தற்செயல் என்பதை நம்பலாமா?
ஏன்?எதற்கு?எப்படி? @ மிஸ்டர் ரோனி
தற்செயல் என்பதை நம்பலாமா?
பொதுவாக இதனை நிகழ்தகவு என்ற வகையில் புரிந்துகொள்ளலாம். ஒரே நாளில் சிலருக்கு பிறந்தநாள் வருவது, குறிப்பிட்ட தினத்தில் ஒரே கலரில் டிரெஸ் போட்டு வருவது, ஒரே யோசனையை இருவரும் முன்வைப்பது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதனை எண்கள், நாள், குணம் என தொடர்புபடுத்தாதீர்கள். அது நமக்கு சிக்கலையே தரும். ஒன்றுபோல இரு கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது, ஒரே டிசைன் போன்ற கவுன்களை பெண்கள் அணிந்து ஷாப்பிங் மாலில் சந்திப்பது என்பது தினமும் நாம் பார்த்து வருவதுதானே? ஆனால் தனித்தன்மையை விரும்புபவர்கள் நிச்சயம் தற்செயலாக இப்படி நடப்பதை விரும்ப மாட்டார்கள்.
பிக்பஜாரில் நீங்கள் எடுக்கும் உடையை அதேபோல இன்னொருவரும் எடுத்து அணிந்தால், நீங்கள் அதை ரசிப்பீர்களா? மேலும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் நண்பர்களாக அமைவார்கள். இதை நீங்கள் தற்செயல் என்கிறீர்களா? அப்படி கூறமுடியாதுதானே. எனவே இதனை சோழி போட்டு பார்க்காமல் நமது வேலையை நாம் பார்ப்பதே நல்லது.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்