உள்ளூர் உணவுகள் உடல் நலம் காக்கும்! - புதிய சமையல் புத்தகங்கள்!
சமையல் புத்தகங்கள்
வோல் ஃபுட் லைக்கிங் எவரி டே
1. ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த சமையற்கலைஞர் சாப்ளின், உள்ளூர் பொருட்களைக் கொண்டு சமைத்துள்ளார். மேலும் பால், சர்க்கரை இன்றியும் குளூட்டேன் தவிர்த்தும் ரெசிபிகளை அமைத்துள்ளார். எனவே ஆர்கானிக் ஆன்மாக்கள் தாராளமாக நூலை பிடிஎஃபில் தரவிறக்கி பயன்படுத்தி மகிழலாம்.
குக் லைக் லோக்கல்
2. உங்கள் அருகிலுள்ளவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனவே, உங்கள் சுற்றுவட்டார த்தில் கிடைக்கும் காய்கறிகளைப் பயன்படுத்துங்கள். அது அவர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் உதவும். உங்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார் சமையற்கலைஞர் ஷெப்பர்டு. இவர் இதில் எழுதியுள்ள அனைத்தும் இப்படி சமைக்கப்பட்ட ரெசிபிகள்தான். நூலை இந்தியர்கள் வாங்கினாலும் கூட அதனை உள்ளூர் காய்கறிகள் கொண்டு சமைத்துப் பார்க்கலாம்.
பட்சர் பிளஸ் பீஸ்ட்
இறைச்சி சேர்க்காமல் நாள் முடியாது என அடம் பிடிப்பவர்களுக்கான நூல். அமெரிக்காவில் பீட்ரிஸ் இன் என்ற உணவகம் நடத்தும், ஆன்ஜி மார், பன்றி இறைச்சி, கோழி இறைச்சியில் என்னென்ன செய்ய முடியும் என்று எழுதியுள்ளார். தன் உணவகத்தில் இதனை செய்து காட்டியிருப்பார் என்ற நம்பிக்கையில் என்ற நம்பிக்கையில் நீங்களும் முயலலாம்.
பாஸ்ட்ரி லவ் - பேக்கர் ஜர்னல் ஆஃப் ரெசிபிஸ்
ஜோன்னா சாங்கின் விருது வாங்கிய புத்தகம். பாஸ்ட்ரி செய்வதில் சமர்த்தானவர். எனவே, பேக்கரி ஆர்வம் கொண்டவர்கள் நூலை காசுகொடுத்தேனும் வாங்கலாம். தவறில்லை.
ஜூபிலி
ஆப்பிரிக்க அமெரிக்கன் உணவுகளைக் கொண்டது. மொத்தம் 125 ரெசிபிகள் உள்ளன. முடிந்தால் படித்து சமையல் வகைகளை செய்து ருசி பாருங்கள்.