பெருநிறுவனங்கள் இயக்குநர் பதவிக்கு பெண்களை விலக்குவது ஏன்?
பெண்கள் மீது பலருக்கும் அனுதாபம் உண்டு. ஆனால் நிறுவனங்கள் என வரும்போது அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு அளிக்க, பலரும தயங்குகின்றனர். காரணம் அவர்கள் ஜெனரல் மோட்டார் போன்ற நிறுவனங்களை ஏற்று நடத்தி பெற்ற தோல்விகள்.
47 சதவீத பெண்கள் அமெரிக்காவில் உழைத்தாலும், நிறுவன இயக்குநர் என்றால் பெண்களின் சதவீதம் குறைவுதான். ஏறத்தாழ முன்னணியில் உள்ள நிறுவனங்களில் 5 சதவீதம் மட்டுமே பெண்கள் இயக்குநர்களாக உள்ளனர். ஜெனரல் மோட்டார்சின் மேரி பாரா, யாஹூவின் மெரிசா மேயர், ஹெச்பியின் கார்லி பியோரினா ஆகியோர் இந்த விஷயத்தில் மோசமான இயக்குநர்களாக காட்டப்படுகின்றனர். காரணம், இவர்கள் நிறுவன இயக்குநர்களாக செயல்பட்ட காரணத்தில் ஏற்படுத்திய பேரழிவுதான்.
அமெரிக்காவில் பெண்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கு குறைந்த முதலீடுகளே கிடைக்கின்றன. காரணம், பெண்களின் செயற்பாட்டின் மீதான நம்பிக்கையின்மைதான். இதனை 2018 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது. இன்று அமெரிக்காவில் உள்ள 80 சதவீத பெருநிறுவனங்களின் இயக்குநர்கள் ஆண்கள்தான்.
கருவுறுதலுக்கான விடுமுறை, குழந்தைகளின் பராமரிப்பு ஆகியவற்றை தியாகம் செய்தால் மட்டுமே பெண்களுக்கு இயக்குநர் பதவி கிடைக்கும் நிலை உள்ளது. பெண்கள் சமூக அழுத்தம் காரணமாக, மேற்சொன்ன வேலைகளுக்காக விடுமுறை எடுக்கும்போது அவர்களின் பணியில் பெரும் இடைவெளி விழுந்துவிடுகிறது.
இதனால் பெரும்பாலான இயக்குநர்கள் குழுவினர், பெண்களை இயக்குநர்களாக தேர்ந்தெடுப்பதில்லை. பெண்களுக்கு வாய்ப்பளிப்பதில் பல்வேறு குழு அரசியல்கள் உள்ளன. அதனால், கலிஃபோர்னியா மாகாணத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கூட உருவாக்கப்பட்டுள்ளது. இது எந்தளவு பெண்களுக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படி நடவடிக்கை எடுக்குமளவு பெண்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் போதும்.
நன்றி: தி கான்வர்சேஷன்