இடுகைகள்

டேட்டிங் ஆப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டேட்டிங் ஆப்பில் தீயாய் காதல் வளர்க்கும் இந்தியர்கள்! - இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் காட்டாறாக பாயும் காதல்

படம்
  பம்பிள் டேட்டிங் ஆப் டிண்டர் போன்ற வடிவத்தில் ட்ரூலிமேட்லி ட்ரூலிமேட்லி ஆப் காற்றில் பரவுகிறது காதல் தலைப்பை பார்த்ததும் எங்கே என கேள்வி கேட்க கூடாது. இதெல்லாம் நாமே கற்பனை செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் டேட்டிங் ஆப்களை பயன்படுத்தி தங்களுக்கான காதலை, நட்பை ஆண்களும், பெண்களும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். டிண்டர், பம்பிள், ட்ரூலிமேட்லி, அய்லே ஆகிய டேட்டிங் ஆப்கள் இன்று மிக பிரபலமாகிவிட்டன. காரணம், இவற்றின் வழியாக லட்சக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக 18-23 வயதுப் பிரிவினர் காதலைத் தேடி டேட்டிங் சென்று வருகிறார்கள்.   பெருந்தொற்று காலகட்டம் காதலி, நண்பர்கள் என பலரையும் சந்திக்க விடாமல் செய்தது. இந்த சூழல் பலரையும் மனதளவில் பாதித்தது. அந்த நேரத்தில் உதவியாக இருந்தது இணையமும், அதன் வழியாக அறிமுகமான டேட்டிங் ஆப்களும்தான். ட்ரூலிமேட்லி என்ற ஆப், இந்தியாவில் உருவாக்கப்பட்டது மாதம் 699 தொடங்கி 2,800 வரை காசு கட்டினால் டேட்டிங் அனுபவத்தை சுகமானதாக்குகிறார்கள். அதாவது, நிறைய வசதிகளை பயன்படுத்தி பெண்களைப் பற்றி அறியலாம். பாதுகாப்பு என்ற வகை

சமூகத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம்! - லாரா தத்தா, இந்தி நடிகை

படம்
  லாரா தத்தா ஹைகப்ஸ் அண்ட் ஹூக்கப்ஸ் என்ற வெப் தொடரில் லாரா த த்தா நடிக்கிறார். டிரெய்லரைப் பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். கணவரைப் பிரிந்து வாழும் நாற்பது வயதுப்பெண் வசு. இவருக்கு மகள் டீனேஜில் இருக்கிறார். இந்த நேரத்தில் வசு தனக்கான இணையைத் தேடுகிறார். இதனை அவரது மகள் எப்படிபுரிந்துகொள்கிறார் என்பதுதான் கதை. இயக்குநர் குணால் கோலி.  உங்கள் தொடர் பற்றி பேசுங்கள்? இதுபோல முக்கியமான யாரும் பேசத்தயங்கும் விஷயங்கள் தொடராக வருவது அரிதானது. அம்மாவும் மகளும் டேட்டிங் ஆப் மூலம் தங்களுக்கான இணையைக் கண்டுபிடிப்பதுதான் கதை. இருவரின் உணர்வுகளும் எப்படி உள்ளன, அதனை இருவரும் புரிந்துகொண்டார்களா என்பதுதான் கதை.  இதுபோல ஆப் மூலம் பெண்கள் தவறான ஆண்களிடம் சிக்கிக்கொள்வது நிறைய நடக்கிறதே? நாற்பது வயதான பெண்ணுக்கு இந்த விஷயத்தில் நடைமுறை தெரியும். அவர் ஒன்றும் டீனேஜில் இருப்பவர் அல்ல. நீங்கள் கூறுவது உண்மைதான். நாற்பது வயதுக்கு பிறகு வாழ்க்கையை நாமே வழிநடத்திக்கொள்ள முடியும். இப்படி டேட்டிங் ஆப்பில் கிடைக்கும் உறவுகள் சிலசமயம் சரியாக இருக்கும். சில சமயங்களில் மோசமாகவும் அமையும். இப்படி கிடைக்கும் உறவுகள