இடுகைகள்

மம்தா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட முகங்கள்! - 2021 முகங்கள் புதிது

படம்
  கங்கனா  ரணாவத் மணிகர்ணிகா படத்தில் பொம்மைக் குதிரையில் அபிநயம் பிடித்து தேசப்பற்றில் பொங்கினார். ஆனால் ஷூட்டிங் முடிந்தும் கூட அம்மணியிடம் வைப்ரேஷன் குறையவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கிடைத்தது, அமைதி வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொன்னது, விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாப் பாடகியை முட்டாள் என்று சொன்னது என ஏதாவது உளறி வைத்துக்கொண்டே இருந்தார். இதனால் அவர் பத்ம விருது வாங்கிய செய்தி கூட காணாமல் போனது. தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக அரிதாரம் பூசி நடித்தார். ஆனால் படத்தில் அவருக்கு எதுவுமே சிங்க் ஆகவில்லை என்பதால்,  படம் அப்பளமாய் நொறுங்கியது. நடிப்பை விட வாய்ப்பேச்சால் சமூக வலைத்தளங்களில் வலிமையாக இருந்தார் கங்கனா.  நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். அப்புறம் அவர் வேறு ஏதும் செய்யவேண்டியிருக்கவில்லை. ஏராளமான பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. நூறு ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வாங்க காத்திருந்தோம் என ஊடகங்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் பொங்கின. இந்த நேரத்தில் பாஜக ஐடி ஆட்

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் புழங்கிய வார்த்தைகள் ஒரு பார்வை!

படம்
  2021 ஆம் ஆண்டு திகைப்பு, அதிர்ச்சி, பயம், தைரியம், நம்பிக்கை, நிம்ம்மி என ஏராளமான உணர்ச்சிகளை அடைந்திருப்போம். அதனை இப்போது திரும்பி பார்க்கும் நேரம். அதில் நாம் அதிகம் பயன்படுத்திய சில வார்த்தைகளை இப்போது பார்க்கலாம்.  கேலா ஹோப் மேற்கு வங்கத்தின் அக்கா அதாவது தீதி சொன்ன ஸ்லோகன் இது. சொன்ன மாதிரியே அடித்து விளையாடினார். ஆனால் அவரை தேர்தலில் தோற்றதாக சொல்லி உளவியல் ரீதியான பாதிப்பை பாஜக ஏற்படுத்த முயன்றது. ஆனால் மீண்டும் நடந்த தேர்தலில் தீதி மாஸ் காட்டி வென்று தாமரையை பொசுக்கினார். பாஜகவிற்கு எதிரான போராட்டமாக இப்போது கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் விரிவாக்கி வருகிறார். காங்கிரஸூக்கு மாற்றாக திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. கோவாவில் பாஜகவிற்கு எதிராக இதே ஸ்லோகன் சற்று மாற்றம் பெற்று கேல் ஸட்லோ என்று மாற்றம் பெற்றிருக்கிறது.  டூல்கிட் விவசாயிகளின் போராட்டம், இயற்கையைக் காக்கும் போராட்டம், அதற்கான செயல்முறை, எப்படி போராடுவது என்ற திட்டங்களைத்தான் டூல் கிட் என்று சொல்லுவார்கள். இதனை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற வகையில் பாஜக பார்த்தது. இப்படி தான் செய்வதை எதிர்த்த ப

மக்களுக்காக போராடி அவர்களின் தலைவரான பெண்மணி! - கடிதங்கள்

படம்
  newslaundry அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? மம்தா பற்றிய நூலை படித்து முடித்துவிட்டேன்.  மம்தா பிறந்து வளர்ந்த சூழல், கல்லூரி கால மாணவி, பின்னாளில் தலைவராவது, போராட்டங்கள், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்  என பல்வேறு விஷயங்களை புள்ளிவிவரங்களோடு நூலாசிரியர் எழுதியுள்ளார். மம்தாவே தனது பணிகளைப் பற்றி எழுதியுள்ள நூலை வாங்கியிருக்கலாம் என தாமதமாக நினைத்தேன். வாய்ப்பு கிடைத்தால் அதனை ஆன்லைனில் தான் வாங்க வேண்டும். அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, அதிமுக கட்சியை ஒத்துள்ளதாக படுகிறது. இளமைப் பருவம், அரசியலுக்குள் மம்தா நுழைவது, அரசுக்கு எதிரான போராட்டம் ஆகிய பகுதிகள் படிக்க சுவாரசியமாக இருந்தன. உணர்ச்சிகரமாக மக்களுக்காக போராடியவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானது பெரிய சாதனைதான். தாயிடம் குழந்தை கவன ஈர்ப்பிற்காக சில விஷயங்களை செய்யும் இல்லையா? அதுபோல குணம் கொண்டவர்களை சமாளிப்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் கூறியபடி அனைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வது எனக்கு சாத்தியமாக தோன்றவில்லை. காலையில் குட்மார்னிங் சொல்லவில்லை என்று எனது அலுவலக சகா கோபப்படு

மேற்கு வங்க தேர்தலில் மோடி தோற்றுப்போனது தேசிய அளவில் அவருக்கு பின்னடைவுதான்! - முன்னாள் பிரதமர் தேவேகௌடா

படம்
              முன்னாள் பிரதமர் தேவகௌடா இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டணி மூலம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . இவருக்கு இப்போது 88 வயதாகிறது . மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு இப்போது உழைத்து வருகிறார் . அவரிடம் அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசினோம் . அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் அரசில் எப்படி மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? அன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிறைய கட்சிகள் விலகின . இன்று மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறார் . சிவசேனா கட்சி அவர்களின் கூட்டணியில் இல்லை . காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் பலவீனமாக உள்ளது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி 27 கூட்டணிக் கட்சிகளை ஒன்றாக இணைத்து ஆட்சி நடத்தியது . இனிமேல் அதுபோல இணைப்பு சாத்தியப்படுமா என்று தெரியவில்லை . நான் தேசிய அரசியலில் இருந்து விலகிவிட்டேன் . இப்போது கர்நாடகாவை மட்டுமே கவனித்து வருகிறேன் . நீங்கள் பிரதமராக கூட்டணிக்கட்சிகள் மூலம் பதவியேற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன . உங்களது பதவிக்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? இதுபற்றி முன்னாள் கேபினட் செயலாளர் டிஎஸ்ஆர் சு

மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

படம்
          அமித்ஷா உள்துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே ? சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது . நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன ? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும் . உண்மை என்னவென்றால் , நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது . இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா ? அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான் . அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம் . விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம் .. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள் . விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது . அவர்களுடன் பேசினீர்களா ? நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம் . ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார் . என்ன செய்வது ? நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேச

சுவேந்து அதிகாரியால் பாஜக வெல்ல முடியாது! சௌகதா ரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்

படம்
                சௌகதா ரே திரிணாமூல் காங்கிரஸ் சுவேந்து அதிகாரி வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ? இல்லை . அவர் நந்திகிராமில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் . அங்கு 40 சதவீதம் முஸ்லீம்கள் உண்டு . போனதடவை பெற்ற வாக்குகளை அவர் இம்முறை கட்சி மாறியதால் இழக்கவே வாய்ப்புண்டு . அவருக்கு இது தெரியாதா ? தெரிந்திருக்கலாம் . அவர் மேல் நிறைய குற்றவழக்குகள் உண்டு . அதனால்தான் அவர் அமித்ஷாவில் வலையில் விழுந்துவிட்டார் . உங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக இழுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாஜக பல்வேறு சலுகைகளைக் காட்டி எங்கள் கட்சி ஆட்களை இழுப்பது உண்மைதான் அதில் சுவேந்து முக்கியமானவர் . அவர் ஒரு தலைவராக இங்கு இருந்தார் . மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல . எங்கள் கட்சி ஆட்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் பாஜக கொடுத்துவருகிறது . அதனை நேரடியாக எதிர்கொண்டு கட்சியிலேயே இருக்க நிறைய பேரால் முடியவில்லை . ஐந்து எம்எல்ஏக்கள் ஒரு எம்பி என பாஜ பக்கம் போய்விட்டார்கள் . இது உங்களுக்கு பெரிய இழப்பு இல்லையா ? இவர்கள் யாரும் இத்தேர்தல

தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்

படம்
                  ஜக்தீப் தன்கர் மேற்குவங்க ஆளுநர் மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே ? மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் , உயர்நீதிமன்ற நீதிபதி . அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே ? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே ? நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன் . ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார் . அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார் . இதற்கு உங்கள் பதில் என்ன ? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை . நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்ற