விமானத்தில் குழந்தைகள் அழுவது ஏன்?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
குழந்தைகள் விமானப்பயணத்தில் அழுவது ஏன்?
சாதாரண குழந்தைகள் முதல் ஆட்டிசக் குழந்தைகள் வரை பஸ், விமானம் என வாகனம் எதுவானாலும் செல்லும்போது மெல்லத் தொடங்கி பயணிகளை உசுப்பி எழவைக்கும் அளவு அழுவார்கள். ஏன்?
காரணம் விமானத்தில் சாதாரணமாக அனுபவிக்கும் அழுத்தம் நம்மாலே பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தைகள் எப்படி தாங்கும். விமானம் உயரத்தில் பறக்கும்போது, காது அடைக்கும். அந்த அழுத்தம் குழந்தைகளுக்கு தனியாக இருப்பது போலத் தோன்றும். இதனால்தான் அழுகை எல்லை மீறுகிறது.
அறிவியல்ரீதியான காரணம், குழந்தைகளின் காதில் உள்ள அமைப்புதான். அஸ்டாசியன் குழாய் எனும் அமைப்பு நம் காதில் உள்ள நடுவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு முழு வளர்ச்சி அடைந்தது அல்ல. வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் இது வேறுபட்ட வளர்ச்சியில் உள்ளது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் பேயர்.
பொதுவாக நாம் பயணிப்பதை மூளை உணர்வது நம் காதில் செல்லும் காற்று மூலமாகத்தான். விமானம் ஏறி இறங்கி 9,100 மீட்டர் உயரத்தில் பறக்கிறது. இது பொதுவான உயரம். இதில் வயதுவந்தோர் காற்றழுத்த த்திற்கு ஏற்றவாறு தம்மை சமாளித்துக்கொள்கின்றனர். ஆனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி இதற்கு ஏதுவாக இருக்காது. எனவே அழுகின்றனர்.
குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? அப்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது, எதையாவது குடிக்க வைப்பது என சமாளிக்கலாம். வயது வந்தோர் சூயிங்கம் மெல்வது என சமாளிக்கலாம்.
நன்றி - லிவ் சயின்ஸ்