இயக்குநர் என்றால் பெண்களின் சதவீதம் குறைவுதான். ஏறத்தாழ முன்னணியில் உள்ள நிறுவனங்களில் 5 சதவீதம் மட்டுமே பெண்கள் இயக்குநர்களாக உள்ளனர். ஜெனரல் மோட்டார்சின் மேரி பாரா,  யாஹூவின் மெரிசா மேயர், ஹெச்பியின் கார்லி பியோரினா ஆகியோர் இந்த விஷயத்தில் மோசமான இயக்குநர்களாக காட்டப்படுகின்றனர். காரணம், இவர்கள் நிறுவன இயக்குநர்களாக செயல்பட்ட காரணத்தில் ஏற்படுத்திய பேரழிவுதான். அமெரிக்காவில் பெண்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கு குறைந்த முதலீடுகளே கிடைக்கின்றன. காரணம், பெண்களின் செயற்பாட்டின் மீதான நம்பிக்கையின்மைதான். இதனை 2018 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது. இன்று அமெரிக்காவில் உள்ள 80 சதவீத பெருநிறுவனங்களின் இயக்குநர்கள் ஆண்கள்தான். கருவுறுதலுக்கான விடுமுறை, குழந்தைகளின் பராமரிப்பு ஆகியவற்றை தியாகம் செய்த...